தற்போதைய செய்தி : இந்தியாவில் கூட்டாட்சி முறையைப் பற்றிய பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையேயான தொகுதி மறுவரையறை மற்றும் பிரதிநிதித்துவ சமநிலை ஆகியவற்றைக் கவனமாக கையாள்வது அவசியம்.
முக்கிய அம்சங்கள்:
. வளர்ச்சியில் மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட சமநிலையின்மை (horizontal imbalance) தொடர்ந்து ஒரு சவாலாகவே உள்ளது. தற்போதைய, வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில மற்றும் பொதுப் பட்டியல்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
. சர்வாதிகாரத்தின் (authoritarianism) எழுச்சி கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தக்கூடும். சில நேரங்களில், மாநிலங்களைப் பற்றிய ஒரே மாதிரியான கலாச்சாரக் கருத்துக்களும் (stereotypes) அரசியல் பதட்டங்களை உருவாக்குகின்றன.
. கூட்டாட்சி நடைமுறை என்பது குழப்பமானதாக உள்ளது. அதன் சவால்களை எதிர்கொள்ள பல வழிகள் உள்ளன. கூட்டாட்சியின் அடிப்படை நிர்வாகக் கொள்கைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் உள்ளன. இந்திய கூட்டாட்சி வரலாற்றில், நாம் பார்க்கும் மையமயமாக்கல் முக்கியமாக மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டாலும் உருவாக்கப்பட்டது.
. அரசியல், கலாச்சார, நிர்வாக மற்றும் பொருளாதார கூட்டாட்சி ஆகியவை ஒரு பொதுவான விதியைப் பின்பற்றவில்லை என்பதாலும் கூட்டாட்சி அரசியலும் சிக்கலானதாக உள்ளது.
. கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் இப்போது சட்டமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகாரங்களை முறையாகப் பிரிப்பதைவிட கட்சி விசுவாசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், நாடாளுமன்றத்தால் நிர்வாகத்தை திறம்பட மேற்பார்வையிட முடியாது. இது கூட்டாட்சிக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்குகிறது.
. கூட்டாட்சி என்பது பொதுவாக ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான உறவாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு வகையில், இங்கே மூன்று அரசாங்கங்கள் உள்ளன (உள்ளூர் அரசாங்கத்தைப் தவிர) ஒன்றிய அரசு, தனிப்பட்ட மாநிலங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக ஒரு குழுவாக செயல்படுகின்றன.
. சரக்கு மற்றும் சேவை வரி என்பது அனைத்து மாநிலங்களும் அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூட்டு முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்கட்டாகும். சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நிர்ணயிப்பது என்பது ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. அது அனைத்து மாநிலங்களும் சேர்ந்து எடுக்கும் கூட்டு முடிவாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
. காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் தொடங்கியது. பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் புவியியல் குழுக்கள் சுயாட்சியைக் கோரின. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வடிவமைக்கும் அதே வேளையில், வேற்றுமையில் ஒற்றுமையைப் (unity in diversity) பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.
. இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்கியது. இரண்டு அவைகள் உள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. திருத்துவதற்கு மிகவும் எளிதானதோ அல்லது மிகவும் கடினமானதோ அல்ல. எழுதப்பட்ட அரசியலமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளின் முறையை நிலைநிறுத்த ஒரு தன்னாட்சி நீதிமன்றம் போன்ற கூட்டாட்சியின் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது.