முக்கிய அம்சங்கள்:
— இரத்த உறைவு நோய் (haemophilia) உள்ளவர்களுக்கு நடக்கவோ நகரவோ கடுமையாகச் சிரமம், தொடர்ந்து மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை, எப்போதும் மருந்து-சிகிச்சையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஆகியவை வருவதால் அவர்களது அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஆனாலும், இந்த நோயாளிகளுக்கு இதர மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உரிமைகள் போன்ற சலுகைகள் இன்னும் மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
— 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (Rights of Persons with Disabilities Act (RPwD)) சட்டத்தின் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தவிர அது ஒரு விலக்கு அல்ல' என்று குறிப்பிட்டதுடன், நீண்ட கால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
— இவை முதல் பார்வையில், குழப்பமாகத் தோன்றலாம். ஆனால், இரத்த உறைவு நோய் (haemophilia) , தலசீமியா (thalassaemia) மற்றும் அரிவாள் செல் நோய் (sickle cell disease) ஆகியவை ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் (RPwD) குறிப்பிடப்பட்டுள்ள 21 குறைபாடுகளுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தபோதிலும் செயல்படுத்தலில் என்ன இடைவெளிகள் நீடிக்கின்றன? மேலும், ஏன் கூடுதல் உள்ளடக்கம் தேவைப்படுகிறது? எனவே, தொடர்ந்து விலக்கு அளிக்கப்படுவது முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது:
— இவற்றை நிவர்த்தி செய்ய, இந்தச் சட்டத்தின் பரிணாமம், அதன் நோக்கம், மற்றும் அது முந்தைய மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பரிசீலிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
— ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் முழுமையான பங்கேற்பு மற்றும் சமத்துவம் குறித்த பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்ட உடன்படிக்கையை நிறைவேற்றும் விதமாக மாற்றுத்திறனாளிகள் சட்டம், (RPwD) 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
— இது பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கையை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) 2007-ஆம் ஆண்டு இந்தியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 மூலம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.
— 2016-ஆம் ஆண்டு சட்டம் மூன்று முக்கிய வழிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவை
(i) இது இயலாமை பற்றிய தனிப்பட்ட மருத்துவப் பார்வையிலிருந்து விலகி, சமூக-மருத்துவ மாதிரியை நோக்கி () நகர்ந்தது, இது உடல் குறைபாடுகளை மட்டும் பார்க்காமல், சமூகத் தடைகளே அவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துகின்றன என்று கருதுகிறது.
(ii) இது, 1995ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் இருந்த ஏழு குறைபாடுகளில் இருந்து, விரிவான 21 குறைபாடுகள் கொண்ட ஒரு தொகுப்பாக தகுதியை விரிவுபடுத்துவதன் மூலம், சட்டப் பாதுகாப்பின் எல்லையை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியது.
(iii) ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கைக்கு (UNCRPD) இணங்க ஒரு உரிமைகள் அடிப்படையிலான சொற்களஞ்சியத்தை இது அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நலன்சார்ந்த சொற்களை சமத்துவம், கண்ணியம் மற்றும் முழுமையான பங்கேற்பு ஆகியவற்றின் நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவாதங்களுடன் மாற்றியமைத்தது.
— இந்தச் சட்டம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை, சமூகத்தில் வாழும் உரிமை, வன்முறை மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பு, உள்ளடக்கிய கல்வி, அணுகக்கூடிய வாக்களிப்பு மற்றும் நீதி பெறுவதற்கான அணுகல் உள்ளிட்ட பல உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தாலும், உரிமைகளில் இன்னும் சமநிலை ஏற்படவில்லை.
— இவை, குறிப்பிடப்பட்ட குறைபாடுகளில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு உள்ளவர்கள், அதாவது, நிர்ணயிக்கப்பட்ட அளவிலான குறைபாடுள்ள நபர்களுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். அவர்களுக்கு உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 6 முதல் 18 வயது வரை இலவசக் கல்வி ஆகியவை அவர்களின் உரிமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
— இருப்பினும், அரசு வேலைகளில் உள்ள 4 சதவீத இடஒதுக்கீடு ஐந்து வகைக் குறைபாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்: பார்வை இன்மை மற்றும் குறைந்த பார்வை; காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு; இயக்கக் குறைபாடு; மன இறுக்கம், அறிவாற்றல் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன நோய்; மேலும், செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட மேற்கண்ட வகைகளில் இருந்து எழும் பலவகை குறைபாடுகள் ஆகும்.
— இடஒதுக்கீட்டிற்கு யார் தகுதியானவர்கள் என்பதை உற்று நோக்கினால் மூன்று முக்கியப் பிரச்சினைகள் தெரியவருகின்றன. முதலாவதாக, வெளிப்படையாகத் தெரியும் அல்லது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், குறைவாகத் தெரியும். கணிசமான அளவில் இயலாமையை ஏற்படுத்தும் நிலைகள் தவிர்க்கப்படுகின்றன.
— இரண்டாவது, இடஒதுக்கீட்டு அமைப்பு இன்றும் 1995ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த பழைய ஏழு வகை குறைபாட்டு வகைகளையே பின்பற்றுகிறது. இது 2016ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வந்த விரிவான பட்டியலைப் புறக்கணிப்பதாக உள்ளது.
— மூன்றாவதாக, இது ஒரு கட்டமைப்பு ரீதியான இரட்டைப் பாதிப்பை உருவாக்குகிறது: இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் “மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்” என்று வேலை வாய்ப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு திறந்த நிலை போட்டியில் நியாயமான வாய்ப்பும் கிடைப்பதில்லை, 40% அல்லது அதிக குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons with Benchmark Disabilities (PwBD)) இடஒதுக்கீட்டின்கீழ் எந்த உரிமையும் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
— அந்த வகையில், இந்த வழக்கானது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (RPwD) சட்டத்தின் உரிமைகள் அடிப்படையிலான நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும் — கண்ணியம் மற்றும் சமவாய்ப்பு ஆகியவை ஒரு குறைபாட்டின் வகை அல்லது தெரிவுநிலையைப் பொறுத்தது அல்ல என்பதை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities (IDPD)) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தீர்மானம் 47/3-ஆல் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டது.
— 2006ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை (Convention on the Rights of Persons with Disabilities (CRPD)) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2030ஆம் ஆண்டிற்கான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளைச் செயல்படுத்துவதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
— 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "சமூக முன்னேற்றத்தை முன்னேற்றுவதற்காக மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகங்களை வளர்ப்பது" (“fostering disability-inclusive societies for advancing social progress.”) என்பதாகும். இதன் பொருள், உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நியாயமான, உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான இரண்டாவது உலக சமூக மேம்பாட்டு உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதாகும்.
Original link:
What is the United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)?