இந்தியாவின் விவசாய முறை மாற வேண்டும். இந்த மாற்றம் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals) ஒன்று 2030-ஆம் ஆண்டிற்குள் பசி, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். இருப்பினும், அதிகரித்து வரும் பிராந்திய போர்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற காரணிகள் மக்களுக்கு உணவு கிடைப்பதை கடினமாக்குகின்றன.
மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காத போது உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் பலரால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கும் போது பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. ஒரு நாடு உணவு தன்னிறைவு பெற்ற நாடக மாற அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய ஒரு நல்ல அமைப்பை உருவாக்க வேண்டும்.
இருப்பினும், போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவை மக்கள் பெற்றாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க தேவையான அனைத்தையும் பெற்றார்கள் என்று கூற முடியாது. பசியற்ற சூழலிலிருந்து நல்ல ஊட்டச்சத்தை உறுதி செய்யும் சூழலுக்கு மாற, பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளின் அதிக விலை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் பல்வேறு குழுக்களிடையே உள்ள உணவு தேவைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நாம் கவனிக்க வேண்டும்.
வாங்கும் திறன் (purchasing capacity) இல்லாமை
உலகளவில் பசி இன்னும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில், உலகளவில் 9.4% மக்கள் அல்லது 757 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இருந்தனர். ஆப்பிரிக்கா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது அந்த கண்டத்தில் 20.4% மக்கள் பசியுடன் உள்ளனர். ஆசியா 8.1%, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 6.2%, ஓசியானியா 7.3% மக்கள் பசியுடன் உள்ளனர். ஆசியாவில் 384.5 மில்லியன் மக்கள் பசியுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், ஆப்பிரிக்காவில், 298.4 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர்.
2030-ஆம் ஆண்டில், உலகின் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பார்கள். பெரும்பாலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் பாதி-நகரப் பகுதிகள் (semi-urban areas) சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆண்களைவிட பெண்கள் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது.
உணவுப் பாதுகாப்பின்மை (food insecurity) பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. மக்கள் போதுமான உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆரோக்கியமான உணவின் விலை மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளில், ஆரோக்கியமான உணவின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. 2022-ல், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 3.96 வாங்கும் திறன் சமநிலை (purchasing power parity (PPP)) டாலர்களை எட்டியது. இருப்பினும், இந்த செலவு பிராந்தியத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, ஆசியாவில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $4.20 ஆக இருக்கிறது.
உலகளவில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாதவர்களின் எண்ணிக்கை 2021-ல் 2.88 பில்லியனில் இருந்து 2022-ல் 2.83 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால், ஏழை நாடுகளில் இன்னும் பலருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. இது 2030-ஆம் ஆண்டிற்குள் பசியை குறைக்கும் இலக்கிற்கு அச்சறுத்தலாக உள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவுகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும். இந்தியா இதை "தாலினோமிக்ஸ்" மூலம் ஆய்வு செய்கிறது.
2011-ஆம் ஆண்டில் கிராமப்புற இந்திய மக்கள்தொகையின் பங்கு உணவுக்காக 100% வருமானம் செலவழித்தாலும்கூட தேவையான உணவின் (cost of a required diet (CoRD)) செலவை வாங்க முடியாமல் 63.3% அல்லது 527.4 மில்லியனாக இருந்ததாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஆரோக்கியமான உணவுகள் அனைவருக்கும் கிடைக்கவும், மலிவு விலையில் கிடைக்கவும் இந்தியாவின் உணவு முறை மாற வேண்டும்.
உணவு வழங்கல் மற்றும் கிடைக்கும் தன்மையை பாதிக்கும் முக்கிய பகுதிகளை வலுப்படுத்துதல். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுகளில் அனைவருக்கும் உறுதி செய்தல் மற்றும் குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஆரோக்கியமற்ற உணவுகள் (Unhealthy diets in India)
இந்திய உணவு முறைகள் பெரும்பாலும் ஆரோக்கியமற்றதாக உள்ளது. அவை EAT-Lancet வழிகாட்டுதல்கள் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரைகளுடன் பொருந்தவில்லை. பல ஏழைகள் ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தெற்காசியாவில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் சராசரி தினசரி வருமானத்தில் 60% ஆரோக்கியமான உணவிற்காக செலவிடுகின்றனர்.
