இலட்சிய மாவட்டங்களில் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க பிரதமர் தன் தன்ய கிருஷி யோஜனா (PM–DDKY) திட்டத்தை ஒரு பிரத்யேக திட்டமாக செயல்படுத்துவது கட்டாயமாகும்.
இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் (Aspirational Districts Programme (ADP)) வெற்றியால் ஈர்க்கப்பட்டு, 2025-26 பட்ஜெட்டில், மாநிலங்களுடன் இணைந்து பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (Prime Minister Dhan Dhanya Krishi Yojana (PM–DDKY)) திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 100 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் சுமார் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
இலட்சிய மாவட்டங்கள் திட்டம் (ADP) விவசாயம் மற்றும் நீர்வளங்களை அதன் ஐந்து துறைகளில் ஒன்றாக உள்ளடக்கியது. இருப்பினும், ஒரு புதிய திட்டம் ஏன் தொடங்கப்படுகிறது? அது இலட்சிய மாவட்டங்கள் திட்டத்துடன் (ADP) இணைந்து செயல்படுமா அல்லது தேவையற்றதாக இருக்குமா? போட்டித்திறன் மற்றும் சமூக முன்னேற்ற கட்டாயத்திற்கான நிறுவனத்தின் (2020) மதிப்பீட்டு அறிக்கை, பெரும்பாலான இலட்சிய மாவட்டங்களில் விவசாயம், நீர்வளங்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவை மேம்படுத்துவதற்கு கடினமான பகுதிகள் என்பதைக் காட்டுகிறது. எனவே, பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (PM–DDKY) இந்த பகுதிகளில் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க ஒரு கவனம் செலுத்தும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டம் பருப்பு வகைகள் மற்றும் தினைகளில் கவனம் செலுத்தும். நிலையான விவசாயம், பயிர் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த வேளாண் முறைகள், வேளாண் காடுகள் மற்றும் அதிக மகசூல் தரும் வகை விதைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (PM–DDKY) திட்டத்திற்கான மாவட்டத் தேர்வு அளவுகோல்கள் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் பெறுதல் ஆகியவை அடங்கும். எனவே, PM–DDKY, இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) 3C-க்கான கட்டமைப்பை கடைபிடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பு (Convergence)- ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு (Collaboration)- ஒன்றிய மற்றும் மாநில அளவிலான நோடல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் இணைந்து பணியாற்ற வேண்டும். போட்டி (Competition)- தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் ”மாற்றத்திற்கான சாம்பியன்ஸ்” (CoC) கண்காணிப்பு டேஷ்போர்டைப் பயன்படுத்தி போட்டியிட வேண்டும்.
மாவட்ட அளவிலான தரவுத்தளம்
அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (International Crop Research Institute) மற்றும் டாடா கார்னெல் நிறுவனம் (Tata Cornell Institute) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான தரவுத்தளத்தை மாநில அரசுகள் பயன்படுத்தலாம். இந்தத் தரவுத்தளம், இந்தத் துறையில் இன்னும் எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியாத கூடுதல் இலட்சியமுள்ள மாவட்டங்களைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு உதவும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவது மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் சார்புநிலையைக் குறைக்கலாம் மற்றும் தலையீடானப் பகுதிகளில் நகலெடுப்பதைத் (duplication) தடுக்கலாம்.
மூன்றாவதாக, இலட்சிய மாவட்டங்கள் திட்டம் (ADP) 49 செயல்திறன் குறிகாட்டிகளையும் 81 தரவுப் புள்ளிகளையும் தேர்ந்தெடுத்தது. இவற்றில், 10 குறிகாட்டிகள் விவசாயம் மற்றும் நீர்வளங்களுடன் தொடர்புடையவை ஆகும். நிகர பாசனப் பரப்பளவு, ஏக்கருக்கு பயிர் மகசூல், சான்றளிக்கப்பட்ட விதை விநியோகம், பயிர் காப்பீடு, மின்னணு சந்தைகள் மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கான (APMC) விவசாயிகளின் அணுகல், கால்நடை செயற்கைக் கருவூட்டல் மற்றும் விலங்கு தடுப்பூசி ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, இந்தத் துறைக்கு 12 தரவுப் புள்ளிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து, விவசாயம் மற்றும் நீர் வளங்களில் மாவட்ட செயல்திறனை தரவரிசைப்படுத்தப் பயன்படுத்தப்படும் மொத்த கூட்டு மதிப்பெண்ணில் 20% பங்களிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் இந்த குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் அல்லது புதியவற்றைச் சேர்க்க வேண்டும். 'டெல்டா' தரவரிசைக்காக காலப்போக்கில் அதிகரிக்கும் மாற்றங்களைக் கண்காணிக்க அவர்கள் தங்கள் அளவீட்டு முறைகளையும் புதுப்பிக்க வேண்டும்.
அரசு சாரா நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் திட்டத்தை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் முயற்சிகள் இலட்சிய மாவட்டங்கள் திட்டத்துடன் (ADP) ஒத்துப்போக வேண்டும்.
தேய் ஐஐஎம் லக்னோவில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஜெய் தாக்கூர் அதே நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞராக உள்ளார்.