'மக்கும் நெகிழிகளை' தடை செய்வதற்கான புதிய விதிகளில் உள்ள குழப்பங்கள் -ஜேக்கப் கோஷிசாகோவ் கோஷி

 மக்கும் பிளாஸ்டிக்குகள். எந்த நுண்நெகிழிகளையும் (microplastics) விட்டு வைக்காமல், மண், நிலப்பரப்பு போன்ற குறிப்பிட்ட சூழலில் உயிரியல் செயல்முறைகளால் சிதைவடையும் திறன் கொண்ட பொருட்கள் என வரையறுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகள், ஒருமுறை தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருட்களை தயாரிப்பவர்களை பாதிக்கிறது. அவர்கள், தங்கள் தயாரிப்புகளை இனி 'மக்கும்' (biodegradable) என்று முத்திரை குத்த முடியாது. அவர்களின் தயாரிப்புகள் நுண்நெகிழிகளை (microplastics) விட்டுச் செல்லக்கூடாது என்று விதி கூறுகிறது.

 

இந்தியாவில் அதிகரித்து வரும் நெகிழிக் கழிவு பிரச்சினையை சமாளிக்க இரண்டு முக்கிய தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன: நுண்ணுயிரிகளால் மட்கக்கூடிய நெகிழி (biodegradable plastic) மற்றும் மட்கக்கூடிய நெகிழி (compostable plastic) ஆகும். நுண்ணுயிரிகளால் மட்கக்கூடிய நெகிழி (biodegradable plastic) தூக்கி எறியப்பட்ட பிறகு காலப்போக்கில் இயற்கையாகவே சிதைந்துவிடும். இந்த நெகிழிகள் சிதைவிற்கு உட்பட்டு சோதனையளிக்கப்படுகின்றன. இருப்பினும், அவை இன்னும் முழுமையாக சிதைந்துவிட்டதா என்பதை நிரூபிக்க எந்த சோதனையும் இல்லை. மட்கும் நெகிழி சிதைந்து போகலாம். ஆனால், அவை தொழில்துறை அல்லது பெரிய கழிவு மேலாண்மை வசதிகளில் பதப்படுத்தப்பட வேண்டும்.


நுண் நெகிழி பயன்பாடு இல்லை


இந்தியா தனது நெகிழி கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள் (India’s Plastic Waste Management (Amendment) Rules) 2024 இல் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்த புதிய திருத்தங்கள், கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்டன, மக்கும் பிளாஸ்டிக்குகள் “... மண், நிலப்பரப்பு போன்ற குறிப்பிட்ட சூழலில் உயிரியல் செயல்முறைகளால் சிதைவடையும்...” என்று வரையறுக்கிறது. முக்கியமாக, எந்த நுண் நெகிழியையும் விட்டுவிடக்கூடாது. சிம்பொனி சுற்றுச்சூழல் இந்தியாவின் (Symphony Environmental India) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பன்வார் புதிய விதிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினார். ஒரு தயாரிப்பானது, நுண்ணிய நெகிழிகளை விட்டு வெளியேறவில்லை என்பதை நிரூபிக்க எந்த வேதியியல் சோதனைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. நுண் நெகிழிகளில் பயன்பாடுகளில் எவ்வளவு குறைப்பு தேவை என்பதையும் அவர்கள் கூறவில்லை. மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை மக்கும் தொழில்நுட்பத்துடன் சிம்பொனி சுற்றுச்சூழல் (Symphony Environmental) நிறுவனம் வழங்குகிறது.


"சுற்றுச்சூழலில் நுண் நெகிழியின் பல ஆதாரங்கள் உள்ளன. அது நீர், மண், உரம் தயாரிக்கும் வளங்கள் மூலம் வரலாம். தற்போதைய தரநிலைகள் அடிப்படையில், இந்தியாவில் நுண் நெகிழியின் அளவைக் கண்டறிய செய்யக்கூடிய சோதனைகளை மட்டுமே பரிந்துரைக்கின்றன. ஆனால், அதற்கான ஒரு உறுதியான சோதனையை பரிந்துரைக்கவில்லை... நுண்ணிய நெகிழிற்கான தரநிலை இறுதியில் தீர்மானிக்கப்பட வேண்டுமானால், அது நியாயமாக அளவில், மக்கும் பொருட்கள் மற்றும்  மக்கும் நெகிழிகள் இரண்டையும் சேர்க்க வேண்டும்” என்று அவர் தி இந்துவிடம் தெரிவித்தார்.


ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்குத் (single-use plastic) தடை


நுண் நெகிழிகள் (Microplastics) என்பது சிறிய நெகிழித் துகள்கள். அவற்றை தண்ணீரில் கரைக்க முடியாது. அவை, 1 μm முதல் 1,000 μm வரை இருக்கும். அவை, ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை (single-use plastic) மத்திய அரசு தடை செய்த பிறகு, மக்கும் நெகிழியானது பயன்பாட்டில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து தி இந்து மார்ச் 2023 இல் செய்தி வெளியிட்டது. மக்கும் நெகிழியைப் பயன்படுத்த அவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மக்கும் நெகிழி (biodegradable plastic) என்றால் என்ன என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Central Pollution Control Board (CPCB)) இருந்து 'தற்காலிக சான்றிதழ்' (provisional certificate) பெறாததால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் தயாரிப்புகளை மக்கும் தன்மை கொண்டவை என்று உரிமம் பெற இந்த சான்றிதழ் அவசியம். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்  அவர்களுக்கு சான்றிதழை வழங்கவில்லை. ஏனெனில், பயன்பாட்டில் உள்ள நெகிழியில் 90% சிதைந்துவிட்டால் மட்டுமே மக்கும் தன்மை கொண்டது என்று ஏற்றுக்கொள்கிறது. இந்த சிதைவடையும் நெகிழியின் செயல்முறை குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆக வேண்டும். தங்கள் மாதிரிகள் 45 நாட்களில் 5% சிதைந்துவிட்டன என்பதை நிரூபித்த உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. அத்தகைய சான்றிதழிற்கு எவ்வளவு மட்கும் தன்மை (degree of degradation)  தேவைப்படும் என்பதை விதிகள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.




Original article:

Share: