ஸ்டேபிள்காயின்கள் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் பற்றி... -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


சர்வதேச பணப்பரிமாற்றங்களை எளிதாக்க, ஸ்டேபிள்காயின்களுக்கு பதிலாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை (Central Bank Digital Currencies (CBDCs)) பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மற்ற மத்திய வங்கிகளை வலியுறுத்தினார்.


வாஷிங்டன்னில் நடந்த உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) வருடாந்திர கூட்டத்தில் பேசிய மல்ஹோத்ரா, கிரிப்டோகரன்சிகள் குறித்த இந்திய மத்திய வங்கியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அவற்றின் பயன்பாடு பணவியல் கொள்கை, மூலதனக் கணக்கு ஓட்டங்கள் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார்.


முக்கிய  அம்சங்கள்:


1. ஸ்டேபிள்காயின்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது சொத்துக்களின் குழுவுடன் ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள் ஆகும். அவை ஒரு பிளாக்செயினில் உள்ள டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் காலப்போக்கில் நிலையான மதிப்பை வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை வழக்கமான பணம், பொருட்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகின்றன.


2. ஜேபி மோர்கனின் கருத்துப்படி, ஸ்டேபிள்காயின்கள் இரண்டு வகைகளில் வருகின்றன :


  • முழுமையாக ஒதுக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்கள் – இவை வழக்கமான பணம் அல்லது குறுகியகால அரசாங்க பத்திரங்கள் போன்ற உயர்தர சொத்துக்களால் 1:1 என்ற விகிதத்தில் ஆதரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளியிடப்பட்ட நாணயமும் ஒரு அடிப்படை சொத்தால் ஆதரிக்கப்படுவதால், நிலையான விலையை வழங்குகிறது.


  • அல்காரிதமிக் (Algorithmic) ஸ்டேபிள்காயின்கள் – இவை அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகின்றன. வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து அமைப்பு நாணயங்களைச் சேர்க்கிறது அல்லது நீக்குகிறது. விலை மிக அதிகமாக இருந்தால், அது அதிக நாணயங்களை உருவாக்குகிறது. விலை மிகவும் குறைவாக இருந்தால், அது சில நாணயங்களை அழிக்கிறது.


3. ஜூன் மாதத்தில், அமெரிக்க ஸ்டேபிள்காயின்களை வழிநடத்தவும் விதிகளை அமைக்கவும் அமெரிக்க செனட் GENIUS சட்டத்தை அங்கீகரித்தது. அதே மாதத்தில், தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் தென் கொரிய வோன் (KRW) ஸ்டேபிள்காயின்களை சட்டப்பூர்வமாக்க டிஜிட்டல் சொத்து அடிப்படைச் சட்டத்தை நிறைவேற்றியது. மே மாதத்தில், ஹாங்காங்கின் சட்டமன்றம் உள்ளூர் ஃபியட் ஆதரவு பெற்ற ஸ்டேபிள்காயின்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அங்கீகரித்தது.


4. உலகளவில், அமெரிக்க டாலர் ஸ்டேபிள்காயின்கள் $300 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. CoinGecko-ன் படி, அனைத்து கிரிப்டோ டோக்கன்களின் மொத்த சந்தை மதிப்பு $4 டிரில்லியனுக்கும் அதிகமாகும். தற்போது, ​​டெதர் மற்றும் USDC இரண்டு பெரிய ஸ்டேபிள்காயின்கள் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு $285 பில்லியன் உலகளாவிய ஸ்டேபிள்காயின் சந்தையில் சுமார் 90% ஆகும்.


5. RBI  கூற்றுப்படி, "CBDC என்பது ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம் ஆகும். இது வழக்கமான நாணயத்தைப் போன்றது மற்றும் அதனுடன் ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக்கொள்ளலாம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் அதன் டிஜிட்டல் வடிவம் ஆகும்." இவற்றை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் வாலட்களுடன் பயன்படுத்தலாம்.


6. டிசம்பர் 2022–ல், சில்லறை விற்பனையாளர்களுக்காக சோதனை அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் எனப்படும் இந்தியாவின் CBDC-யை RBI அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​RBI சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை போன்ற இரண்டு வகையான CBDCகளை சோதித்து வருகிறது.


7. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) பிட்காயின் மூலம் ஈர்க்கப்பட்டன. ஆனால், அவை கிரிப்டோகரன்சிகளிலிருந்து வேறுபட்டவை. கிரிப்டோகரன்சிகள் அரசாங்கத்தால் வெளியிடப்படுவதில்லை, மேலும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல. CBDCகள், வங்கி அல்லது இடைத்தரகர் தேவையில்லாமல் நாட்டிற்குள்ளும் எல்லைகளுக்கு அப்பாலும் பரிவர்த்தனைகளைச் செய்ய மக்களை அனுமதிக்கின்றன.


8. மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) என்பவை அரசாங்கப் பணம் ஆகும். அவை சில நன்மைகளைக் கொண்டுள்ளன. டோக்கனைஸ் செய்யப்படலாம், மேலும் பணத்தைப் பாதுகாப்பாகவும் ஒன்றிணைக்கவும் வைக்கின்றன. அவற்றை பெரிய அளவில் பயன்படுத்த அனைவரும் அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


9. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களுக்கும் (CBDC) கிரிப்டோகரன்சிக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படுகிறது என்பதே உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இது மத்திய வங்கியின் "நேரடிப் பொறுப்பாகவும்" அமைகிறது.


10. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் காகிதப் பணத்தைப் போன்றவை என்று ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ கூறுகிறது. ஏனெனில், அவை மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்புகளாக உள்ளது. இது வணிக வங்கிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் பணத்தைவிட அவற்றைப் பாதுகாப்பானதாக்குகிறது.


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள்காயின்கள் நன்மைகள்


நிலேஷ் ஷா, எக்ஸ்பிரஸ் ஒப்பீனியனில், ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று எழுதினார். இது வெளிநாட்டு நாணய விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து இந்திய பயனர்களைப் பாதுகாக்கும் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். இந்தியாவின் பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் இதை இணைப்பது ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களுக்கான தேவையை அதிகரிக்கும். ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கும் மற்றும் இந்தியாவின் நிதி அமைப்பை மேம்படுத்தும்.


1. பணம் அனுப்புதல்: 


இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிகப் பணத்தைப் பெறுகிறது (ஒவ்வொரு ஆண்டும் $125 பில்லியன்). ஸ்டேபிள்காயின்களைப் பயன்படுத்துவது பணம் அனுப்புவதை 90% வரை மலிவாகவும் வேகமாகவும் மாற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும்.


2. எல்லை தாண்டிய வர்த்தகம்: 


பிளாக்செயினில் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பணம் செலுத்துவதை எளிதாக்கும், இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தும்.

3. நிதி உள்ளடக்கம்: 


ஸ்டேபிள்காயின்கள் e-rupee உடன் இணைந்து, குறிப்பாக கிராமங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் நிதியை அணுக உதவும்.

4. உலகளாவிய செல்வாக்கு: 


இந்திய (INR) ஆதரவுபெற்ற ஸ்டேபிள்காயின், ரூபாயை உலகளவில் பரவலாகப் பயன்படுத்தச் செய்யலாம், USD ஸ்டேபிள்காயின்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம் மற்றும் இந்தியாவின் ஃபின்டெக் இருப்பை வலுப்படுத்தலாம்.


5. குறைந்த கடன் செலவு: 


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களை வெளியிடும் நிறுவனம் பூஜ்ஜியம் முதல் குறைந்தவட்டி விகிதங்களில் கடன் வாங்கும். இது வழங்கும் வங்கிகள் அல்லது இந்திய அரசாங்கத்துடன் அதன் பலனைப் பகிர்ந்துகொள்ளலாம்.



Original article:

Share: