பிரதம மந்திரி கிசான் திட்டம் (PM-Kisan) என்பது என்ன? - குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்தின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, ஒன்றிய அரசு இந்தப் பெயர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.


திட்டத்தின் ஆதாரங்களின்படி, கணவன்-மனைவி இருவரும் PM-கிசான் தவணைகளைப் பெற்றதாக குறிப்பிடப்படும் 29.13 லட்சம் பயனாளிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இவற்றில், 19.4 லட்சம் பயனாளிகளின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. அவர்களில் 18.23 லட்சம் பேர் (94 சதவீதம்) கணவன்-மனைவி என உறுதிப்படுத்தப்பட்டு, அக்டோபர் 13, 2025 வரை "தகுதியற்ற" (ineligible) பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


PM-Kisan திட்டம், உழவர்களின் குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாயை மூன்று சம தவணைகளில் தகுதியான உழவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலம் செலுத்தப்படுகிறது.


இதன் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், ஒர் உழவரின் குடும்பத்தை, கணவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு குடும்பமாக வரையறுக்கின்றன. இந்த குடும்பம் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் நிலப் பதிவுகளின்படி சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை வைத்திருக்க வேண்டும்.


PM-Kisan திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, ஓர் உறுப்பினர் மட்டுமே PM-Kisan திட்டத்தின் பலனைப் பெற முடியும் என்று குறிப்பிடுகிறது.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இந்தத் திட்டப்பலன்களைப் பெற்றதாக சுமார் 1.76 லட்சம் பயனார்களை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளன.


சமீபத்திய ஆண்டுகளில், திட்டத்தின் பலன்கள் சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக, ஜனவரி 1 முதல், புதிய PM-Kisan பயனாளிகளைச் சேர்ப்பதற்கு உழவர் அடையாள அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.


உங்களுக்குத் தெரியுமா? 


PM-Kisan திட்டம் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது. PM-Kisan என்பது மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்தியத் திட்டமாகும். இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.


பிரதமர் நரேந்திர மோடி PM-KISAN திட்டத்தின் 20-வது தவணையை வாரணாசியில் இருந்து ஆகஸ்ட் 2, 2025 அன்று வெளியிட்டார். இந்த 20வது சுற்றில், PM-Kisan தொகை நாடு முழுவதும் 9.7 கோடிக்கும் அதிகமான உழவர்களுக்கு மாற்றப்பட்டது.


பிரதம மந்திரி தன் தானிய கிரிஷி யோஜனா (PM Dhan Dhaanya Krishi Yojana (PMDDKY)) மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு இந்தியா திட்டம் (Mission for Aatmanirbharta) போன்ற வேளாண் திட்டங்களை  மொத்தம் 35,440 கோடி ரூபாய் செலவில், பிரதமர் நரேந்திர மோடியால் 11 அக்டோபர் 2025 அன்று தொடங்கப்பட்டது.


பிரதம மந்திரி தன் தானிய கிரிஷி திட்டமானது (PMDDKY), நாட்டின் மிகவும் வளர்ச்சியடையாத 112 மாவட்டங்களில் 2018 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் (Aspirational Districts Programme (ADP)) மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை விரைவாகவும் திறம்படவும் மாற்றுவதே இதன் குறிக்கோள்.


பருப்பு வகைகளுக்கான இந்த திட்டத்திற்கு ₹11,440 கோடி செலவாகும். இது 2025-26 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும். மேலும், 2030-31ஆம் ஆண்டுக்குள் பருப்பு வகைகளின் உற்பத்தி பரப்பளவை 310 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்துதல், உற்பத்தி திறனை 350 லட்சம் டன்களாக அதிகரித்தல் மற்றும் மகசூலை ஹெக்டேருக்கு 1130 கிலோவாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



Original article:

Share: