உதாரணமாக, சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (National Clean Air Programme) மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை திட்டங்களுடன் இணைப்பது மிகவும் முக்கியம். இது தாமதமின்றி நடக்க வேண்டும்.
2017-ஆம் ஆண்டில், தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy), இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் (non-communicable diseases (NCDs)) மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நோய் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலகளாவிய நோய் சுமை ஆய்வின் அறிக்கை, இந்தக் கொள்கை செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகவும் தெளிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் அமர்ந்து பணி செய்யும் வாழ்க்கை முறைகளின் பாதகமான விளைவுகளை அங்கீகரிக்கும் ஒரு சுகாதார உத்திக்கு இது ஒரு வலுவான வாதத்தை உருவாக்குகிறது. அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியர்கள் நீண்டகாலம் வாழ்ந்தாலும், நாள்பட்ட நோய்கள் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கின்றன.
இந்தியாவில் தொற்றா நோய்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகளுடன் சேர்த்து, உலகளாவிய நோய் சுமை ஆய்வையும் படிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஏறக்குறைய 65 சதவீதத்திற்கும், தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒரு பங்கு பேர் 70 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவிற்கு தோராயமாக 12 சதவீதமாகவும், சீனாவிற்கு 17 சதவீதமாகவும் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இருதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் இந்தியர்களில் பெரும் பகுதியினரின் வாழ்க்கையைக் குறைத்து, அவர்களின் குடும்பங்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
இந்த நோய்களில் சில நோய்களை பற்றி நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு ஆய்வு, அத்தகைய ஒரு நோயான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) மீது கவனத்தை ஈர்க்கிறது - இது நாட்டின் சுவாச நோய்களின் சுமையில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குணப்படுத்த முடியாதது. ஆனால், சிகிச்சையளிக்க முடியாதது அல்ல. மேலும், ஆரம்பகால நோயறிதல் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருப்பதால் மருத்துவர்கள் முறையாக நெறிமுறைகளைப் பின்பற்றாததால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பல நோயாளிகள் சரியாகக் கண்டறியப்படுவதில்லை.
கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறங்களில் சமூக சுகாதார மையங்கள் (community health centres (CHCs)) மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை (primary health centres (PHCs)) அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உலகளாவிய நோய் சுமை ஆய்வு, தேசிய சுகாதாரக் கொள்கையில் உள்ள அடுத்தகட்ட சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்களின் நோயறிதல் நுண்ணறிவை வலுப்படுத்துவது.
மருத்துவ ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் புரிதலை இணைக்கும் அணுகுமுறை நமது நாட்டிற்குத் தேவைப்படுகிறது. மக்கள் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், எடுத்துக்காட்டாக, தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது அவசியம். இதை யாரும் தாமதப்படுத்த முடியாது.