— இந்தியாவின் புதுமை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருந்து வருவதால், தற்போது செயற்கை நுண்ணறிவை கண்டிப்பாக கட்டுப்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியது. செயற்கை நுண்ணறிவு அபாயங்களை மதிப்பிடுவதற்கு இந்தியாவிற்கு ஒர் தனி அமைப்பை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சம்பவங்களுக்கான தேசிய தரவுத்தளம், தனியுரிமை மற்றும் நியாயத்தன்மை விதிகளை நேரடியாக கணினி வடிவமைப்பில் கொண்டு வருவது போன்ற தொழில்நுட்ப சட்ட நடவடிக்கைகளைப் (techno-legal measures) பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றன.
— இருப்பினும், செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ இணையத்தில் அதிகமாக உள்ளதால், பயனுள்ள "உள்ளடக்கச் சான்றிதழ்" (“content authentication”) வழங்க வேண்டியதன் அவசியத்தை வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கே, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தெளிவாக பெயரிடும் வகையில் சட்டத்தை மாற்ற அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
— வழிகாட்டுதல்களின் அறிமுகம் 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தியா–செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு (India–AI Impact Summit) சில நாட்களுக்கு முன்பு வருகிறது. இது உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடாகும்.
— அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் ஆறு தூண்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன: அவை உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, கொள்கை & ஒழுங்குமுறை, இடர் குறைப்பு, பொறுப்புடைமை மற்றும் நிறுவனங்கள் ஆகும்.
— உள்கட்டமைப்பு: AIKosh போன்ற தளங்கள் மூலம் மானிய விலையில் காட்சி வடிவ செயலாக்க அலகுகள் (graphics processing units (GPUs)) மற்றும் இந்தியா சார்ந்த தரவுத்தொகுப்புகள் உள்ளிட்ட தரவு மற்றும் கணினி வளங்களுக்கான அணுகலை விரிவுபடுத்த இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது. ஆதார் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) உடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. வரிச் சலுகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் இணைக்கப்பட்ட கடன்களுடன், தனியார் முதலீடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
— ஒழுங்குமுறை: இந்தியாவின் அணுகுமுறை திறமையானதாகவும் குறிப்பிட்ட-துறை சார்ந்ததாக இருக்கும். ஏற்கனவே உள்ள சட்டங்களை (தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை) பயன்படுத்தி, இடைவெளிகளை இலக்கு வைத்த திருத்தங்கள் மூலம் குறைக்கலாம்.
— ஆபத்து குறைப்பு: முன்னர் கூறியது போல, அறிக்கை உள்ளூர் உண்மைகளை பிரதிபலிக்கும் இந்தியாவுக்கான குறிப்பிட்ட ஆபத்து மதிப்பீட்டு கட்டமைப்பை முன்மொழிகிறது. தன்னார்வ கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப-சட்ட நடவடிக்கைகளுடன் இதை செய்யலாம்.
— பொறுப்புடைமை: செயல்பாடு மற்றும் ஆபத்து நிலையுடன் பொறுப்பு இணைக்கப்பட்டுள்ள ஒரு தரப்படுத்தப்பட்ட பொறுப்பு முறை முன்மொழியப்பட்டுள்ளது. நிறுவனங்கள் குறை தீர்க்கும் அமைப்புகள், வெளிப்படைத்தன்மை அறிக்கையிடல் மற்றும் சுய-சான்றிதழ் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
— நிறுவனங்கள்: இந்த கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை நிபுணர் குழுவால் (Technology & Policy Expert Committee (TPEC)) ஆதரிக்கப்படும் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தால் (AI Safety Institute (AISI)) தொழில்நுட்ப ரீதியாக ஆதரிக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆளுகை குழு (AI Governance Group (AIGG)) தலைமையிலான முழு அரசாங்க அணுகுமுறையை கற்பனை செய்கிறது.
— திறன் மேம்பாடு: வழிகாட்டுதல்கள் குடிமக்கள், பொது ஊழியர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு அறிவுத்திறன் மற்றும் பயிற்சியை வலியுறுத்துகின்றன. சிறிய நகரங்களில் உள்ள இடைவெளிகளை குறைக்கவும், அரசு நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும் ஏற்கனவே உள்ள திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கின்றன.
— அரசாங்கம் குறைந்தபட்ச விதிகளுடன் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்க விரும்பினாலும், தரவு தனியுரிமை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் உள்ளன. குறிப்பாக, முக்கியமான அரசு அதிகாரிகள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தும்போது அவை தெளிவாக தெரிகின்றன.
— கடந்த மாதம் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கான வரைவுத் திருத்தங்களின்படி, சமூக ஊடக தளங்கள் பயனர்களிடம் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்தகைய அறிவிப்பின் துல்லியத்தை சரிபார்க்க தானியங்கு கருவிகள் (automated tools) அல்லது பிற பொருத்தமான வழிமுறைகள் உள்ளிட்ட “நியாயமான மற்றும் பொருத்தமான தொழில்நுட்ப நடவடிக்கைகளை” பயன்படுத்த வேண்டும்; மேலும், அத்தகைய அறிவிப்பு அல்லது தொழில்நுட்ப சரிபார்ப்பு உள்ளடக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என உறுதிப்படுத்தினால், இந்தத் தகவல் பொருத்தமான அடையாளம் அல்லது அறிவிப்புடன் தெளிவாகவும் முக்கியத்துவமாகவும் காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
— அவர்கள் அதை செய்ய தவறினால், தளங்கள் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திலிருந்து அனுபவிக்கும் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். பயனர் அறிவிப்புகளின் சரியான தன்மையைச் சரிபார்க்கவும், அத்தகைய அறிவிப்பு அல்லது குறிப்பிட்ட பெயர் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் நியாயமான மற்றும் விகிதாசார தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுப்பது அத்தகைய தளங்களின் பொறுப்பாகும்.
உங்களுக்குத் தெரியுமா:
— செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)) என்பது கணினி அறிவியல் துறையாகும். இது கணினி அமைப்புகளை மனிதர்களைப் போல சிக்கலான அமைப்புகளை போல சிந்திக்கவும், பகுத்தறிவு செய்யவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
— செயற்கை நுண்ணறிவை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். அவை: செயற்கை குறுகிய நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)). இது பலவீனமான செயற்கை நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) இது வலுவான செயற்கை நுண்ணறிவு என்றும் அழைக்கப்படுகிறது.