கொழுப்பு கல்லீரல் (fatty liver) நோய்க்கும் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பின் அளவு உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது
இந்த ஆண்டு சர்வதேச கொழுப்பு கல்லீரல் தினத்தின் கருப்பொருள் "இப்போது செயல்படுங்கள், இன்று சோதனையிடுங்கள்" (“‘Act Now, Screen Today”) என்பதாகும். இது ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைப்பிடிக்கப்படும் விழிப்புணர்வு முயற்சியாகும். இந்த கருப்பொருள் முன்பைவிட இன்று மிகவும் அவசரமானது. கல்லீரல் நோய்கள் முக்கியமாக மது அருந்துவதால் ஏற்படும் என்று மக்கள் நினைத்தார்கள். அதிகப்படியான மது அருந்துவது தீவிர கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, மது அருந்துதல் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஆரோக்கியத்திற்கு (non-alcoholic fatty liver disease) ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகிவருகிறது. கொழுப்பு கல்லீரல் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் ஆபத்து போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இந்த சுகாதார சீர்கேடு இப்போது "வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய்" (“Metabolic dysfunction-associated steatotic liver disease” (MASLD)) என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தில் எவ்வாறு கவனம் செலுத்துகிறோம் என்பதை இது மாற்றியுள்ளது. சோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை முக்கியமானது.
பெருகும் சுமை
கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீட்டோஹெபடைடிஸ், மாஷ் (Metabolic dysfunction-associated steatohepatitis (MASH)), கல்லீரல் அழற்சி மற்றும் வடுக்களை (scarring) ஏற்படுத்தும் ஒரு கடுமையான வகை, நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், (வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீட்டோஹெபடைடிஸ்), 25-30% மக்களை பாதிக்கிறது. இந்தியாவில், 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு பெரியவர்களில் 38.6% ஆகவும், பருமனான குழந்தைகளில் 36% ஆகவும் உள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகக் கொழுப்பு அளவு ஆகியவை அடங்கும். இந்த நிலைமைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் "வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோயின்” (“Metabolic dysfunction-associated steatotic liver disease” (MASLD)) உயர் விகிதங்களைக் கொண்டுள்ளனர்: நீரிழிவு நோய்க்கு 55.5% முதல் 59.7%, உடல் பருமனுக்கு 64.6% முதல் 95% மற்றும் கடுமையான வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு 73%. அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்ற சிக்கல்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களை மோசமாக்குகிறது. உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் கிடைக்கும் போது, செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ள அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ஆனால், தொடர்ந்து அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், அது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. அங்கு செல்கள் இன்சுலினுக்கு குறைவாக பதிலளிக்கின்றன.
இன்சுலின் எதிர்ப்பு உடல் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படும் கூடுதல் குளுக்கோஸை கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இது கல்லீரல் செல்களை கொழுப்பால் நிரப்புகிறது. இதன் விளைவாக கொழுப்பு கல்லீரல் உருவாகிறது. இந்த தொடர்ச்சியான சேதம் இறுதியில் கல்லீரலின் வேலை செய்யும் திறனை பாதிக்கலாம். எளிய கொழுப்பு கல்லீரலில் இருந்து ஸ்டீடோஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற தீவிர நிலைகளுக்கு நகரும். அவை 'வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகளாகும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (liver transplant) தேவைப்படலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில், இவை ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டாது. குறிப்பிடத்தக்க கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, நோய் கண்டறிதல் சில நாட்களுக்கு பின்னர் நிகழ்கிறது. ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது மற்றும் முழுமையான சுகாதாரப் பரிசோதனையை உள்ளடக்கியது: விரிவான வரலாறு, உடல் பரிசோதனை (உயரம், எடை, பிஎம்ஐ, வயிற்று சுற்றளவு மற்றும் இரத்தப் பரிசோதனைகள் (இதயம் மற்றும் இரத்த எண்ணிக்கை, சர்க்கரை போன்ற வளர்சிதை மாற்ற அபாயங்களை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.
அப்பல்லோ மருத்துவமனைகளில், 50,000 பேர் பரிசோதிக்கப்பட்டவர்களில், 33% பேருக்கு அல்ட்ராசவுண்ட் மூலம் கொழுப்பு கல்லீரல் கண்டறியப்பட்டது, ஆனால் 3ல் ஒருவருக்கு மட்டுமே அவர்களின் இரத்தப் பரிசோதனையில் கல்லீரல் என்சைம்கள் அதிகரித்துள்ளன.
இரத்தப் பரிசோதனைகள் இதயம் மற்றும் இரத்த எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகள், கல்லீரல் செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் போன்ற வளர்சிதை மாற்ற அபாயங்களை சரிபார்க்கின்றன. அப்பல்லோ மருத்துவமனைகளில், 50,000 பேரில் பரிசோதிக்கப்பட்டவர்களில், 33% பேருக்கு அல்ட்ராசவுண்ட் மூலம் கொழுப்பு கல்லீரல் கண்டறியப்பட்டது. ஆனால் 3ல் ஒருவருக்கு மட்டுமே அவர்களின் இரத்தப் பரிசோதனையில் கல்லீரல் நொதிகள் அதிகரித்துள்ளன. கல்லீரல் நோயைத் சோதனையிடுவதற்கு வயிற்று அல்ட்ராசவுண்ட் முக்கியமானது மற்றும் கொழுப்புக் கல்லீரலைக் கண்டறிவதில் ஒரு முக்கியமான முதல் படியாகும். இருப்பினும், கதிரியக்க வல்லுநர்களின் வரம்புக்குட்பட்ட இருப்பு மற்றும் கடுமையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் காரணமாக இது பெரும்பாலும் சுகாதாரச் சோதனைகளில் கவனிக்கப்படுவதில்லை.
மேம்பட்ட கல்லீரல் சோதனைகளில் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மதிப்பீடு கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டறியும். அதிர்வு-கட்டுப்படுத்தப்பட்ட நிலையற்ற எலாஸ்டோகிராபி போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இது மிகவும் துல்லியமாக பாதிப்பின் அளவைக் கண்டறிகிறது. இந்த எளிய, ஆக்கிரமிப்பு இல்லாத கருவி கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களை மதிப்பிடுவதற்கு கல்லீரல் இறுக்கத்தை (liver stiffness) அளவிடுகிறது. சிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் பதில்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.
அல்ட்ராசவுண்ட், விரிவான வளர்சிதை மாற்ற சோதனையிடல் மற்றும் எலாஸ்டோகிராபி ஆகிய கருவிகள் ஒன்றாக இணைந்து, கல்லீரல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே திறம்பட கண்டறிந்து நிர்வகிக்க ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குகின்றன.
தனிப்பயனாக்கம் என்பது முக்கியமானது
சோதனைகளின் தேர்வு மற்றும் அவை நிகழ்த்தப்படும் அதிர்வெண் ஆகியவை தனிப்பயனாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த முடிவு குடும்ப வரலாறு, வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே இருக்கும் சுகாதார நிலைமைகள் போன்ற தனிப்பட்ட ஆபத்து காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள் வயது அல்லது உடல் குறிப்பான்களின் அடிப்படையில் மட்டும் பொதுவான நடவடிக்கைகளைச் செய்யக்கூடாது. தொற்றாத நோய்கள் குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட மக்களை அதிகளவில் பாதிக்கின்றன.
பல காரணிகள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எனவே, ஒருங்கிணைந்த உத்திகள் அவசியம். உணவுமுறை மாற்றங்கள், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் கல்லீரல் நோய் அபாயங்களைக் குறைக்க பயனுள்ள எடை மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.
கல்லீரல் ஒரு "அமைதியான உறுப்பு" ஆகும். இது ஒரு மேம்பட்ட நிலையை அடையும் வரை பொதுவாக சேதத்தின் அறிகுறிகளைக் காட்டாது. வாழ்க்கை முறைத் தேர்வுகளின் நீண்டகால தாக்கத்தை புரிந்துகொள்வது அவசியம். நாம் நமது ஆரோக்கியத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் உணவு உட்கொள்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். நல்ல ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.
முருகன் என்., சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் நோய் வல்லுநர் (Hepatologist) மற்றும் மூத்த ஆலோசகர். ஆகாஷ் ராய், கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் நோய் வல்லுநர் (Hepatologist).