மின்-ஆளுகையை திறம்பட செயல்படுத்துவதில் எந்த கட்டமைப்பு காரணிகள் தடையாக இருக்கின்றன? -ஷாம்னா தச்சம் போயில்

 டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. இருப்பினும், மின்-ஆளுகையில் தொழில்நுட்பத்தை (techno-centrism) அதிகமாக நம்பியிருப்பது மக்களை விலக்கிவைப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறதா?


20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சியடைந்தது. இதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்புல கருவியாக (back-end tool) இருந்து சில காலகட்டத்திற்கு பின்னர் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சூழல் அமைப்பாக மாறியது.


COVID-19 தொற்றுநோய் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நான்காவது கட்டம் தொடங்கியது. இதில் தொழில்நுட்பம் ஒரு சேவை-விநியோக கருவியாக (service-delivery tool) இருந்து கொள்கை நோக்கங்கள் மற்றும் செயல்படுத்தல் முறைகள் இரண்டையும் வடிவமைக்கும் அறிவாற்றல் கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த மாற்றம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அவற்றைப் பார்ப்போம்.


முதலாவதாக, தொழில்நுட்பத்தின் பங்கு சுகாதார கண்காணிப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் விரிவடைந்தது. ஆரோக்ய சேது (Aarogya Setu) மற்றும் கோ-வின் (CoWIN) போன்ற தளங்கள் பெரிய அளவிலான டிஜிட்டல் பொது சுகாதார உள்கட்டமைப்பாக மாறியதை காட்டுகின்றன. அதே நேரத்தில், பொலிவுறு நகர (Smart City) கட்டுப்பாட்டு மையங்கள் இப்போது போக்குவரத்து மேம்பாடு (traffic optimisation) மற்றும் வள ஒதுக்கீடு போன்றவவற்றிற்காக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI)) பயன்படுத்தி பகுப்பாய்வுகளை ஒருங்கிணைக்கின்றன.


இரண்டாவதாக, நலத்திட்டங்களை சரியாக வழங்க தொழில்நுட்பம் கடந்த காலங்களைவிட முக்கியமானதாக மாறியுள்ளது. ஆதார் சார்ந்த பொது விநியோக முறை (Aadhaar enabled Public Distribution System (AePDS)) போன்ற அமைப்புகள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (Ayushman Bharat Digital Mission) ஒரு விரிவான டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.


மூன்றாவதாக, தரவுத் பகுப்பாய்வின் (data analytics) மூலம் எதிர்பார்ப்புத்தன்மையுள்ள ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய தரவு பகுப்பாய்வுத் தளம் (National Data Analytics Platform) போன்ற தளங்கள், நிகழ்நேர கண்காணிப்பு எவ்வாறு கொள்கை தேர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


உள்கட்டமைப்பை உருவாக்கிய முந்தைய கட்டங்களைப் போல் இல்லாமல், தற்போதைய கட்டம், சட்டபூர்வமான நிர்வாகத்தின் கட்டமைப்பையே உருவாக்கி வருவதால், தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் பங்கைக் காணமுடிகிறது. கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கு டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முன்நிபந்தனையாக (precondition) மாறியுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. அதே நேரத்தில் புதிய வகையான புறக்கணிப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.


இந்த நான்காம் கட்ட மின்-ஆளுகை தொலைநோக்குப் பார்வையை திறம்பட செயல்படுத்துவதில், மூன்று கட்டமைப்புகளில் உள்ள தடையாக உள்ளன.


உள்ளடக்கிய மின்-ஆளுகை (inclusive e-governance) குறிப்பிடத்தக்க தடைகளில் ஒன்று டிஜிட்டல் எழுத்தறிவு ஆகும். ஏனெனில், பல தனிநபர்கள், கிராமப்புற பகுதிகளிலும் வயதான மக்களிடமும், மின்-ஆளுகை சேவைகளை திறம்பட பயன்படுத்தும் திறன் இன்னும் ஏற்படவில்லை. இந்திய குடும்பங்களில் 38 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் எழுத்தறிவு உடையவர்கள், கிராமப்புற பகுதிகளில் 25 சதவீதம், நகர்ப்புற பகுதிகளில் 61 சதவீதம் உள்ளது. முறைசாரா தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரிவை உருவாக்கும் விவசாய சாதாரண தொழிலாளர்களிடம் டிஜிட்டல் எழுத்தறிவு 13 சதவீதமாக உள்ளது. வேளாண்மை அல்லாத தொழிலாளர்களில் 53% பேருக்கு டிஜிட்டல் திறன்கள் உள்ளன.


இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல மாநில மொழிகளில் மின்னணு ஆளுமை சேவைகளை வழங்குவது வள-நிறைவானதாகவும் (resource-intensive), தொழில்நுட்பரீதியாக சவாலானதாகவும் உள்ளது, ஆயினும் 98 சதவீத இணைய பயனர்கள் மாநில மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுகின்றனர். பல பகுதிகளில் இன்னும் நம்பகமான இணைய அணுகலும், நிலையான மின்சார விநியோகமும் இல்லை, இவை மின்னணு ஆளுமை தளங்கள் சீராக இயங்குவதற்கு அவசியமானவை.


உலகின் மிகப்பெரிய முறைசாரா தொழிலாளர் தரவுத் தளமான இ-ஷ்ரம் தளம் (e-Shram portal), பயனர் அனுபவத்தைவிட பின்தள தரவு திரட்டலுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழில்நுட்ப, மேலிருந்து கீழ் வடிவமைப்பு செயல்முறைகள் சில நேரங்களில் அணுகல் சவால்களை எவ்வாறு கவனிக்காமல் போகலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


30.48 கோடி முறைசாரா தொழிலாளர்கள் (informal workers) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 13.5 கோடி பேர் இன்னும் தளத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த தளத்திற்கு ஸ்மார்ட்போன்கள், நிலையான இணையம், செயல்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் திறன்களைக் தேவைப்பட்டன. ஆனால், பயனர்களின் வாழ்க்கை சூழல்களைப் புரிந்துகொள்ள அல்லது வடிவமைப்பின்போது கருத்துக்களைச் சேகரிக்க சில பங்கேற்பு வழிமுறைகள் இருந்தன.


அரசு ஊழியர்களின் எதிர்ப்பு, வேலை இழப்பு பயம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல்வேறு மின்-ஆளுகை திட்டங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இந்த சவால்கள் நல்ல நோக்கத்துடன் கொண்ட மின்-ஆளுகை திட்டங்கள்கூட எவ்வாறு அடிமட்ட அளவில் (grassroot level) கட்டமைப்புத் தடைகளை கவனிக்காமல் விடுகின்றன என்பதை காட்டுகின்றன.


இந்தியாவின் மின்-ஆளுகை முயற்சிகள் லட்சிய இலக்குகளை பின்பற்றியுள்ளன - தொழில்நுட்ப அங்கீகாரம் மூலம் முறைகேடுகளை குறைத்தல் மற்றும் திட்டங்கள் பயனாளிகளை திறம்பட சென்றடைவதை உறுதி செய்தல்,  நலத்திட்டங்களில் மோசடிகளைத் தடுக்க பயோமெட்ரிக் அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் தடையற்ற சேவை அணுகலுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல் ஆகியவை ஆட்சி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கான நல்ல நோக்கமுடைய முயற்சிகளாக உள்ளன. இருப்பினும், இந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தும் அனுபவங்கள், முழுமையான வெற்றியை அடைய சில அடிப்படைக் கட்டமைப்பு குறைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.


நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் மோசடியைத் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகார அமைப்புகள், இந்தியா போன்ற அதிக  மக்கள்தொகையும், பல்வேறு வகையான நுட்பமான பாதிப்புகளை உள்ள நாட்டில் பரந்த அளவில் செயல்படுத்தப்படும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, தொழிலாளர்களிடையே தேய்மானம் அடைந்த கைரேகைகள் அல்லது வயதான குடிமக்களிடையே கருவிழி வடிவங்கள் மாற்றப்பட்டதால், ஜார்க்கண்டில் 49 சதவீதமும், ராஜஸ்தானில் 37 சதவீதமும் போன்ற மாநிலங்களில் சரிபார்ப்பு தோல்வியின் அதிக விகிதங்கள் பதிவாகியுள்ளன.


இந்த அங்கீகார சவால்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு அனுமானங்கள் மற்றும் நிலைமை உண்மைகளுக்கு இடையிலான இடைவெளிகளிலிருந்து எழுகின்றன மற்றும் தகுதியான பயனாளிகளின் சமூக நலத்திட்டங்களுக்கான அணுகலை பாதிக்கின்றன.


மேலும், அங்கீகார தோல்விகளை எதிர்கொள்ளும் குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் தரவை சரிசெய்ய மையங்களுக்கு பல முறை வருகை தருகிறார்கள். அதே நேரத்தில் இந்த அங்கீகார தளங்களில் குறைபாடுள்ள பயோமெட்ரிக் பதிவுக்கான உள்ளமைக்கப்பட்ட பொறுப்பான அமைப்புகள் அல்லது குறைதீர்ப்பு வழிமுறைகள் இல்லை. எனவே, மாற்று அங்கீகார வழிமுறைகளை உறுதிப்படுத்துவது தொழில்நுட்பத் திறனை மனித மாற்றத்துடன் சமநிலைப்படுத்த உதவும். அதனால், அமைப்பு அதிக அளவு பயனருக்கு-ஏற்றதாக (user-centric) மாறும்.


எல்லாவற்றையும் டிஜிட்டல் முறையில் ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 31-க்கும் மேற்பட்ட மத்திய மின்-ஆளுகைத் திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால், ஒருங்கிணைப்பது இன்னும் கடினமாக உள்ளது. அவை நன்றாக இணைக்கப்படுவதில்லை. சில சமயங்களில் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்கின்றன.


இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் மற்றும் செயல்படும் பல வேறுபட்ட பயன்பாடுகள் அல்லது வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவர்களின் அடையாளச் சரிபார்ப்பு தோல்வியுற்றால், அதற்கான காரணம் அவர்களுக்கு எப்போதும் சொல்லப்படுவதில்லை. இது போன்ற சூழலைக் கருத்தில்கொண்டு மாற்று வழிகளை வலுப்படுத்த வேண்டியிருக்கலாம்.


இங்கு மின்-ஆளுகையில், தொழில்நுட்ப மையப்படுத்தல், மனித மாறுபாடுகளை விட இயந்திர துல்லியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சில மக்களை விலக்கி வைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வலுவான மாற்று வழிமுறைகளை உருவாக்குவது, தொழில்நுட்ப தேவைகள் தற்செயலாக உரிமையுள்ள நலன்புரி பயன்களைப் பெறுவதற்கு தடைகளை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்யும், குறிப்பாக உயிரியல் முறைகளில் இயல்பாக மாறுபாடு கொண்டிருக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அல்லது இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள குறைந்த திறனும் விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.



Original article:

Share: