பிரதம மந்திரி வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்

 பிரதம மந்திரி வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களின் (pilot project) முடிவுகளைக் கண்காணிக்க வேண்டும். 


அக்டோபர் 3-ஆம் தேதி அன்று, அரசாங்கம் ஒரு வலைத்தளத்தை தொடங்கியது. இது இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வலைத்தளம் பிரதம மந்திரி  வேலை வாய்ப்புபயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் திறன்களை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின்  முக்கிய நோக்கமாகும். 


இது வேலை தேடும் இளைஞர்களை ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுடன் இணைக்கிறது. ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட இந்த நிதியுதவி திட்டம் இந்தியாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல இளம் தொழிலாளர்களைக் கொண்ட நாட்டில் இளைஞர் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர். 


இந்தத் திட்டம், மாணவர்கள் பெறும் கல்விக்கும், முதலாளிகள் விரும்பும் நடைமுறைத் திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. பயிற்சியின்   முடிவில் இந்நிறுவனங்கள் பயிற்சி முடித்த சான்றிதழை வழங்கலாம். இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆனால், அவர்களால் வேலையைச் செய்ய முடியுமா?


ஒரு முன்னோடித் திட்டத்தின் (pilot project) ஒரு பகுதியாக, 1.25 லட்சம் பயிற்சியாளர்களைக் கொண்ட முதல் குழு டிசம்பர் 2-ஆம் தேதி விருப்பமான நிறுவனங்களுடன் சேர்ந்து தங்களது பயிற்சியை தொடங்கும். திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னும் பின்னும் அரசாங்கம் தொழில் குழுக்களுடன் பேசியுள்ளது. மார்ச் 2029-ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது. முன்னோடித் திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் திட்டத்தின் இறுதி வடிவமைப்பை வடிவமைக்க உதவும். 


விண்ணப்பதாரர்களை நிறுவனங்களுடன் இணைப்பதற்கான ஆரம்ப செயல்முறையின் போது சில புரிதல்கள் தெளிவாக இருக்கும். எவ்வாறாயினும், டிசம்பர் 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கு சென்ற பிறகு தான் முடிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியும். இந்த காலகட்டத்தில் இடைநிற்றல் விகிதங்கள் (dropout rates) மற்றும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டும்.


இருப்பினும் சில சவால்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பயிற்சியாளர்களை அவர்களின் மாவட்டங்களில் வைப்பது அல்லது அது முடியாவிட்டால், அவர்களின் மாநிலங்களுக்குள் வைப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  பீகார் போன்ற குறைந்த தொழில் மயமான மாநிலங்களில் இது எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது அதிக விண்ணப்பதாரர்களை ஈர்க்கக்கூடும்.  இந்தியாவின் உற்பத்தியில் பாதிக்கு மேல் ஐந்து மாநிலங்கள் மட்டுமே பங்களிக்கின்றன. குறைவான வணிகங்களைக் கொண்ட மாநிலங்களில் இளைஞர்களின் வேலையின்மை அதிகமாக உள்ளது.


இந்தத் திட்டத்தில் அடிப்படைத் திறன்களுடன், இன்றைய பணியிடத்திற்கு முக்கியமான டிஜிட்டல் மற்றும் மென்மையான திறன்களையும் இந்தத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். முன்னோடி திட்டத்தின் முன்றேத்தை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த அணுகுமுறைகள் இலக்கை எளிதாக அடைய உதவும்.




Original article:

Share: