முக்கிய அம்சங்கள்:
• பிரதமர் அலுவலகத்தில் கூடிய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு, சில மூத்த இந்திய காவல் அதிகாரிகளின் பெயர்கள் குறித்து விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து புலனாய்வுத் துறையின் இயக்குநர் சூட்டின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.
• புலனாய்வுத் துறையின் இயக்குநர் சூட்டின் இரண்டு வருட நிலையான பதவிக்காலம் மே 25 அன்று முடிவடைவதற்கு முன்னதாக இந்த விவாதங்கள் நடைபெற்றன.
• 1986-ம் ஆண்டு பிரிவை (batch) சேர்ந்த இந்திய காவல் அதிகாரியான சூட், மே 25, 2023 அன்று புலனாய்வுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மாநில காவல்துறை இயக்குநராகப் பணியாற்றினார். பெல்லாரி மற்றும் ராய்ச்சூரில் காவல் கண்காணிப்பாளராகவும், பெங்களூரு நகரத்தில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராகவும் மைசூர் மற்றும் பெங்களூரு இரண்டிலும் காவல் ஆணையராகவும், கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (Additional Director General of Police (ADGP)), முதன்மைச் செயலாளர் (உள்துறை); காவல் இயக்குநர் (உள் பாதுகாப்பு); மற்றும் காவல் இயக்குனர் (குற்றப் புலனாய்வுத் துறை) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். மொரிஷியஸ் அரசாங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா?:
• டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் (Delhi Special Police Establishment Act) விதிகளின்படி, ஒன்றிய புலனாய்வு பிரிவின் இயக்குநராகப் இரண்டு ஆண்டுகள் நிலையான பதவிக்காலத்திற்கு பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும், அரசியல் செல்வாக்கிலிருந்து அமைப்பை பாதுகாப்பதை நோக்கமாக உள்ளது.
• ஒன்றிய புலனாய்வு பிரிவு (Central Bureau of Investigation (CBI)), இந்தியாவின் முன்னணி புலனாய்வு அமைப்பாகும். இவை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அல்லது நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் வழக்குகளை விசாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
• ஒன்றிய புலனாய்வு பிரிவு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த நியமன செயல்முறை உச்ச நீதிமன்றத்தின் வினீத் நாராயண் தீர்ப்பின் (Vineet Narain judgement, 1997) மூலம் நிறுவப்பட்டது. மேலும், டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டம் (The Delhi Special Police Establishment (DSPE) Act, 1946)) லோக்பால் மற்றும் லோகாயுக்தாக்கள் சட்டம், 2013 (The Lokpal and Lokayuktas Act, 2013) மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டன.