இந்தியா ஆப்கானிஸ்தானுடன் படிப்படியாக ஈடுபாட்டை உறுதிசெய்ய வேண்டும். மேலும், அது ஒரு வலுவான மனிதாபிமான சக்தியாக வெளிப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியின் வருகையும், முக்கிய கட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உற்சாகம் இப்போது முடிந்துவிட்டது. ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து செய்ய வேண்டியது, மோதலால் சீரழிந்த ஒரு நாட்டை நிலைப்படுத்துவதே முக்கிய குறிக்கோள். அந்தச் செயல்பாட்டில், இந்தியா ஒரு நம்பகமான மனிதாபிமான சக்தியாக வெளிப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். பரவலான போர் மற்றும் கடுமையான போர் மோதல் கொண்ட இந்த நாட்களில், அது முக்கியமானது. கூடுதலாக, வலுவான பாதுகாப்பு நலன்களின் பிரச்சினைகள் உள்ளன. உண்மையில், அவை பாகிஸ்தானுடனான ஒரு தரப்புக்கு வெற்றி ஒரு தரப்புக்கு தோல்வி நிலையில் (a zero sum game) இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், அது பாகிஸ்தானுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலைத்தன்மையை வழங்கக்கூடும். அது அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால்.
பயங்கரவாதமும் களத்தில் உள்ள யதார்த்தங்களும்
இஸ்லாமாபாத்தை கோபப்படுத்திய இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டு அறிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 2025) தலிபான்களின் உடனடி கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியது. அதேபோல், காபூல் தனது பிரதேசத்தை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்ற வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்தியது. இந்த வாக்குறுதி சர்வதேச சமூகத்திற்கு பல முறை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு-கோராசனுக்கு (IS-K) எதிரான தலிபான்களின் நடவடிக்கைகளைப் பாராட்டிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தடைகள் கண்காணிப்புக் குழு அறிக்கையால் இது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இஸ்லாமிய அரசு-கோராசனை (Islamic State-Khorasan (IS-K)) எதிர்ப்பதற்கான காபூலின் உண்மையான திறனை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஏனெனில், தனிமைப்படுத்தப்பட்ட முல்லா ஹைபதுல்லா காந்தஹாரிலிருந்து ஒரு இணையான ஆட்சியை நடத்துகிறார்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan (TTP)) தலைவர் நூர் வாலி மெஹ்சுத், தாலிபானிடமிருந்து நிதி பெற்றாலும், காபூல் இஸ்லாமிய அரசு-கோராசன் (IS-K) உடன் கூட்டணி சேரும் என்ற அச்சத்தில் அதற்கு எதிராக செயல்பட தயங்கியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சுருக்கமாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP)-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அப்பாவியானவை அல்ல, மாறாக வேண்டுமென்றே பரப்பப்படும் பிரச்சாரமாகும். ராவல்பிண்டிக்கு ஆப்கானிஸ்தான் நன்கு தெரியும். தாலிபான்கள் புனிதர்கள் இல்லை என்றாலும், ராவல்பிண்டி அனைவரையும் நம்பவைக்க முயலும் அளவு தந்திரமான பயங்கரவாத ஆதரவாளர்களும் அல்ல.
இருப்பினும், இந்த கதையை அகற்றுவதற்கு நடைமுறையில் செயல்கள் தேவை, இதில் இந்தியா பங்காற்றலாம். ஒரு செயல்பாடாக, தாலிபான்களின் பெரும்பாலும் வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை பயிர் மாற்று திட்டங்களுடன் இணைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை உறுதி செய்யும் முழுமையான செயல்முறையை உருவாக்குவது உள்ளது. இது அவசரமானது, ஏனெனில் நம்பகமான அறிக்கைகள் பயிரிடுதல் அதிகரிப்பதையும், நாடு முழுவதும் மெத் ஆய்வகங்கள் (meth labs) தோன்றுவதையும் குறிக்கின்றன. இந்தியாவின் எல்லைகளில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்கள் நடைபெறுவதால், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் விரிவான பயிற்சி திட்டம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். தற்போது போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் முரட்டுத்தனமான வலிமை தாலிபான்களுக்கு உதவியாக இல்லை.
