மூன்று அதிர்ச்சிகளுக்குப் பிறகு, 7 ஆண்டுகளில் முறைசாரா துறையில் 16.45 லட்சம் வேலைகள் இழப்பு - ஆஞ்சல் மேகஜின்

 2015-16-க்குப் பிறகு முதல் முறையாக, இணைக்கப்படாத நிறுவனங்களின் வளர்ச்சியில், மூன்று பெரிய வெளிப்புற காரணிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி இந்த தரவு சுட்டி காட்டுகிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை மூன்று முக்கியமான காரணிகளாகும் .


முறைசாரா துறையில் (informal sector) தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2022-23-ல், இது 10.96 கோடியாக இருந்தது. இது 2015-16-ல் 11.13 கோடியாக இருந்ததை விட 16.45 லட்சம் அல்லது சுமார் 1.5-சதவீதம் குறைவாகும். இந்தத் தகவல் 2021-22 மற்றும் 2022-2-3க்கான முறைசாரா நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பில் (Annual Survey of Unincorporated Enterprises (ASUSE)) கண்டறியப்பட்டது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation  (MoSPI)) இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டது. 


மூன்று முக்கிய நிகழ்வுகள் முறைசாரா நிறுவனங்களை எவ்வாறு பாதித்தன என்பதைக் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகள் நவம்பர் 2016-ல் பணமதிப்பிழப்பு, ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம், மற்றும் மார்ச் 2020-ல் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை இந்த பாதிப்பிற்கு முக்கியமான காரணிகளாகும். இந்த தரவு இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றில் வேலைவாய்ப்பு மீதான தாக்கத்தைக் காட்டுகிறது.


2021-22 மற்றும் 2022-23-க்கான முறைசாரா நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு முறைசாரா நிறுவனங்களில் அதிகரிப்பையும் காட்டியது. அவற்றின் எண்ணிக்கை 16.56 லட்சம் அதிகரித்தது. இது 2015-16-ல் 6.33 கோடியில் இருந்து 2022-23ல் 6.50 கோடியாக உயர்ந்தது.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கோவிட்-19  ஆகிய மூன்று அதிர்ச்சிகள்  முறைசாரா துறையை கடுமையாகப் பாதித்தன. 


பணமதிப்பிழப்பு: இது திடீரென பெரும்பாலான பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கியது. பண பரிவர்த்தனையை பெரிதும் நம்பியிருக்கும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சரக்கு மற்றும் சேவை வரி, இந்த புதிய வரி முறை பல சிறு வணிகங்களை முதல் முறையாக முறையான வரி முறைக்குள் கொண்டு வந்தது. புதிய, சிக்கலான விதிகளைப் பின்பற்றவும் நிர்பந்திக்கப்பட்டனர்.  கோவிட்-19: தொற்றுநோய் தாக்கத்தின் போது, அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது இது பல சிறு வணிகங்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. பல சிறிய, பதிவு செய்யப்படாத வணிகங்களை உள்ளடக்கிய முறைசாரா துறை, இந்த மாற்றங்கள் மற்றும் சவால்களை சமாளிக்க மிகவும் போராடியது.  


இந்தியாவின் முறைசாரா துறை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட முதல் பத்து மாநிலங்களில், மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் 2015-16 மற்றும் 2022-23க்கு இடையில் முறைசாரா வேலைவாய்ப்பில் அதிகரிப்பைக் கண்டன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த காலகட்டத்தில் முறைசாரா துறை தொழிலாளர்களில் சரிவைக் கண்டன.  இந்த ஐந்து மாநிலங்கள் அனைத்து முறைசாரா தொழிலாளர்களில் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


2015-16 உடன் ஒப்பிடும்போது 2022-23-ல் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முறைசாரா துறை ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை கண்ட போதிலும். தொற்றுநோய்க்குப் பிறகு சூழல் மாறியது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒப்பிடக்கூடிய புள்ளிவிவரங்கள் இல்லை. இது பொருளாதார நெருக்கடியையும், முறை சார்ந்த துறையில் இருந்து முறைசாரா துறைக்கு சாத்தியமான மாற்றத்தையும் குறிக்கிறது. 


உத்தரப் பிரதேசத்தின் முறைசாரா துறை தொழிலாளர்கள் 2015-16-ல் 1.65 கோடியில் இருந்து 2022-23-ல் 1.57 கோடியாகக் குறைந்தது. எனினும், இது 2021-22-ல் 1.30 கோடியில் இருந்து அதிகரித்தது. மேற்கு வங்காளத்தின் முறைசாரா துறை தொழிலாளர்கள் 2015-16ல் 1.35 கோடியில் இருந்து 2022-23ல் 1.05 கோடியாகக் குறைந்தது. இது 2021-22ல் 1.02 கோடியில் இருந்து சிறிதளவு அதிகரித்தது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை 2022-23-ல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இரண்டிலும் முறைசாரா துறை நிறுவனங்களில் அதிக பங்கைக் கொண்டிருந்தன.  


பாரத ஸ்டேட் வங்கி, தனது ஆராய்ச்சி அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கியின்   மூலதனம், தொழிலாளர்,  ஆற்றல், பொருள் மற்றும் சேவைகள், (K (capital), L (labour), E (energy), M (material) and S (services)- (KLEMS)) தரவு மற்றும் இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு வேலைவாய்ப்பு எண்கள் பரவலாக ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டுள்ளது. நிதியாண்டு 2014-2023-ன் ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் தொழில் மற்றும் சேவைகளில் சுமார் 8.9 கோடி வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்பட்டதாகத் தரவுகள் காட்டுகின்றன. 


இந்தியாவின் பொருளாதாரத்தில் அமைப்புசாராதுறை (unorganised sector) குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்டதிற்கு (Gross Value Added (GVA)) 44 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. இது விவசாயம் அல்லாத நிறுவனங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 


வேலைப் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு விவசாயம் அல்லாத துறை நிறுவனங்களின் தரவு முக்கியமானது. வேலைகளை உருவாக்குவதற்கும் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கும் முறைசாரா துறை முக்கியமானது, குறிப்பாக முறையான துறையில் (formal sector) மந்த நிலை ஏற்படும்  போது இது போன்ற தரவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.



Original article:

Share: