சஞ்சார் சாதி செயலி கட்டாயமல்ல என சிந்தியா தெளிவுபடுத்துகிறார்: தனியுரிமை மற்றும் பயனர் தரவு குறித்து… -சௌம்யரேந்திர பாரிக்


சஞ்சார் சாதி செயலியின் (Sanchar Saathi App) விளக்கம்: சஞ்சார் சாதி என்றால் என்ன, அனைத்து திறன்பேசிகளிலும் இதை நிறுவுமாறு அரசாங்கம் நிறுவனங்களுக்கு ஏன் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்த வகையான தனிப்பட்ட தரவை அது அணுக முடியும்?


இந்திய திறன்பேசி தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் புதிய கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு முன்பு, அவற்றில் சஞ்சார் சாதி என்ற அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு செயலியை நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) கூறியுள்ளது. இந்த செயலியில் பயனர்கள் போலி அழைப்புகள், போலியான செய்திகள் மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகளை குறித்து எளிதாக புகாரளிக்க உதவுகிறது.


பயனர்களால் இந்த செயலியை நீக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கவோ முடியாது என்று தொலைத்தொடர்புத் துறை முன்னதாக நிறுவனங்களுக்குத் தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த செயலியை கட்டாயமாக்குவது குறித்து மக்கள் கவலைகளை எழுப்பியதை அடுத்து, டிசம்பர் 2 அன்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இதை நிறுவுவது பயனரின் விருப்பத்திற்குரியது என்று கூறினார்.


நீங்கள் செயலியை நீக்க விரும்பினால், உங்களால் முடியும். ஆனால் அது கட்டாயமில்லை. உதாரணமாக, நீங்கள் செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிவு செய்யாதீர்கள், அது செயலற்ற நிலையில் இருக்கும்.  நீங்கள் விரும்பினால் அதை நீக்கலாம். டிஜிட்டல் மோசடி மற்றும் திருட்டில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும் இந்த செயலியைப் பற்றி பலருக்குத் தெரியாது. எனவே, அனைவரும் அதை அணுக முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புகிறது என்று சிந்தியா கூறினார்.

அனைத்து புதிய சாதனங்களிலும்  இந்த செயலியை நிருவாவதோடு மட்டுமல்லாமல், மென்பொருள் புதுப்பிப்பு மூலம் ஏற்கனவே விற்கப்பட்ட போன்களில் இதைச் சேர்க்குமாறும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகம் நிறுவனங்களைக் கேட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் உத்தரவு முதலில் Reuters-ல் தெரிவிக்கப்பட்டது. 


தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகம் என்ன சொன்னது


தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு திருத்த விதிகள் (Telecommunication Cybersecurity Amendment Rules) 2025-ன் கீழ் நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சக உத்தரவு, தனியுரிமை மற்றும் கண்காணிப்பு குறித்து மக்கள் கவலைப்பட்டதால் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த உத்தரவு, பயனர்கள் செயலியைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா இல்லையா என்பதில் எந்தக் கருத்தும் கொண்டிருக்கவில்லை என்பதையும், அவர்களின் தொலைபேசியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் அதை நீக்குவதா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது.


இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கைப்பேசிகளையும் அரசாங்க மென்பொருளை இயக்க வேண்டிய ஒரு சாதனமாக மாற்றும், பயனர்களால் மறுக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியாது. இந்த வழியில் செயல்பட, பயன்பாட்டிற்கு ஆழமான கணினி அணுகல் தேவைப்படும். மேலும், பயனர்கள் அதை முடக்க முடியாது. சரியாக வேலை செய்ய, செயலிக்கு ஆழமான கணினி அணுகல் தேவைப்படலாம். எனவே அதை நீக்க முடியாது. இந்த வடிவமைப்பு, செயலிகள் ஒருவருக்கொருவர் தரவை அணுகுவதைத் தடுக்கும் வழக்கமான பாதுகாப்புகளை பலவீனப்படுத்துகிறது என்றும், ஒவ்வொரு இந்திய கைப்பேசிகளிலும் சஞ்சார் சாதி செயலி நிரந்தர, தேவையற்ற அணுகல் புள்ளியாக மாற்றுகிறது என்றும் Internet Freedom Foundation தெரிவித்துள்ளது.


இதை தவிர, தனியுரிமைக் கொள்கை (privacy policy) மற்றும் அது அணுகக்கூடிய பயனர் தரவின் வகை குறித்த கவலைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவையாவது (open-source application testing service) இந்த சிக்கல்கள் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.

அரசு ஆதரவு பெற்ற செயலியை தொலைபேசிகளில் நிறுவுவதை கட்டாயமாக்கும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்திருப்பது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இது அசாதாரணமானது என்றாலும், இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ரஷ்யா சமீபத்தில் தொலைபேசி தயாரிப்பாளர்களிடம் அதன் அரசு ஆதரவு செய்தியிடல் செயலியான MAX-ஐ முன்கூட்டியே நிறுவுமாறு கூறியது. இது WhatsApp-க்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. இது பயனர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


மேலும், 2023ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சட்டம் (Telecommunications Act) இறுதி செய்யப்பட்டபோது, ​​அது இணைய தளங்களுக்கும் பொருந்தக்கூடும் என்று மக்கள் கவலைப்பட்டனர். இது நடக்காது என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், இப்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு விதிகள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன.


சஞ்சார் சாதின் தனியுரிமை கட்டமைப்பு  பற்றி


சஞ்சார் சாதி அணுகக்கூடிய தனிப்பட்ட தரவுகளையும், ஒரு பிரபலமான திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவை அது தேடும் அனுமதிகள் குறித்து எழுப்பியுள்ள எச்சரிக்கைகளையும் இங்கே காணலாம்:


ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்வது அவசியம். மேலும், பயனர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, Android தொலைபேசிகளில் இது தானாகவே நடக்கும்.


பயன்பாட்டின் அம்சங்களைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி சஞ்சார் சாதி செயலியில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். "பயன்பாட்டின்... சேவைகளைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை அடையாளம் காண" பதிவு அவசியம் என்று செயலியில்   ஒரு குறுஞ்செய்தியை தெரிவிக்கும்.


ஆண்ட்ராய்டு சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி தானாகவே பதிவு செய்யும். இது உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து, நீங்கள் எதுவும் செய்யாமலேயே தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகத்திற்கு பதிவுச் செய்தியை அனுப்புகிறது. இருப்பினும், iOS சாதனங்களில், பதிவு செய்தியில் அனுப்பு என்பதை கைமுறையாக அழுத்த வேண்டும்; அது தானாகவே நடக்காது. இந்த வேறுபாடு பயன்பாட்டின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளிலிருந்து வருகிறது.


இந்த உத்தரவு சாதன தயாரிப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில், இதற்கு தொலைபேசியின் இயக்க முறைமையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும். இது அரசாங்க ஆதரவு பெற்ற செயலி என்பதால் மக்கள் தனியுரிமை மற்றும் கண்காணிப்பு குறித்தும் கவலைப்படுகிறார்கள். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் பெரும்பாலும் இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து (Data Protection Act) விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் இதை அரசாங்கம் இணையத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிப்பதாகக் கருதுகின்றனர்.


பயனர்களின் தொலைபேசிகளில் சஞ்சார் சாதி என்ன விதமான தகவலை பெற முடியும்?


Android சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி பின்வரும் அனுமதிகளைக் கோருகிறது:


தொலைபேசி அழைப்புகளைச் செய்து நிர்வகிக்கவும்: தொலைபேசியில் உள்ள மொபைல் எண்களைக் கண்டறிய அனுமதி கோருகிறது.


குறுஞ்செய்தி அனுப்பவும்: தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்திற்கு தானியங்கி செய்தியை அனுப்பி பதிவை முடிக்க வேண்டும்.


அழைப்பு/குறுஞ்செய்தி பதிவுகள்: சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க பயன்பாட்டிற்கு இவை தேவை.


புகைப்படங்கள் மற்றும் கோப்புகள்: தொலைந்து போன/திருடப்பட்ட தொலைபேசிகளைப் புகாரளிக்கும்போது அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது ஆதாரங்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவேற்றத் தேவை.


கேமரா: சர்வதேச மொபைல் உபகரண அடையாளம், அல்லது ஒவ்வொரு தொலைபேசிக்கும் ஒரு தனித்துவமான குறியீடு) இன் பார்கோடை ஸ்கேன் செய்து உண்மைத்தன்மையை சரிபார்க்கப் பயன்படுகிறது.


குறிப்பாக, iOS சாதனங்களில், இந்த செயலி தொலைபேசி அழைப்புகளைச் மேற்கொள்ளவும் அவற்றை நிர்வகிக்கவும் மற்றும் தானாகவே குறுஞ்செய்தி அனுப்பவும் அனுமதி கோருவதில்லை. ஒருவேளை இயக்க முறைமைக்குள் இருக்கும் பாதுகாப்புத் தடுப்புகள் காரணமாக இருக்கலாம். ஆப்பிள் கைப்பேசி சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் கேமராவை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்குகிறது.


சஞ்சார் சாதியின் தரவு சேகரிப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கை


சஞ்சார் சாதி ஆண்ட்ராய்டு செயலியை (.apk கோப்பு) திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவையான மொபைல் பாதுகாப்பு கட்டமைப்பில் (Mobile Security Framework (MobSF)) பகுப்பாய்வு செய்ததில், பல குறியீடுகள் செயலியை பயனர் தரவு தொடர்பான பல பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பதைக் கண்டறிந்துள்ளது.


சஞ்சார் சாதி செயலி கேமராவைப் பயன்படுத்தி படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம், அழைப்புப் பதிவுகளைப் படிக்கலாம், வெளிப்புற சேமிப்பகத்திலிருந்து (நினைவக அட்டைகள் போன்றவை) தரவைப் படிக்கலாம் மற்றும் "இந்த தொலைபேசியின் தொலைபேசி எண் மற்றும் வரிசை எண், அழைப்பு செயலில் உள்ளதா, அழைப்பு இணைக்கப்பட்டுள்ள எண் மற்றும் பலவற்றை தீர்மானிக்கக்கூடிய" தொலைபேசி அம்சங்கள் போன்றவற்வை அணுகலாம். மொபைல் பாதுகாப்பு கட்டமைப்பின் (Mobile Security Framework (MobSF)) பகுப்பாய்வின்படி, இந்த அனுமதிகள் அனைத்தும் "ஆபத்தான" வகையின் கீழ் வருகின்றன.


இந்த செயலியின் தனியுரிமைக் கொள்கையின்படி, முதலில் உங்களிடம் சொல்லாமல் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காது. உங்கள் தரவைக் கேட்டால், அதற்கான காரணத்தை விளக்கி, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும் என்று அது கூறுகிறது. சட்ட அமலாக்கத்தால் தேவைப்படும்போது தவிர, பொது அல்லது தனியார் என எந்த மூன்றாம் தரப்பினருடனும் உங்கள்தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை (personally identifiable information (PII)) பகிர்வதை இந்த செயலி தடை செய்கிறது.


விண்ணப்பம் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கோரினால், தகவல் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தெரிவிக்கப்படும். மேலும், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கொள்கை கூறுகிறது.


இருப்பினும், பயன்பாட்டின் தனியுரிமைக் கொள்கையில் தனியுரிமைக்கான தொழில்துறை தரமாகக் கருதப்படும் சில கூறுகள் இல்லை. எடுத்துக்காட்டாக, பயனர்களின் உரிமைகள் குறித்த வெளிப்படையான அறிக்கை எதுவும் இதில் இல்லை. பயனர்கள் திருத்தம் கோரவோ அல்லது மிக முக்கியமாக, பயன்பாட்டிலிருந்து தங்கள் தரவை நீக்கவோ அனுமதிக்காது. மேலும், விலகல் வழிமுறையும் இல்லை. தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில், அது அணுகக்கூடிய தரவை எவ்வளவு காலம் வைத்திருக்கும் என்பதை தனியுரிமைக் கூறப்பட வில்லை.


ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆப் ஸ்டோர்களில் (app stores), இந்த செயலி எந்த பயனர் தரவையும் சேகரிக்காது என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இந்த செயலி தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி பதிவுகள் போன்ற தனிப்பட்ட தரவை சேகரிக்கிறது.


Original link:

Sanchar Saathi optional, clarifies Scindia: Understanding key concerns around privacy, user data.


Share: