நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளுக்கு வெளியே மாநிலங்கள் சிறப்பு தொகுப்புகளைப் பெற வேண்டுமா? - பிரசாந்த் பெருமாள் ஜே

 பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் சிறப்பு நிதித் தொகுப்புகளுக்கான (special financial packages) கோரிக்கைகளை இக்கட்டுரை விவாதிக்கிறது. இந்த கோரிக்கைகள் மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கக்கூடும். நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளுக்கு வெளியே மாநிலங்கள் சிறப்புத் தொகுப்புகளைப் பெற வேண்டுமா? என்று கட்டுரை கேள்வி எழுப்புகிறது. அருண் குமார் மற்றும் பினாகி சக்ரவர்த்தி இதைப் பற்றி விவாதிக்கின்றனர்.


நிதி ஆணையம் எதன் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது? பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஆணையம் மூலம் ஒதுக்கப்படுவதைத் தாண்டி நிதியைப் பெறுவதற்கான நிர்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?


அருண் குமார் : கடந்த நிதி ஆணையம், வகுக்கக்கூடிய வரித் தொகுப்பில் (divisible tax pool) மாநிலங்களுக்கு 41% வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த 41%க்குள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன கிடைக்கும்? வருமானம், மக்கள் தொகை, பரப்பு, காடுகள் மற்றும் சூழலியல், மக்கள்தொகை செயல்திறன் (demographic performance) போன்றவற்றின் அடிப்படையில் ஒரு திட்டம் தீர்மானிக்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில் 15-வது நிதிக் குழுவினால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு அதிக அளவு நிதி கிடைத்துள்ளது. அதே சமயத்தில், கர்நாடகா மற்றும் கேரளா நிதி பங்கில் மிகப்பெரிய சரிவைக் கண்டன. எனவே, வேறுவிதமாகக் கூறினால், நிதி ஆணையம் பயன்படுத்தும் அளவுகோல்களின் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் நிதியின் அளவை மாற்றலாம். 


நிதி ஆணையத்தின், அதிகாரப் பகிர்வு என்பது சட்டப்படி கட்டாயமாகும். இது தவிர, மாநிலங்களுக்கு மீதம் வழங்கக்கூடிய நிதியை மத்திய அரசு முடிவு செய்யும். இங்குதான் அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசுக்கு நெருக்கமான மாநிலங்கள் அதிக நிதியைப் பெறுகின்றன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. அவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு முக்கியமானது. இதனால், அவர்களுக்கு அதிக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.


பினாகி சக்ரவர்த்தி : நிதி ஆணையப் பரிமாற்றங்கள் விருப்புரிமைக்கு மிகக் குறைந்த அளவே உள்ளன. பிற மத்திய நிதி பரிமாற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே சில விநியோகத்தின் குறிப்பிட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. திட்டங்கள் மற்றும் அவற்றின் வடிவமைப்புகளை நாம் விவாதிக்கலாம். ஆனால், அவை தன்னிச்சையானவை அல்ல. இது நிதி பரிமாற்றங்களுக்கான ஒட்டுமொத்த கட்டமைப்பாகும்.


ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதிக வளங்களை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட மாநிலத்தால் ஒரு குறிப்பிட்ட கோரிக்கை இருக்கும்போது, ​​அந்த மாநிலத்திற்கு அதிக நிதி வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை. இது பொதுவான நடைமுறையாக மாறினால், நிதி விவேகம் பாதிக்கப்படும். எனவே, பெரிய அளவிலான விருப்பமான நிதி பரிமாற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.


நிதி ஆணையம் வருவாய் பற்றாக்குறை மானியங்களை வழங்கியது. ஆந்திரப் பிரதேசத்தின் மத்திய ஆதரவு தேவை கவனமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. பீகாரின் நிலைமை வேறுபட்டது. அதன் தனிநபர் மேம்பாட்டுச் செலவு (per capita development spending) அனைத்து மாநிலங்களின் சராசரியில் 60% க்கும் குறைவாக உள்ளது. பீகாருக்கு கடுமையான நிதித் திறன் பிரச்சினை உள்ளது. நிதி ஆணைய பரிமாற்றங்கள் மற்றும் கூடுதல் மத்திய நிதி ஒதுக்கீடுகள் இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்கவில்லை. 


கூடுதல் மத்திய நிதி உதவிக்கும், மாநிலங்களின் பொருளாதார செயல்திறனுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அதன் நீண்டகால பொருளாதார செயல்திறனை அதிகரிக்குமா? 


அருண் குமார் : ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் பங்கு வகிக்கின்றன. மத்திய அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகள் பெறுவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடும். நிர்வாக ஆளுமை ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது வளர்ச்சிக்காக வளங்கள் எவ்வளவு நன்றாக செலவிடப்படுகின்றன என்பதை பாதிக்கிறது. குறைந்த பொருளாதார உள்ள மாநிலங்களில் பெரும்பாலும் நிதி கசிவு அதிகம். பீகாரின் கடன்-வைப்பு விகிதம் (credit-deposit ratio) தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இதன் பொருள் பீகாரின் சேமிப்புகள் பிற மாநிலங்களுக்கு செலவிடப்படுகின்றன. மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி கிடைத்தாலும், நிதிக்கசிவு கூடுதல் வளங்களை விட அதிகமாக இருக்கலாம்.   


பினாகி சக்ரவர்த்தி : நிதி ஆணையத்தின் வரம்புக்கு அப்பாற்பட்ட வருவாய் பகிர்வு அதிகரித்துள்ளது. இது மத்திய நிதியுதவி திட்டங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இதைப் பற்றி விவாதிக்க ஒரு பெரிய அரசியல் பொருளாதார கேள்வி உள்ளது. நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் பகுதிகளுக்கு நிதிப்பகிர்வு குறைவான வருவாய் ஈட்டும் பகுதிகளை விட மிக அதிகமாக உள்ளது. இதை நிர்வாக ஆளுமை வேறுபாடுகளால் மட்டும் விளக்க முடியாது. சில மாநிலங்கள் அனைத்து மாநிலங்களின் சராசரியில் 50% மட்டுமே பொது செலவினமாக செலவிடுகின்றன. இதற்கு நிர்வாகம் மற்றும் செலவின தர வேறுபாடுகள் மட்டுமே காரணமல்ல. பிந்தங்கிய பகுதிகளில் மூலதன முதலீட்டிற்கு அதிக வளங்களை வழிநடத்த வேண்டும். இது சமச்சீரான பிராந்திய வளர்ச்சியை அடைய உதவும்.

 

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax(GST)) குடிமக்களுக்கு வரி விதிக்கும் திறனை நீக்கி, மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைப் பெறுவதற்கு மாநிலங்களுக்கு இடையே போட்டியை அதிகரித்துள்ளதா? ஜிஎஸ்டி வரி விதிப்பை மையப்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு இடையே வரிக்கான போட்டி இல்லை. இது நல்லதா கெட்டதா? என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். 


பினாகி சக்ரவர்த்தியின் : 2000-01 ஆம் ஆண்டில் மாநிலங்கள் விற்பனை வரிக்கு ஒரு குறைந்தபட்ச விகிதத்தை அறிமுகப்படுத்தின. மாநிலங்கள் தங்கள் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு கூட்டு வரி (Value Added Tax (VAT) மூலம் பெறுவதால், GST மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைக் குறைத்துள்ளது. மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்திற்கு முக்கியமான வரி விகிதங்களை முடிவு செய்ய முடியாது. எனவே, பொது சேவைகளுக்கு வரி விதிக்க மாநிலங்களை அனுமதிக்க ஜிஎஸ்டி அமைப்பில் சில இடங்கள் இருக்க வேண்டும். ஜிஎஸ்டி நெகிழ்வுத்தன்மை மாநிலங்களுக்கு இடையே நிதிச் சுதந்திரத்தை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும். 


