புற்றுநோய் ஒரு அறிவிக்கத்தக்க நோயாக இருக்க வேண்டுமா? -சி. அரவிந்தா

 புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான சிறந்தவழி, தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாகும்.


இந்தியாவில் புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இது கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தும் என்று சிலர் வாதிட்டாலும், ஒன்றிய அரசு இந்த வாதத்தை எதிர்க்கிறது. தொற்று நோய்களை மட்டுமே அறிவிப்பது நடைமுறை என்றும், புற்றுநோய் என்பது தொற்றக்கூடியது அல்ல என்றும் தொற்றாத நோய்  என்றும் கூறியது.


நோய் அறிவிப்புக் கொள்கைகளில் சமீபத்திய மாற்றங்கள் இந்தக் காரணம் இன்னும் சரியாக பொருந்துமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. 2024-ஆம் ஆண்டில், பாம்புக் கடிகளை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது. இது இது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல. 1995-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈய நச்சுத்தன்மையை (lead poisoning) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கத்தது. இது தொற்றா நோய்களைக் கண்காணிப்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. பொது சுகாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், இந்தியாவில் புற்றுநோய் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.


தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதே நோய் அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும். தொற்று நோய்களைப் பற்றி சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். புற்றுநோய் தொற்று நோய்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், அது ஒருவருக்கு நபர் பரவுவதில்லை அல்லது திடீர் மரணங்களை ஏற்படுத்துவதில்லை. இதில் பல வகைகள் உள்ளன. மேலும், கண்டறிவதற்கு சிக்கலான சோதனைகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயை அறிவிக்கத்தக்கதாக மாற்றுவதை ஆதரிப்பவர்கள், இது முன்கூட்டியே கண்டறிவதற்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் உதவும் என்று நம்புகிறார்கள்.


இருப்பினும், இந்த அணுகுமுறையில் அடிப்படை சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, புற்றுநோய் ஒரு கட்டத்தில் கண்டறியப்படுவதில்லை. மேலும், லேசானது முதல் கடுமையானது என பல வகைகளை கொண்டுள்ளது. ஒரு நோயைப் அறிவிக்கதக்கதாக மாற்றுவது பொதுவாக விரைவான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். ஆனால், புற்றுநோய்க்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதில்லை, நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவர்கள் மீது சுமத்தப்படும் சட்டப்பூர்வ கடமைகள் கூடுதல் சுமையை உருவாக்கக்கூடும். இந்தியாவின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் (National Cancer Registry Programme (NCRP)) 1982-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புற்றுநோய் தொடர்பான தகவல்களுக்கான தரவு சேகரிப்பு அமைப்பாக செயல்படுகிறது. NCRP முக்கிய விவரங்களை சேகரிக்கிறது. அவற்றில் சில, புற்றுநோய் நோயாளிகளின் மக்கள்தொகை, வகை, நிலை மற்றும் உருவவியல் உள்ளிட்ட புற்றுநோய் அடையாளம், கண்டறிதலின் நேரம் மற்றும் கண்டறிதலின்போது நிலை, கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை விவரங்கள் மற்றும் பின்தொடர்தல் மற்றும் உயிர்வாழும் விளைவுகள் பற்றிய முக்கியமான தகவல்களைத் தொகுக்கிறது. புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை சேகரிக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவேடுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் புற்றுநோய் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் மக்கள் தொகை சார்ந்த பதிவேடுகள் ஆகியவை NCRP-யில் இடம்பெற்றிருக்கும்.


2022-ல் 269 மருத்துவமனை சார்ந்த மற்றும் 38 மக்கள்தொகை அடிப்படையிலான பதிவுகள் உள்ளன. அவை போதுமானதாக இல்லை. அனைத்து மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் உட்பட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடு இருக்க வேண்டும். இது நாடு தழுவிய புற்றுநோய் கண்காணிப்பை உறுதி செய்யும். புற்றுநோய் அறிக்கையிடலை சட்டப்பூர்வ தேவையாக மாற்றுவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள புற்றுநோய் பதிவேடுகளை வலுப்படுத்துவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும். 


இரண்டாவதாக, புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக மாற்றுவது தனியுரிமை கவலைகளை ஏற்படுத்தும். ஏனெனில், நோய் அறிவிப்பு என்பது தனிப்பட்ட தனியரிமையைவிட பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதாகும். புற்றுநோய் இன்னும் சமூகத்தில் ஒரு பிரச்னையை  ஏற்படுத்துகிறது. பல மாநில பொது சுகாதாரச் சட்டங்களில் இன்னும் சுகாதார அவசரநிலையின் போது உள்ளூர் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் விதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் பயனற்றதாக மாற்றப்பட்டாலும், சட்ட முன்மாதிரி இன்னும் உள்ளது. இதுபோன்ற சட்ட கட்டமைப்பில் புற்றுநோயைச் சேர்ப்பது நோயாளிகள் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக முன்வருவதில் நோயாளிகளிடையே தயக்கத்தை அதிகரிக்கக்கூடும். ஏனெனில், பிரச்சனை மற்றும் பாகுபாடு மக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதைத் தடுக்கலாம். உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) முக்கியமாக புற்றுநோய் பதிவேடுகளை ஆதரிக்கிறது. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பை தனிப்பட்ட மட்டத்தில் ஒரு விருப்ப செயல்முறையாக மட்டுமே பரிந்துரைக்கிறது கட்டாய விதியாக அல்ல.


அனைத்து மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் விரிவான தரவு சேகரிப்பை உறுதிசெய்ய தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தை (National Cancer Registry Programme (NCRP)) விரிவுபடுத்துவதே ஒரு பயனுள்ள அணுகுமுறையாகும். புற்றுநோய் பரிசோதனை முயற்சிகளை மேம்படுத்துவது முன்கூட்டியே கண்டறிவதை இது போன்ற நடவடிக்கைகள் உறுதி செய்யும். சட்டப்பூர்வ ஆணைகள் இல்லாமல் அறிக்கையிடல் வழிமுறைகளை வலுப்படுத்துவது புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் நிர்ப்பந்தத்தின் கீழ் புகாரளிப்பதற்குப் பதிலாக தானாக முன்வந்து துல்லியமான தரவை வழங்க அனுமதிக்கும். விரைவாகப் பரவும் தொற்று நோய்களுக்கு கட்டாய அறிவிப்பு சிறப்பாகச் செயல்படும். புற்றுநோய்க்கு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பதிவு அமைப்பு ஒரு சிறந்த தீர்வாகும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் வலுவான பின்தொடர்தல் வழிமுறைகள் உட்பட பரந்த மருத்துவமனை பங்கேற்பால் வலுப்படுத்தப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட பதிவு அமைப்பு, இந்தியாவில் புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்தும்.


டாக்டர். சி. அரவிந்தா ஒரு கல்வியியல் மற்றும் பொது சுகாதார மருத்துவர்.



Original article:

Share: