முக்கிய அம்சங்கள் :
இந்த அசாதாரணமான சம்பவம், வெளிப்படையான கட்டளை இல்லாமல் ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine (RAT)) பயன்படுத்தப்பட்டது. இது போயிங் 787 விமானம் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 விமானம் 260 பேரைக் கொன்ற பேரழிவுகரமான விபத்துக்கு நான்கு மாதங்களுக்குள் இது நடந்தது.
நவீன விமானங்களில், மொத்த மின் செயலிழப்பு (electrical failure), வலுவிழக்கும் ஹைட்ராலிக் செயலிழப்பு (severe hydraulic failure) அல்லது இரட்டை எஞ்சின் செயலிழப்பு (dual engine failure) போன்ற கடுமையான அவசரநிலைகளின் போது ராம் ஏர் டர்பைன் (RAT) தானாகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் மிகவும் அரிதானதாகக் கருதப்படுகின்றன விமானிகள் அதை நேரடியாகக் கையாளும் (manually) முறையை பயன்படுத்தலாம். எனவே, அவசரநிலை இல்லாமல் தற்செயலான தானியங்கி RAT பயன்படுத்தல் மிகவும் அசாதாரணமானது மற்றும் கிட்டத்தட்ட கேள்விப்படாத நிகழ்வு ஆகும்.
இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த வினோதமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தும். இதற்கிடையில், இந்திய விமானிகளின் கூட்டமைப்பு (Federation of Indian Pilots (FIP)) இந்தியாவில் இயங்கும் அனைத்து போயிங் 787 விமானங்களின் மின் அமைப்புகளை ஆய்வு செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தை (DGCA) வலியுறுத்தியது. போயிங் 787 விமானங்களில் மின்சார அமைப்பு சிக்கல்கள் இருக்கலாம் என்று RAT தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுவதாக அவர்கள் வாதிட்டனர். இந்த சம்பவம் அகமதாபாத் விபத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கூறினர்.
RAT என்பது, ஒரு முக்கியமான அமைப்பு, இதன் அடிப்படையில் போயிங்-787-ன் வானுர்தியின் கட்டுமானச் சட்ட (fuselage) அடிப்பகுதியில், விமானத்தின் இறக்கைக்குப் பின்னால் ஒரு பெட்டியில் வைக்கப்படும் காற்றாலை விசையாழி ஆகும். முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்மூலங்கள் ஆதாரங்கள் தோல்வியடையும்போது மட்டுமே மின்சாரத்தை உருவாக்க இது காற்றோட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மொத்த இயந்திரம் செயலிழந்தால் முக்கியமான விமான அமைப்புகளுக்குத் தேவையான சக்தியை வழங்க விமானம் துணை சக்தி அலகுகளுடன் (auxiliary power units (APU)) பொருத்தப்பட்டிருந்தாலும், ராம் ஏர் டர்பைன் (RAT) கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இது, மற்ற அனைத்தும் தோல்வியடையும் போது விமானத்தின் கடைசி அவசர மின் அமைப்பாக இது செயல்படுகிறது.
ராம் ஏர் டர்பைன் (RAT) ஆனது ராம் அழுத்தத்தை (ram pressure) செலுத்துவதன் மூலம் காற்றோட்டத்திலிருந்து ஆற்றலை உருவாக்குகிறது. இது விமானத்தின் முன்னோக்கி இயக்கத்தால் உருவாக்கப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில் விமானத்தின் வேகத்தைப் பொறுத்தது. மொத்த மின்சாரம் செயலிழந்தால், விமானக் கட்டுப்பாடுகள், விமான-முக்கியமான கருவிகள், வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுக்கு RAT உதவுகிறது.
விமானத்தின் ஆற்றல் இழப்பு மற்றும் ராம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தப்படுவதற்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில், குறைந்தபட்ச அத்தியாவசிய கருவிகள் தொடர்ந்து செயல்படுவதை விமானத்தின் மின்கலன்கள் (plane’s batteries) உறுதி செய்கின்றன.
அதிக பயண உயரங்களிலும் அல்லது அதிக விமான வேகத்திலும் ராம் ஏர் டர்பைன் (RAT) குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இது விமானிகளுக்கு விமானத்தின் அத்தியாவசிய அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை இயக்க போதுமான நேரத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது. விமானத்தை அருகிலுள்ள விமானநிலையத்திற்கு நகர்த்த முயற்சிக்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. இருப்பினும், ராம் ஏர் டர்பைன் (RAT) இயந்திர ஆற்றலை மாற்ற முடியாது.
இந்த அவசரகால மின்சார அமைப்பு கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பல பெரிய விமானப் பேரழிவுகளைத் தடுக்க உதவியுள்ளது. RAT உற்பத்தியாளரான காலின்ஸ் ஏரோஸ்பேஸின் கூற்றுப்படி, இந்த விசையாழிகள் “கடந்த ஐம்பதாண்டுகளில் 2,400-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.”
உங்களுக்குத் தெரியுமா?
சிவில் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முழு நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு தன்னாட்சி இல்லாததுதான் ஒழுங்குமுறை ஆணையம் தனது பணியை திறம்படச் செய்யும் திறனுக்கு “ஒற்றை மிகப்பெரிய தடையாக” (single greatest impediment) உள்ளது என்று அது கூறியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ‘சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த மறுஆய்வு’ என்ற அறிக்கையில், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பண்பாட்டு நிலைக்குழு, DGCA (விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்) தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறைப் பணியாளர்களின் “ஆழமான மற்றும் தொடர்ச்சியான” பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பணியாளர் பற்றாக்குறை இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கு “ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக” உள்ளது என்றும் தெரிவித்தது.
மாநிலங்களவை உறுப்பினரும், ஜே.டி.யு., தலைவருமான சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (DGCA) தன்னாட்சி வழங்குவதற்கான காலவரையறை திட்டத்தை பரிந்துரைத்தது.
அறிக்கை மற்ற பிரச்சினைகளுடன், அதாவது குழுவின் அறிக்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (air traffic controllers (ATCO)) பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாட்டாளர்களிடையே சோர்வு ஆகியவற்றை உள்ளடக்கும்.
இந்தியாவில் சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் செயல்பாட்டைக் கையாளும் இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India (AAI)), விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான கடமை நேர வரம்புகளை கடைபிடிக்கவில்லை என்றும் அது விமர்சித்தது.
உடனடிப் பரிந்துரையாக, குழுவானது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான (ATCO) தேசிய சோர்வு இடர் மேலாண்மை அமைப்பை (national Fatigue Risk Management System (FRMS)) உருவாக்குவதற்கும், ஒரு விரிவான பணியாளர் தணிக்கைக்கும் அழைப்பு விடுத்தது.