19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்திய அரசியலில் சுதேசி மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனைகளில் ஒன்றாகும். ஆனால், பொருளாதாரக் கொள்கைக்கான (economic policy) வழிகாட்டியாக அதன் அனுபவப் பதிவு, பலவீனமாகவே உள்ளது.
அரசாங்கம் இப்போது சுதேசியின் இயக்கத்தின் மீது அதன் கவனம் இரட்டிப்பாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 8-ம் தேதி புதன்கிழமை அன்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜோஹோ மின்னஞ்சலைப் (Zoho Mail) பயன்படுத்தத் தொடங்கிய சமீபத்திய மத்திய அமைச்சரவை உறுப்பினராவார்.
'சுதேசி இயக்கத்தின் கீழ் டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்துதல்' (Strengthening digital sovereignty under the Swadeshi movement) என்ற தலைப்பில் கல்வி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இது "உள்நாட்டு கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவை மேம்படுத்தவும், டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தவும், தற்சார்பு எதிர்காலத்திற்காக தேசிய தரவைப் பாதுகாக்கவும்" அதிகாரப்பூர்வ திட்டங்களுக்கு "உள்ளூர்" (indigenous) என்ற அடையாளமாக ஜோஹோ அலுவலகத் (Zoho Office) தொகுப்பைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனம் (Zoho Corporation), அரசாங்கத்தின் சுதேசி திட்டத்தின் சமீபத்திய பெருநிறுவன பயனாளியாகும். இருப்பினும், கடந்தகால அனுபவங்கள் முக்கியமான பாடங்களை வழங்குகின்றன.
மிக முக்கியமாக, 2020-21 ஆம் ஆண்டில், அரசாங்கம் மோகன்தாஸ் பை நிதியுதவி செய்த கூ (Koo) என்ற மைக்ரோபிளாக்கிங் தளத்தை ட்விட்டருக்கு (இப்போது X) மாற்றாக ஏற்றுக்கொண்டது. ஆரம்ப வெற்றிகரமான பரபரப்பு இருந்தபோதிலும், கூவின் வணிக மாதிரியில் இருந்த அடிப்படை குறைபாடுகளால், கடந்த ஆண்டு அது மூடப்பட்டது.
உண்மையில், கடந்த 150 ஆண்டுகளாக இந்திய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க கருத்தாக்கங்களில் ஒன்றாக சுதேசி இருந்தபோதிலும், பொருளாதாரக் கொள்கைக்கு வழிகாட்டியாக அதன் அனுபவப் பதிவு மாறுபட்டதாகவே உள்ளது. இதோ சுதேசியின் சுருக்கமான வரலாறு மற்றும் அது சுதந்திரத்திற்குப் பிந்தைய பொருளாதாரக் கொள்கையை எவ்வாறு பாதித்தது, பெரும்பாலும் இந்தியாவுக்கு பாதகமாக இருந்தது பற்றி...
ஒரு பொருளாதார யோசனை...
சுதேசி என்ற சிந்தனையானது, பிரிட்டிஷ் ஆட்சியின் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு விமர்சனங்களில் இருந்து அறியப்படுகிறது. ஒன்று, காலனித்துவம் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக அழிவை ஏற்படுத்தியது. இரண்டவது, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நெறிமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் காணப்பட்டது.
முந்தைய விமர்சனம் 1857-ம் ஆண்டின் கிளர்ச்சிப் பிரகடனங்கள் உட்பட 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் மிகவும் நுட்பமான கருத்துக்கள் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தாதாபாய் நௌரோஜி (1825-1917) மற்றும் இரமேஷ் சுந்தர் தத் (1848-1909) ஆகியோரால் முன்வைக்கப்பட்டன. "ஒட்டுமொத்தமாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக தீங்கு விளைவிப்பதாகவும், ஒருவேளை அது வேண்டுமென்றே அவ்வாறு இருந்திருக்கலாம்" என்றும் வாதிட்டனர். இந்த கூற்று, பிபன் சந்திராவின், இந்தியாவில் பொருளாதார தேசியவாதத்தின் எழுச்சி மற்றும் வளர்ச்சி-1966 (The rise and growth of economic nationalism in India) என்ற கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.
இரமேஷ் சுந்தர் தத்தின் "தொழில்மயமாக்கல் ஒழிப்பு" கோட்பாடு (deindustrialisation theory), ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை அழித்து, விவசாயத்தில் “உதவியற்ற சார்புநிலையை” உருவாக்கினர், இது பின்னர் அதிகப்படியான வரிகளால் பாழாக்கப்பட்டது. அவரது கருத்துக்கள், குறிப்பாக இடதுசாரி அறிஞர்கள் மத்தியில், 1970கள் மற்றும் 1980கள் வரை பிரபலமாக நடைமுறையில் இருந்தன. மறுபுறம் தாதாபாய் நௌரோஜியின் "செல்வ சுரண்டல்" கோட்பாடு (drain of wealth theory), இந்திய வரி செலுத்துவோர் எவ்வாறு பிரிட்டிஷ்காரர்களுக்கு தனது சொந்த அடிமைத்தனத்திற்கு திறம்பட பணம் செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டியது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியப் பொருளாதாரத்தின் இந்த பகுப்பாய்வு, சுதேசிக்கான வாதத்தை வலுப்படுத்தின. "இந்தியா மூலப்பொருட்களை வழங்குபவர் மற்றும் பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார் 1903-08 (1973)-ல் வங்காளத்தில் சுதேசி இயக்கம் (Swadeshi Movement in Bengal) என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். இது, "பாரம்பரிய கைவினைப் பொருட்களில் எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதும், நவீன வழிகளில் தொழில்மயமாக்கலுக்கு அழுத்தம் கொடுப்பதும் இந்த சார்பு நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வெளிப்படையான வழிகள் ஆகும்".
… தார்மீக பரிமாணங்களுடன்
1872-ல் பூனாவில் (இப்போது புனே) நிகழ்த்திய தொடர் உரையில், மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) "ஒருவரின் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாட்டு பொருட்களைவிட விலை அதிகமாக இருந்தாலும் அல்லது தரம் குறைவாக இருந்தாலும்கூட சொந்த நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவத்தை," பற்றி பேசினார் (சந்திரா 1966).
சுதேசியைத் தேர்ந்தெடுப்பது ஒரு தார்மீக மற்றும் தேசபக்தி கடமை என்ற நம்பிக்கையாகும். அது பொருளாதார தர்க்கத்திற்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அதன் நீடித்த அரசியல் செல்வாக்கிற்கும், அதன் குறைபாடுகளுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
மகாத்மா காந்தி (1869–1948) சுதேசியை ஒரு தார்மீகக் கொள்கையாகக் கடைப்பிடிப்பதில் மிகவும் வலிமையானவராவர். 1916-ம் ஆண்டு ஒரு உரையில், அவர் அதை "நம்மை நெருக்கமாகச் சுற்றியுள்ளவற்றின் பயன்பாடு மற்றும் சேவையில் மட்டும் கட்டுப்படுத்தி, தொலைவில் உள்ளவற்றை விலக்கும் நம்மிலுள்ள ஆன்மா" (the spirit in us which restricts us to the use and service of our immediate surroundings, excluding the more distant ones) என்று வரையறுத்தார் (எம்.கே. காந்தியின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள், 1922).
காந்தியைப் பொறுத்தவரை, இந்த தார்மீக சக்தியாக அரசியல், மதம் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. கல்வியாளர் சிபி கே.ஜோசப் 2012-ம் ஆண்டு தனது ”காந்தியின் சுதேசி பார்வையைப் புரிந்துகொள்வது” (Understanding Gandhi’s Vision of Swadeshi) என்ற படைப்பில் விளக்கியபடி, அவர் சுதேசியை "சட்டங்களின் சட்டம்" (the law of laws) என்று பார்த்தார். இது மனித இயல்பில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும்.
பொருளாதாரத்தில், எடுத்துக்காட்டாக, சுதேசி என்றால் "ஒருவரின் நெருங்கிய அண்டை வீட்டாரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதைக் குறிக்கிறது" (ஜோசப் 2012). காந்தியின் வாதம் தார்மீகக் கருத்தாக்கங்களிலிருந்து எழுந்தது. “ஒரு தனிநபரின் அல்லது ஒரு தேசத்தின் தார்மீக நல்வாழ்வைப் பாதிக்கும் பொருளாதாரம் ஒழுக்கக்கேடானது, எனவே பாவமானது... மேலும், அமெரிக்க கோதுமையை சாப்பிட்டுவிட்டு, என் அண்டை வீட்டாரான தானிய வியாபாரியை பட்டினியால் வாட விடுவது பாவம்…” என்று அவர் 1921-ல் யங் இந்தியாவில் (Young India) எழுதினார்.
அரசியலில் ஈடுபடுத்துதல்...
சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் புறக்கணிப்பு செய்வதும் மற்றும் அதே நேரத்தில், இந்திய தொழில் உற்பத்தி மற்றும் நிறுவனங்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிப்பதும் சுதேசியின் அரசியல் நிலைகளில் ஏற்பட்டது.
1896-ம் ஆண்டில், பால் கங்காதர திலகர் (1856-1920) பம்பாய் மாகாணத்தில் வெளிநாட்டுத் துணிகளை பொது மக்கள் எரிக்க ஏற்பாடு செய்தார். இது இந்தியத் துணிகள் மீது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலால் வரிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக செயல்பட்டது. ஒரு பத்தாண்டுகாலத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு, சுதந்திரப் போராட்டத்தின் முதல் "தீவிர இயக்கம்" (mass movement), சுதேசி இயக்கமானது. இது கர்சன் பிரபு வங்காளத்தைப் பிரிப்பதற்கு தூண்டப்பட்டது. இந்த இயக்கம் திலகரின் பல முறைகளில் கடன் வாங்கியது, அதில் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதும் அடங்கும்.
வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணிக்கும் செய்தியானது மக்களைத் தெளிவாகச் சென்றடைந்தது. அதாவது, பிரிட்டிஷ் துணியானது விற்பனையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் இது வெளிப்பட்டது. சில கிராமப்புற மாவட்டங்களில், செப்டம்பர் 1904 மற்றும் செப்டம்பர் 1905-க்கு இடையில் அதன் மதிப்பு ஐந்து முதல் பதினைந்து மடங்கு குறைந்தது. இந்த உண்மையை சந்திரா, மிருதுளா முகர்ஜி, ஆதித்யா முகர்ஜி, கே.என்.பன்னிகர் மற்றும் சுசேதா மகாஜன் ஆகியோர் ”இந்திய சுதந்திரப் போராட்டம், 1857–1947” (1989) -ல் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டு பொருட்களைப் புறக்கணிப்பதைத் தவிர, மக்கள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீதிமன்றங்கள், பட்டங்கள், அரசு சேவைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைநிறுத்தங்களையும் புறக்கணித்தனர். நிர்வாகத்தை "சாத்தியமற்றதாக" மாற்றுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும் (சந்திரா மற்றும் பலர், 1989).
தீவிர அரசியலின் காந்திய காலகட்டத்தில், காலனித்துவத்தின் தேசியவாத விமர்சனமானது சாமானிய மக்களிடையே பரப்பப்பட்டது. இதில், "செல்வ சுரண்டல் மற்றும் இந்தியாவை ஆங்கிலேய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகப் பயன்படுத்துதல் மற்றும் இதன் விளைவாக இந்திய கைவினைத் தொழில்களின் அழிவு..." என்ற இரட்டை கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது.
பல வழிகளில், சுதேசி என்பது சுதந்திர இயக்கத்தின் பொதுவான மொழியாக மாறியது. இது வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்களையும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணியில் உள்ள மக்களை ஒரு பொதுவான குறிக்கோளுக்காகப் போராட ஒன்றிணைத்தது.
… மற்றும் கொள்கையில்
சுதேசி என்பது வெளிநாட்டுப் பொருட்களை நிராகரிப்பது மட்டுமல்ல. உள்நாட்டுத் தொழிலை ஆதரிப்பதையும் குறிக்கிறது. இடதுசாரிகள் உட்பட பெரும்பாலான இந்திய தேசியவாதிகள், நாட்டின் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்மயமாக்கல் தேவை என்பதை ஒப்புக்கொண்டனர். இந்தக் கருத்துக்கு காந்தி ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக இருந்தார்.
"நவீன தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டின் முழுமையான பொருளாதார மாற்றத்தின் நோக்கத்தை இந்திய தேசிய இயக்கம் ஆரம்பத்திலிருந்தே ஒருமனதாக ஏற்றுக்கொண்டது” என்று சந்திரா மற்றும் பலர் குறிப்பிட்டிருந்தனர். இந்த இந்தியர்களுக்குச் சொந்தமான நவீன தொழில்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் நலனுக்காக இயக்கப்படும்.
1930-களில், பொருளாதார வரலாற்றாசிரியர் ஆஷிஷ் வெல்கர் குறிப்பிட்டது போல், சுதேசி என்ற கருத்து முதலாளித்துவ கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு ஆதாரமாக மாறியது என்று குறிப்பிட்டார்.
"இந்திய மூலதனம் இந்திய குடிமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து 1930-களில் தேசியவாத சிந்தனைக்குள் ஒரு முக்கியக் கோட்பாடாக நிறுவப்பட்டது. இந்தக் கொள்கையானது சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டமிடல் (post-independence development planning) மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளின் (protectionist policies) மையக் கோட்பாடாகவும் அமைந்தது" என்று வேல்கர் 'காலனித்துவ பாம்பேயில் சுதேசி முதலாளித்துவம்-2020' (Swadeshi Capitalism In Colonial Bombay) என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
சுதேசியின் ஆபத்துகள் (Pitfalls of Swadeshi)
தக்ஷஷிலா நிறுவனத்தின் (Takshashila Institution) இயக்குனரான நிதின் பாய், தனது 2021-ம் ஆண்டு கட்டுரையான ‘சுதேசியின் சுருக்கமான பொருளாதார வரலாறு’ (A Brief Economic History of Swadeshi) என்ற ஆய்வறிக்கையில், "பொருளாதார ஏகாதிபத்தியத்தின் பயம்" ஜவஹர்லால் நேருவின் இந்தியாவை பொதுத்துறைக்கு ஒரு பெரிய பங்கைக் கொண்ட ஒரு கலப்பு பொருளாதார மாதிரியை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது என்றாலும், "கொள்கை கருவியாக இறக்குமதி மாற்றீட்டைப் பயன்படுத்துவது இறுதியில் ஒரு முடிவாக மாறியது" என்று எழுதினார்.
விளைவு : பல காலங்களாக உள்நாட்டு தொழில்துறை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் குறிக்கோளானது பாதுகாப்புவாதம் (protectionism) ஆகும். இந்தப் பாதுகாப்புவாதம், உள்ளூர் முதலாளித்துவவாதிகளை போட்டியிலிருந்து பாதுகாப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பின்மையைக் குறைத்தாலும், இறுதியில் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவித்தது என்று பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
உதாரணமாக, பாதுகாப்புவாதம் இந்திய நிறுவனங்களை போட்டியற்றதாக மாற்றுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தைக் குறைத்தது. மேலும், இது செலவுகளையும் அதிகரித்தது. "உள்நாட்டு நிறுவனங்களை சர்வதேச போட்டியிலிருந்து பாதுகாப்பது நுகர்வோர் மீது அதிக செலவுகளை சுமத்துவதுடன், சேமிப்பு மற்றும் முதலீடு செய்யக்கூடிய உபரியைக் குறைக்கிறது. மேலும், உரிமம் வைத்திருப்பவர்களை பிற பாதுகாக்கப்பட்ட தொழில்களில் பன்முகப்படுத்த உதவுகிறது" என்று நிதின் பாய் குறிப்பிடுகிறார்.
நேருவின் ஆட்சிக் காலத்தில்கூட, சுதேசிக்கு சவால்விட போதுமான சான்றுகள் இருந்தன. ஆனால், அதன் தார்மீக மற்றும் அரசியல் சக்தி இந்த பாதையிலிருந்து விலகிச் செல்வதை கடினமாக்கியது.
"1950களின் பிற்பகுதியிலும் 1960களின் பிற்பகுதியிலும் நாகரீகமாக மாறிய ஏற்றுமதி அவநம்பிக்கையானது, உண்மையான தரவுகளில் பலவீனமான ஆதரவைக் கொண்டிருந்தது மற்றும் கோட்பாடுகளில் பலவற்றைக் கொண்டிருந்தது" என்று மேகநாத் தேசாய் 1999-ல் ஒரு கட்டுரையில் கூறினார். ('உலகமயமாக்கல் உலகில் இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்').
1980-களில்தான், இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைந்து கடுமையான பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொண்டபோதுதான், இந்தியாவில் சுதேசிக்கான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
ஒரு மந்தநிலை மற்றும் மறு எழுச்சி
1991-ம் ஆண்டின் நோக்கமானது, பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறந்த பிறகு, சுதேசி இரண்டு காலக்கட்டங்களாக பின்தங்கியிருந்தது. இந்தக் காலகட்டம் உலகமயமாக்கலின் உச்சக்கட்டமாக இருந்தது. பிரான்சிஸ் ஃபுகுயாமாவால் (Francis Fukuyama) "வரலாற்றின் முடிவு" என்று பிரபலமாக அழைக்கப்பட்டது.
"ஏறக்குறைய இரண்டு தசாப்த காலமாக நீடித்த...அதி-உலகமயமாக்கல்...காலம், உலக வர்த்தக அளவு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அதிகரிப்பை தொடர்ந்து மிஞ்சிய முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியால் குறிக்கப்பட்டது," என்று சமூகவியலாளர் டிபோர் ரூட்டர் ”பால்கிரேவ் சமகால புவிசார் அரசியலின் கையேடு-2024 (Palgrave Handbook of Contemporary Geopolitics) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட 'உலகமயமாக்கலின் எழுச்சி மற்றும் வெளிப்படையான சரிவு' (The Rise and Apparent Decline of Globalization) என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த, மிகை-உலகமயமாக்கல் (hyper-globalization), பழைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்களை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சீர்குலைத்தது. அதே நேரத்தில் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளான சீனா, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வேகமாக அதே நிலைப்பாட்டுடன் வளர்ச்சியடையச் செய்தது. இதனால், 2008-ம் ஆண்டின் நிதி நெருக்கடியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், வளர்ந்த நாடுகளில் பொருளாதார தேக்கநிலை, மற்றும் பொருளாதாரம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான வளர்ந்துவரும் பொதுமக்களின் வெறுப்பும் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தாராளமய-உலகமயமாக்கப்பட்ட (liberal-globalized) அணுகுமுறையை நோக்கி மாறியபிறகு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) 1990-களில் சுதேசியைத் தழுவியது. பொருளாதாரம் குறித்த வலுவான தேசியவாதக் கண்ணோட்டத்தில் வேரூன்றிய RSS-ன் சுதேசியின் செயல் திட்டம், பாஜக ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் வலுப்பெற்றுள்ளது.
பாஜக பெரும்பாலும், அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment (FDI)) விதிகளை தளர்த்துவதை ஆதரித்துள்ளது. இருப்பினும், நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து, அரசாங்கம் அதன் சுதேசி இயக்க உந்துதலை புதுப்பித்துள்ளது. இதன் விளைவாக, அதன் உரைகளிலும், உண்மையான கொள்கைகளிலும் வெளிப்படுகிறது. இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சி (Make in India initiative) மற்றும் தன்னிறைவு இந்தியா (Aatmanirbhar Bharat) உருவாக்குவதற்கான முக்கியத்துவம் ஆகியவை 19-ம் நூற்றாண்டிலிருந்து சுதேசியின் ஆதரவாளர்கள் கொண்டிருந்த கவலைகள் மற்றும் பரிந்துரைகளை எதிரொலிக்கின்றன. ஆனால், கோவிட்-19 தொற்றுநோயின்போது விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் சவாலான உறவால் இந்த உந்துதல் பாதிக்கப்படுகிறது.
கடந்தகால அனுபவங்கள் சுதேசியை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது பின்வாங்கும் என்பதைக் காட்டுகின்றன. நிதின் பாய் குறிப்பிட்டது போல், "பொருளாதார தேசியவாதத்தின் தன்மை சுதேசியைவிட சாமர்த்தியத்தை (திறமை) சுட்டிக்காட்டுகிறது. திறன் என்பது எல்லாவற்றையும் ஒருவரின் சொந்த நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல, திறன் இருந்தாலும் கூட. மாறாக, எங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேவையானதை அணுகும் சக்தியைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.