இந்தியாவில் மக்கள் ஆரோக்கியமான உணவு பெறாததற்கு அதிக விலை, ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் தானியங்கள் போன்ற அடிப்படை உணவுகளுக்கு மானியங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், மக்கள் போதுமான ஆரோக்கியமான உணவை உண்ணாததற்கு அதிக விலை மட்டுமே காரணமாக இருக்காது.
இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் ஒப்பிடும் போது, பணக்கார 5% இந்திய குடும்பங்கள் கூட புரதச்சத்து நிறைந்த உணவை குறைவாகவே உண்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. உணவுகள் எளிதில் கிடைப்பது, விழிப்புணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மோசமான தரத்திற்கு மற்ற முக்கிய காரணங்களாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய பட்டினி குறியீடு
உலக அளவிலும், இந்தியாவிலும் நாம் பசியைப் பார்க்கும்போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவை மோசமான தரவரிசையில் உள்ள உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index (GHI)) பற்றி விவாதம் நடந்து வருகிறது. இருப்பினும், இந்த பிரச்சினை அதிக கவனத்தைப் பெறவில்லை. ஏனெனில், GHI பசியைக் காட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால இறப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது. உண்மையான பசி என்பது உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து பிரச்சினைகளை விட அதிகம்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சதுர உணவையாவது உட்கொள்வதையும் இது குறிக்கிறது. எங்கள் கருத்துக்கணிப்புகள் கடந்த 30 நாட்களில் மக்கள் உண்ணும் உணவின் எண்ணிக்கையைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்குகின்றன. தினசரி உட்கொள்ளும் சராசரி உணவைக் காட்டுகிறது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) சமீபத்திய தரவுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 3.2% பேர் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 60 வேளை உணவுகளை சாப்பிடுவதில்லை. இதற்கு நேர்மாறாக, 50%-க்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கிடைக்காதவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, மக்கள் தொகையில் சுமார் 2.5% பேர் இந்தக் குழுவில் உள்ளதைக் காண்கிறோம். 140 கோடி மக்கள் தொகையில், அதாவது 3.5 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய எண்ணிக்கையாகும்.
இந்த ஆண்டு, உலக உணவு தினம், "சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுக்கான உரிமை" (World Food Day this year has the theme ‘Right to foods for a better life and a better future’) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. இந்த கருப்பொருள் பசி இல்லாத உலகின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இந்த உலகில் அனைவருக்கும் உணவு உரிமை உள்ளது. இந்தியாவில், உணவு உரிமைக்கான பிரச்சாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், இன்னும் சிலர் உணவு வாங்க முடியாமல் பட்டினி கிடக்கின்றனர்.
இலவச உணவு வழங்குவதற்கு உணவு வங்கிகளை அமைப்பது நல்ல தீர்வாக இருக்கும். இந்த உணவு வங்கிகள் உணவைச் சேகரித்து முறையாக விநியோகிப்பதன் மூலம் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். இந்த அணுகுமுறை யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த உதவும்.
உணவில் தன்னிறைவு மற்றும் பசியற்ற நாடாக இந்திய மாற வேண்டும். போதுமான உணவு உள்ள பகுதிகள் மனிதாபிமான அடிப்படையில் உணவு கிடைக்காதவர்களுக்கு உதவ வேண்டும்.
எஸ்.இருதயா ராஜன், கேரள மாநிலம் புலம்பெயர்வு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவராக இருப்பவர். யு.எஸ். மிஸ்ரா, கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (ஐஐஎம்ஏடி) கௌரவ வருகை பேராசிரியராக உள்ளார்