காபூல் 'இயல்பான நிலைக்கு' திரும்ப வர, அது எந்த நகரத்தின் அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் முற்றிலுமாக வறண்டு போகும் நகரமாக காபூல் இருக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது. பல வருட போர்கள் திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காபூல் நதியில் ஷாதூத் அணை கட்டுவதற்கான முந்தைய வாய்ப்பை இந்தியா மீண்டும் வழங்கியுள்ளது. இது பாகிஸ்தானை எச்சரிக்கக்கூடும். ஏனெனில், நதி ஓட்டம் 16% வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காபூல் நதி சிந்து நதி அமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும், தர்க்கரீதியாக அனைத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும். அதாவது, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாமாபாத் மறுப்பது கடினம். தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு மிகவும் விரும்பத்தக்க அண்டை நாடு அல்ல.
அனைவருக்கும் கல்வி
பெண்கள் கல்வி ஒரு முக்கியமான பிரச்சினையாகும். அப்துல் பாக்கி ஹக்கானி போன்ற பெண் கல்விக்கு ஆதரவாக இருந்த சில தாலிபான் தலைவர்கள், மவ்லவி ஹபிபுல்லா ஆகா போன்ற கடுமையானவர்களால் விரைவாக மாற்றப்பட்டனர்.
இந்தக் கொடூரமான நடைமுறையை மாற்றுவது தாலிபான்களை மறுவடிவமைப்பதில் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெளிப்பாட்டை மேம்படுத்தலும் ஆகும். தற்போது, இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் மூலம் மாணவர்களுக்கு 1,000 மின்-உதவித்தொகைகளை (e-scholarships) இந்தியா அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அந்நிய செலாவணி விதிமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் வகையில், இணையவழி விருப்பத்தை அனைத்து முக்கிய கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இந்த முயற்சி இந்தியா முதலீடு செய்யத் திட்டமிடும் பகுதிகளில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, கூட்டு அறிக்கையில், சுரங்கத் தொழில் ஒரு முக்கிய ஆர்வமுள்ள துறையாகும். எனவே, நாட்டில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், குறைந்தபட்ச இந்திய இருப்பு அவசியம். மேலும், இது நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
நிலையான நாட்டின் இலக்கு
இறுதியாக, ‘முழு அரசாங்க’ அணுகுமுறை பற்றிப் பேசுவது பொதுவானது என்றாலும், அது உண்மையில் அரிதாகவே நிகழ்கிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (National Security Council Secretariat) இதை ஒருங்கிணைப்பதுடன், பலப்படுத்தப்படவும் வேண்டும். நிதி, நீர் மற்றும் மின்சாரம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் நட்பாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே குறிப்பிட்ட குறிக்கோள் ஆகும்.
வெவ்வேறு அரசாங்கங்களுக்கு இடையில் குறிக்கோள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இது 'இலக்கைத் தேர்ந்தெடுத்து பராமரித்தல்' என்ற அடிப்படைக் கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும். இந்தியாவின் பொருத்தத்தை நிரந்தரமாக வைத்திருப்பதும், மாறிவரும் கொள்கைகளுடன் அதை மாற்ற விடாமல் இருப்பதும் இதன் குறிக்கோள். இருப்பினும், ஒரு பெரிய சிக்கல் உள்ளது. ஆப்கானிஸ்தானை நிலைப்படுத்துவதில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. அது இன்னும் தாலிபான்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. சாதாரண பாகிஸ்தானியர்கள் நிலைத்தன்மையைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பஷ்டூன்கள் (Pashtuns). அவர்களுக்கு எல்லையைத் தாண்டி வணிக மற்றும் குடும்பத் தொடர்புகள் உள்ளன.
ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருவாய் 10 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு நாடாக இருக்கும்வரை இந்த வருவாய்கள் ஒரு பொருட்டல்ல. பயங்கரவாதத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஒரு நாடு மாற வேண்டுமானால், சர்வதேச சமூகம் பாகிஸ்தானில் முறையான சீர்திருத்தங்களில் ஈடுபட வேண்டும். ஜனநாயகம் என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல. அது நடைமுறையில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் செயல்படுகிறது.
தாரா கர்த்தா, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார்.