பணவியல் கொள்கையால் (monetary policy) இந்தப் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க முடியாவிட்டாலும், அதன் இலக்குகளை அடைய அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பணவியல் கொள்கையானது கலப்புப் பொருளாதாரப் போக்குகளைக் கையாண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வலுவாக உள்ளது. இருப்பினும், பணவீக்கம் குறைந்து வருகிறது. உணவுப் பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index (CPI)) குறையாமல் உள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. தற்போதைய 4.8% பணவீக்கத்தை 4%-ஆகக் குறைப்பதே அதன் இலக்காக உள்ளது. ஆனால், உணவுப் பணவீக்கம் குறையாமல் இந்த இலக்கை அடைய முடியுமா?
நுகர்வோர் விலைக் குறியீட்டில் (consumer price index (CPI)) உணவு பொருட்களின் விலை, பணவீக்கத்தில் 40% பங்களிக்கிறது. ஒட்டுமொத்த பணவீக்கமும் உணவு பொருட்களின் ஏற்ற இறக்கங்களை பொறுத்து இருக்கும். வரலாற்று ரீதியாக, ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் 4%-ஆக இருந்தபோது, உணவுப் பணவீக்கம் 4%-க்குக் கீழே இருந்தது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, ஒட்டுமொத்த பணவீக்கம் 4%-க்கும் ஆறு முறை மட்டுமே குறைந்துள்ளது. 2000-2006-க்கு இடையில் சராசரியாக பணவீக்கம் 3.9% ஆக இருந்தது. அந்த காலகட்டத்தில், உணவுப் பொருட்களின் பணவீக்கம் சராசரியாக 2.5%. குறைவாக இருந்தது.
அதன்பிறகு, 2017-18 மற்றும் 2018-19-ல் சராசரியாக 3.5 சதவீதமாக இருந்தது, இலக்கை விட இரண்டு வருடங்கள் மட்டுமே பணவீக்கம் குறைவாக இருந்தது. அப்போது உணவுப் பணவீக்கம் வெறும் 1 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய்க்குப் பிறகு உணவுப் பணவீக்கம் சராசரியாக (2020-21 மற்றும் 2023-24 க்கு இடையில்) 6.4-சதவீதமாக உயர்ந்தது. இது ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கமான (overall CPI inflation) 5.9 சதவீதத்தை விட அதிகமாகும்.
முதல் ஊரடங்கிற்குப் பிறகு 50 மாதங்களில், பணவீக்கம் 4%-க்கு மேல் இருந்தது, மேலும் 39 மாதங்களில் உணவுப் பணவீக்கம் 4%-க்கு மேல் இருந்தது. மொத்த பணவீக்கம் 24 மாதங்களில் 6%-ஐ தாண்டியது, உணவு பணவீக்கம் 28 மாதங்களில் 6%-ஐ தாண்டியது. 2023-24 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 5.4%-ஆகக் குறைந்தாலும், உணவுப் பணவீக்கம் 7.5%-ஆகவும் பின்னர் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 8.7%-ஆகவும் அதிகரித்துள்ளது.
பணவீக்கம் 4-சதவீதமாக குறைவது இப்போது நிலையானதாக இருக்காது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு சராசரி பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. சரசரியான பருவமழை மற்றும் அதிக அடிப்படை உணவு பணவீக்கத்தை குறைக்கும் என்று கருதுகிறது. உணவு பொருட்கள் அல்லாத பணவீக்கம் குறைவதால் நுகர்வோர் விலைக் குறியீட்டு விலையும் குறைந்துள்ளது. மே மாதத்தில், பணவீக்கம் 3%-ஆகக் குறைந்தது. இது வட்டி விகிதக் குறைப்புகளை அனுமதிக்கக்கூடிய விலைகளில் குறைவான அழுத்தம் இருப்பதை காட்டுகிறது. இது வட்டி விகித குறைப்புகளுக்கான வாய்ப்பை உருவாக்கலாம்.
ஒட்டுமொத்த பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் உணவு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. பணவீக்கக் கணக்கீட்டில் உணவு அதிக எடையைக் கொண்டிருப்பதாலும், அடிக்கடி வாங்கப்படுவதாலும், பணவீக்கம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை அது பாதிக்கிறது.
உணவு பொருட்களின் விலைகள் இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவா? என்று ரிசர்வ் வங்கி ஜனவரி 2024-ல் நடத்திய ஆய்வில் ஆராயப்பட்டது. பெரிய மற்றும் தொடர்ச்சியான உணவு விலை உயர்வுகள் உணவு அல்லாத பணவீக்கத்தையும் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதிக உணவுப் பணவீக்கம் ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. ஏனெனில், உணவு அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது. எங்கள் மதிப்பீட்டின் படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 20% ஏழை மக்கள் பணக்காரர்களான 20%-ஐ விட கிட்டத்தட்ட 0.5%-அதிக பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர்.
உணவுப் பணவீக்கம் எப்போது குறையும்? வரலாற்று ரீதியாக, பருவமழை உணவுப் பணவீக்க குறைவுக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இருப்பினும், காலநிலை மாற்றம் மழைப்பொழிவை மிகவும் கணிக்க முடியாததாக மாற்றியது. இந்த ஆண்டு, வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை சரியான நேரத்தில் தொடங்கினாலும், அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. ஜூன்-30ஆம் தேதி வரை சராசரிக்கும் குறைவாக 11% மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எவ்வாறாயினும், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும், உணவுப் பணவீக்கத்தைக் குறைக்கவும், இந்த பருவத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டும்.
வெப்ப அலைகள் மற்றும் பருவமழை போன்ற போன்ற காரணிகள் அபாயங்களை மேலும் அதிகரித்துள்ளன. வானிலை நிகழ்வுகள் உணவு உற்பத்தி மற்றும் விலைகளை கடுமையாக பாதித்துள்ளது. காலநிலை மாற்றம் இதை கடுமையானதாக மாற்றியுள்ளது. குறிப்பாக, தொற்றுநோய்க்குப் பிறகு. 2022-23 இல், சாதாரண பருவமழை இருந்தபோதிலும், வெப்ப அலைகள் மற்றும் சீரற்ற பருவமழைகள் பணவீக்கத்தை அதிகரித்தன. 2023-24-ஆம் ஆண்டில், புவி வெப்பமடைதலால் மற்றும் எல்-நினோ போன்ற காரணிகள் இந்தியா வரலாற்றில் மிகவும் வறண்ட மாதமாக ஆகஸ்ட் மாதத்தை மாற்றியது.
பல்வேறு காரணிகள் உணவு பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. வெப்ப அலைகள் நிலத்தடி நீர் மட்டத்தை குறைப்பதன் மூலம் பயிர் விளைச்சலைக் குறைத்துள்ளன. கோதுமை தானியங்களை சேதப்படுத்துகின்றன. மேலும், பூச்சி தாக்குதல்களை ஏற்படுத்துகின்றன. பால் மற்றும் கோழி உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளன. பருவமழையின் சீரற்ற தன்மை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கொள்கைகளை காலநிலைக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். ஏனெனில், அதைப் புறக்கணிப்பது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும். உணவு மீதான காலநிலை தாக்கங்களைக் கட்டுப்படுத்த நிதிக் கொள்கை உதவ வேண்டும். விவசாய உள்கட்டமைப்பு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் தேவை. இந்த ஆண்டு வெப்பத்தை எதிர்க்கும் கோதுமை போன்ற காலநிலை எதிர்ப்பு பயிர்களை கொள்கைகள் ஊக்குவிக்க வேண்டும். விவசாய ஆராய்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. ஏனெனில், தற்போதைய முதலீடுகள் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% மட்டுமே பங்களிக்கிறது என்று 2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்ப அலை தொடர்பான நீர் கிடைக்கும் தன்மைக்கான அபாயங்கள் காரணமாக. நீர்ப்பாசன உள்கட்டமைப்பில் மேம்பாடுகள் தேவை. அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எனினும், இதுவரை 57-சதவீத வேளாண்மைக்கு மட்டுமே நீர்ப்பாசன வசதி உள்ளது. குளிர்பதன சேமிப்பு மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். உணவு வழங்கலுக்கான அபாயங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும். அது வரை, உணவுப் பணவீக்க அபாயங்கள் உயர்வாகவே இருக்கும் வாய்ப்புள்ளது. பணவியல் கொள்கையால் இந்தப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்றாலும், அதன் இலக்குகளை அடைய அதிக உணவு விலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தாக்கல் செய்யபடவிருக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜோஷி கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (Credit Rating Information Services of India Limited) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர், டாண்டன் மூத்த பொருளாதார நிபுணர், மற்றும் ராஜாத்யக்ஷா பொருளாதார ஆய்வாளர் ஆவார்.