நீண்ட நெடிய தொடர்புகளின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளும் தொடர்ந்து வளர்ந்து வருவதிலும், புதுமைகளை உருவாக்குவதிலும் உறுதியாக உள்ளன.
ஷேக் காலித் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வந்தார். இது அவருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் -இந்தியா உறவுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக இருந்தது.
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிப்ரவரி 2016-ஆம் ஆண்டு மற்றும் ஜனவரி 2017-ஆம் ஆண்டில் அபுதாபியின் இளவரசராகவும், செப்டம்பர் 10, 2023 அன்று ஐக்கிய அரபுஅமீரகம் தலைவராகவும் இந்தியாவிற்கு பயணம் செய்தார். . இந்த பயணத்தின் போது, மகாத்மா காந்தியின் நினைவாக ராஜ்காட்டில் ஒரு மரத்தை நட்டார். இது 2016-ஆம் ஆண்டில் அவரது தந்தை ஷேக் முகமது பின் சயீத் மற்றும் அவரது தாத்தா ஷேக் சயீத் 1992-ஆம் ஆண்டில் தொடங்கிய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது.
முப்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறை தலைவர்களால் நடப்பட்ட இந்த மூன்று மரங்களும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவை அடையாளப்படுத்துகின்றன. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மிகவும் வித்தியாசமாக இருந்தாலும், இந்தியா பரப்பளவில் சுமார் 40 மடங்கு பெரியது மற்றும் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. இரு நாட்டின் உறவுகளும் உறவுகள் மிகவும் ஆழமானவை மற்றும் நீடித்தவை.
ஒவ்வொரு ஐக்கிய அரபு அமீரக குடிமகனுக்கும், 1,000க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் உள்ளனர். நமது பொருளாதாரங்கள் வெவ்வேறு பலங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால், ஐக்கிய அரபு அமீரக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%-க்கும் குறைவாக உள்ளது. இரு நாடுகளும் 20-ஆம் நூற்றாண்டில் நவீன நாடுகளாக மாறினாலும், நமது வரலாறுகளும் ஆட்சி முறைகளும் மிகவும் வேறுபட்டவை.
இருப்பினும், நாடுகளுக்கிடையேயான சிறந்த உறவுகள் ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட பலம் மற்றும் வேறுபாடுகளுடன் இணைந்து, பகிரப்பட்ட நலன்கள் மற்றும் மதிப்புகளிலிருந்து வருகின்றன.
ஆழமான தொடர்புகள், மக்கள் மற்றும் முன்னேற்றம்
ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா உறவின் வெற்றி, தனித்துவ சார்ந்த முறை, அதன் பிணைப்பு, மற்றும் பல தலைமுறைகளாக கட்டமைக்கப்பட்ட உறவு, நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் வலுவான அடித்தளத்திலிருந்து வருகிறது.
இந்த குணங்கள் பல தலைமுறைகளாக மனித தொடர்புகளில் வளர்ந்துள்ளன. மரங்கள் வளரவும் நிலையாக இருக்கவும் வலுவான வேர்கள் தேவைப்படுவது போல, நாடுகளின் கூட்டாண்மை வெற்றிகரமாக இருக்க இந்த குணங்கள் தேவை.
எப்போதும் மக்கள் மற்றும் முன்னேற்றம் பற்றிய உறவு.
அரேபிய வளைகுடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. மக்கள், கடல் கடந்து பயணம் மேற்கொள்கின்றனர். அபுதாபியில் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகங்களுடன் தொடர்புடைய மட்பாண்டங்களைக் காட்டுகின்றன. கடந்த காலங்களில், பல அமீரக மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு பயணம் செய்கின்றனர். இன்று, மற்ற சிகிச்சைகளை முயற்சிக்கும் முன் குழந்தைகளின் பொதுவான நோய்களுக்கு இந்திய ஹோமியோபதி மருந்தையும் பயன்படுத்துகிறது.
வெளிநாட்டுச் சமூகத்தின் பலம்
ஐக்கிய அரபு அமீரகம் 3.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களைக் கொண்டுள்ளது. இது நம் நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகமாகும். சகிப்புத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான தலைவர்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. பொருளாதாரத்தின் வலிமை மற்றும் துடிப்புக்கு இந்திய நாட்டினரின் பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு வாரமும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன என்பதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான தொடர்பு தெளிவாகிறது.
ஒரு உறவு மரியாதை மற்றும் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்கான உண்மையான விருப்பத்தின் மீது கட்டமைக்கப்படும்போது, எதை அடைய முடியும் என்பதற்கு வரம்புகள் இல்லை. பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் முதல் நாடாக இந்தியா கையெழுத்திட்டது.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் ஆண்டுகள் பெரிய வேறுபாடுகள் காரணமாக கைவிடப்படலாம். இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நம்பிக்கை மற்றும் பிணைப்பு காரணமாக ஆறு மாதங்களுக்குள் கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டோம். ஒப்பந்தத்தின் முதல் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் 15%- அதிகரித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஷேக் கலீத் சமீபத்தில் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் வெளிநாட்டு கிளையான டெல்லி அபுதாபி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நமது நாடுகளுக்கும், உலகிற்கும் இன்றியமையாத சுகாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கிய தலைப்புகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இளவரசரின் வருகையின் போது, சிவில் அணுசக்தி தொழில்நுட்பம் உட்பட கூடுதல் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். இது எமிரேட்ஸுக்கு உள்நாட்டு வெற்றியாகும். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது.
ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பாலைவன நாட்டிற்கு சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய அணு உப்புநீக்கம் குறித்த இந்தியாவின் ஆராய்ச்சி முக்கியமானது. பசுமை எரிசக்தி உற்பத்தி, மருத்துவ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் கூட்டணி எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே.
செழிக்கும் உறவுகள்
தனது தாத்தாவைப் போலவே, ஷேக் காலித் காசியா ஃபிஸ்துலா என்ற அமல்தாஸ் மரத்தை நட்டார். அவரது தந்தை ஷேக் முகமது பின் சயீத், மௌல்சாரி மரத்தை (மிமுசோப்ஸ் எலெங்கி) நட்டார். அமல்டாஸ் மரம் விரைவாக வளர்கிறது. இது வாய்ப்பு மற்றும் புதுப்பித்தலைக் குறிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இந்திய இடையேயான ராஜதந்திர கூட்டாண்மை தொடர்ந்து வளர்த்து வரும் நிலையில், இந்த வெவ்வேறு மரங்களின் பண்புகள் நமது அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன.
இரு நாடுகளின் பரஸ்பர உறவு மற்றும் நீண்ட வரலாற்றை ஏற்க வேண்டும். ஆனால் ஒன்றாக வளரவும் புதுமைகளைப் புகுத்தவும் உறுதி கொள்ள வேண்டும். இது இரு நாடுகளின் கூட்டாண்மையை புதுப்பிக்கவும், வெற்றிபெற புதிய வழிகளைக் கண்டறியவும் உதவும்.
ரீம் அல் ஹாஷிமி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச ஒத்துழைப்புக்கான (State for International Cooperation and the UAE) இணை அமைச்சர் மற்றும் இந்தியக் குடியரசுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிறப்பு தூதர்.