அருண் குமார் : மாநிலங்கள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை என்பதால், ஜிஎஸ்டி கூட்டாட்சிக்கு தீங்கு விளைவித்துள்ளது. அசாமின் பிரச்சினைகள் குஜராத்தில் இருந்து வேறுபட்டவை. மாநிலங்களுக்கு பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மற்றும் செலவுத் தேவைகள் உள்ளன. ஜிஎஸ்டி நாடு முழுவதும் அதிக மையப்படுத்தலை கொண்டு வந்துள்ளது. இது நல்லதல்ல. அமைப்புசாரா துறையை (unorganized sector) புறக்கணிக்கும் அதே வேளையில் இது முக்கியமாக ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு உதவியிருக்கிறது. அமைப்புசாரா துறை ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், ஒழுங்கமைக்கப்பட்ட துறை செழித்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க வழிவகுத்தது. முக்கியமாக பின்தங்கிய மாநிலங்களில் உள்ள அமைப்புசாரா துறையின் சரிவு, அந்த பிராந்தியங்களில் குறைவான செயல்திறனுக்கு வழிவகுக்கும். எனவே, ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு இடைநிலைக் கட்டத்திலும் வரி வசூலிக்காமல், விற்பனையின் இறுதி கட்டத்தில் மட்டுமே வரி வசூலிக்க பரிந்துரைக்கிறேன். இது தற்போது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உள்ளீட்டு வரவுகள் தொடர்பான ஊழல் மற்றும் போலி நிறுவனங்களின் இருப்பு போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. லாரிகளை அடிக்கடி காவல்துறையினர் மற்றும் பிற முகமைகள் தடுத்து நிறுத்தி பணம் பறிக்கிறார்கள். நேரடி வரிகளில் இருந்து அதிகம் வசூலிக்க வேண்டும் மற்றும் மறைமுக வரிகளின் வசூலைக் குறைக்க வேண்டும், இது முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கிய மாநிலங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.


அதிக அரசியல் செல்வாக்கு உள்ள மாநிலங்கள், பெரும்பாலும் மற்ற மாநிலங்களின் இழப்பில், மையத்திடம் இருந்து அதிக நிதியைப் பெற முனைகின்றன. மத்திய உதவியின் இந்த விநியோகம் எவ்வளவு நியாயமானது மற்றும் நடுநிலையானது? மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் அரசியல் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க வழி உள்ளதா?


அருண் குமார் : மத்திய அரசின் செலவினத்தில் 70 சதவிகிதம் கட்டாயமானது. அதாவது, அது நிலையானது மற்றும் மாற்ற முடியாது. மீதமுள்ள 30% நெகிழ்வானது மற்றும் ஒன்றிய அரசினால் தீர்மானிக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு எவ்வளவு பணம் தருகிறது என்பது அரசியலைப் பொறுத்தது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்குவதுதான்.


பினாகி சக்ரவர்த்தி : மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, 60% நிதியளிக்கும் போது, ​​மாநிலங்களுக்கு 40% நிதியைக் கேட்கும் போது, ​​விருப்புரிமையின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இது மாநில வளங்களை இணைக்கிறது. எந்தெந்த திட்டங்களை மத்திய அரசு நிர்வகிக்க வேண்டும், எந்தெந்த திட்டங்களை மாநிலங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதை அனைவரும் கலந்துகொள்ளும் தேசிய விவாதங்களை நாம் நடத்த வேண்டும். 14வது நிதி ஆணையம் ஒரு முக்கிய கட்டமைப்பை வழங்கியது. பெரிய பாதிப்புகள் அல்லது தேசிய முக்கியத்துவம் உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், தொலைதூர கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்துவது இந்த அளவுகோலுக்கு பொருந்தாது. எனவே, அரசியல் சீரமைப்பு குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் குறைந்தவை என்று நான் நம்புகிறேன். பல்வேறு துறைகளில் எங்கு, எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முழு சுதந்திரம் மத்திய அரசுக்கு உண்டு.


அருண்குமார் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியர். பினாகி சக்ரவர்த்தி National Institute of Public Finance and Policy இல் பணியாற்றுகிறார்.



Original article:

Share: