இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் மொத்தம் 100 படகுகள் படிப்படியாக பயன்பாட்டுக்கு வரும். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையமும் Rhenus Logistics நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
முக்கிய தேசிய நீர்வழிகள் வழியாக சரக்குகளை கொண்டு செல்வதற்கான சரக்கு சேவைகளை தொடங்கும் முயற்சியில், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IInland Waterways Authority of India (IWAI)) செவ்வாயன்று (மே 6, 2025) உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமான Rhenus Logistics India Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Rhenus Logistics நிறுவனம் தேசிய நீர்வழிப்பாதைகளில் 100 படகுகளை படிப்படியாக அறிமுகப்படுத்தும் அதே வேளையில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை நகர்த்துவதை இலக்காகக் கொண்டு முதல் கட்டமாக 20 படகுகள் மற்றும் 6 தள்ளும் படகுகள்பயன்படுத்தப்பட உள்ளன.
"உள்நாட்டு நீர்வழிகள் பசுமையான, செலவு குறைந்த மற்றும் திறமையான வணிக வலையமைப்பை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன" என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்ப்நந்தா சோனோவால் நிகழ்ச்சியில் கூறினார்.
உள்நாட்டு நீர்வழிகள் வழியாக சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க ‘ஜல்வஹக்’ (‘Jalvahak’) திட்டத்தை சோனோவால் வெளியிட்டார். கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகள் மற்றும் இந்தோ-பங்களாதேஷ் நெறிமுறை வழித்தடத்தில் ரீனஸ் நிறுவனம் செயல்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதும் சரக்குகளை மொத்தமாக கொண்டு செல்லும் (தரப்படுத்தப்படாத, தனிப்பட்ட அலகுகள்) மற்றும் தேசிய நீர்வழிகளுக்கு படிப்படியாக விரிவாக்கம் செய்யும்.
ஐரோப்பிய உள்நாட்டு கப்பல் போக்குவரத்தில் ரெனஸின் அனுபவத்துடனும், 1,100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட அதன் பெரிய கடற்படையுடனும், இந்த கூட்டாண்மை இந்தியாவிற்கு சிறந்த சர்வதேச முறைகளைக் கொண்டுவர விரும்புகிறது. பெரிய மற்றும் சிறிய சரக்குகளை எடுத்துச் செல்ல, ஆழமற்ற நீர் பரப்பில் பயணிக்க கூடிய வடிவமைக்கப்பட்ட நகர்த்தும் படகுகள் எனப்படும் சிறப்பு படகுகளைப் பயன்படுத்துவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் தேசிய நீர்வழிகளின் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் மூன்றில் இருந்து 2023-24ஆம் ஆண்டில் 24 ஆக உயர்ந்தது. 2024-25ஆம் ஆண்டில் 29 இலக்கை எட்டியது. 2014-15ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 30 மில்லியன் மெட்ரிக் டன்களாக (million metric tonnes per annum (MMTPA)) இருந்த சரக்கு இயக்கம் 2023-24ல் 133 MMTPA ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 779 MMTPA மேல் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்சமயம், 14,500 கி.மீ நீளமுள்ள பயணிக்கக்கூடிய நீர்வழிகள் 111 தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் துறையானது நாட்டின் பன்முக வணிக கட்டமைப்பில் மாற்றத்தக்க பங்கை வகிக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.