ஆயுஸ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டம் எவ்வாறு உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது? -வினோத் கே பால்

 வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்குவதில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியம், நல்வாழ்வு, தேசிய உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடித்தளமாகும்.


பதினெட்டு வயதான ராஜு என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான பணிகளைச் செய்யும்போது மூச்சுத்திணறல் மற்றும் சோர்வாக இருப்பதாக  உணர்ந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து தீவிர இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக அவரது குடும்பம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் கடனில் தள்ளப்பட்டது. ராஜுவின் தந்தை சிகிச்சைக்காக குடும்பத்தின் கால்நடைகளையும் நிலத்தையும் விற்றுவிட்டார். 


2019-ஆம் ஆண்டில், அவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) பற்றிய கடிதம் கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை. 2022-ஆம் ஆண்டில், ராஜுவின் உடல்நிலை மோசமாகி, அவருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. குடும்பம் அவநம்பிக்கை மற்றும் விருப்பங்கள் இல்லாமல் இருந்தது. 


மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா பற்றி பரிந்துரைத்தார். இந்த திட்டத்திற்கான அவரது தகுதி உறுதிப்படுத்தப்பட்டது.  பின்னர் ராஜு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்து, சுமார் ரூ.1.83 லட்சம் காப்பீடு பெற்று 67 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.


நம்பிக்கை, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் இந்தக் கதை ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY)  பயனாளிகளை மையமாகக் கொண்ட பலவற்றில் ஒன்றாகும்.


கடந்த ஆறு ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 7.8 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. மருத்துவமனை செலவுகளால் குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுத்துள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடியின் படி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்புக்கான (Universal Health Coverage (UHC)) இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் காட்டுகிறது.


ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவதும் சுகாதார விநியோகத்தின் அடித்தளமாகும். இது ஒரு பயனாளி குடும்பத்திற்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவையை வழங்குகிறது. தனியார் உடல்நலக் காப்பீட்டாளர்கள் வழங்குவதை ஒப்பிடும்போது இந்தத் தொகை சிறியதாகத் தோன்றலாம். ஆனால், இது மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றும். பொதுவாக, ஒரு குடும்பத்தின் அனைத்து வருடாந்த உள்நோயாளிகளுக்கான பராமரிப்புத் தேவைகளும் இந்தக் காப்பீட்டின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.


இத்திட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் முக்கிய கவனம் பெறுகிறது. வெளிநோயாளர் சேவைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பின் (Universal Health Coverage (UHC))  இந்தப் பகுதியானது ஒரு விரிவான ஆரம்ப சுகாதாரப் பணியின் மூலம் கவனிக்கப்படுகிறது. 1,75,000 க்கும் மேற்பட்ட சுகாதாரமான ஆரோக்கிய மையங்கள் (Ayushman Arogya Mandirs (AAM)), முன்பு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres) என்று அழைக்கப்பட்டன. 


இந்தியாவின் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பின் (Universal Health Coverage (UHC)) மாதிரியானது பொது நிதியுதவியுடன் கூடிய விரிவான ஆரம்ப சுகாதார சேவையை நம்பியுள்ளது. சுகாதாரக் கொள்கை மற்றும் சேவைகளை தனிமையில் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும். இந்தியாவின் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு (UHC) மாதிரியானது பொது நிதியுதவியுடன் கூடிய விரிவான ஆரம்ப சுகாதார சேவையை அடிப்படையாகக் கொண்டது. சுகாதாரக் கொள்கை மற்றும் சேவைகளை தனிமையில் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும்.


இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, ​​ஆரோக்கிய காப்பீடு பாதுகாப்பின் (Health Benefit Package (HBP)) கீழ் நடைமுறைகள் மற்றும் சிகிச்சைக்கான விலைகள் திருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆரோக்கிய காப்பீடு பாதுகாப்புகளின் (HBP) எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 1,393 இல் இருந்து 2022-ஆம் ஆண்டில் 1,949 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைச் செலவுகளில் மாநிலங்களின் வேறுபாடுகளைக் கணக்கிடுவதற்கு வேறுபட்ட விலை நிர்ணயம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளூர் சூழல்களுக்கு ஆரோக்கிய காப்பீடு பாதுகாப்பு (HBP) விகிதங்களைத் தனிப்பட்ட முறையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.


சீரான சேவை வழங்கலை உறுதி செய்யவும், கணினியில் முறைகேடுகளைக் குறைக்கவும், PMJAY தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது காகிதமற்ற மற்றும் பணமில்லா சேவையாகும். இதில், திருப்பிச் செலுத்துதல் அல்லது இணை கட்டணம் எதுவும் இல்லை. பெரும்பாலான கோரிக்கைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டாலும், மாநிலங்களுடன் இணைந்து இந்த செயல்முறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.


இந்தத் திட்டத்தின் வெற்றி மற்றும் மக்கள் நலனுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த ஆண்டு இரண்டு முக்கிய முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளன. தற்போது, இடைக்கால நிதிநிலை அற்க்கையில், சுமார் 37 லட்சம் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் குடும்பங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. கூடுதலாக, இத்திட்டத்தின் பாதுகாப்பை 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 


இந்த மாற்றம் 4.5 கோடி குடும்பங்கள் மற்றும் சுமார் 6 கோடி மூத்த குடிமக்களுக்கு பயன்பெறும். இந்தியாவில் உடல்நலம் குறித்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey (NSS)) 75-வது சுற்று அறிக்கை, இந்த வயதினருக்கான மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் நீண்டகால வயதான ஆய்வு (Longitudinal Ageing Study of India (LASI)) 2021 அறிக்கை, முதியவர்களில் 75 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களைக் கொண்டுள்ளனர். 40 சதவீதம் பேர் சில வகையான மாற்றுத்திறனாளி மற்றும் நான்கில் ஒருவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டது. 


முதியோர்களில் 58 சதவீதம் பேர் வயதான பெண்கள், 54 சதவீதம் பேர் விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்களுக்கான பல தனியார் காப்பீட்டுகளைப் போலன்றி, இத்திட்டம் ஏற்கனவே இருக்கும் நோய்களைக் கொண்ட நபர்களை யாரையும் விலக்கவில்லை. பலன்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு வருடம் காத்திருக்கும் காலத்தையும் இது விதிக்காது. இத்திட்டம் முதியவர்கள் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.


ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) 

திட்டம், பொது மற்றும் தனியார் சுகாதார துறைகளை ஒரே அமைப்பாக இணைக்கிறது. இது 29,000-க்கும் மேற்பட்ட எம்பேனல் மருத்துவமனைகளைக் (empanelled hospitals) கொண்ட பான்-இந்திய இணைப்பைக் (pan India network) கொண்டுள்ளது. இதில், 13,000 தனியார் துறையில் உள்ளது. 


இவற்றில் கிட்டத்தட்ட 25,000 மருத்துவமனைகள் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் அமைந்துள்ளன. 57 சதவீத மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தனியார் துறையில் இந்த துறையின் குறிப்பிடத்தக்க பங்கேற்பைக் காட்டுகிறது.


இந்த திட்டம் பல மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மருத்துவமனைகளில் சேவை வழங்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனைகள் தங்கள் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தியுள்ளன. 


அதிகரித்து வரும் சிகிச்சைக்கான பாதுகாப்பு மற்றும் அதன் முடிவு, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY)  ஆனது அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்தும் திறன் இல்லாததால் முன்பு தேவையற்ற தேவை இருந்த சந்தையை உருவாக்குகிறது.


2022-23 குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் அலகு அளவிலான தரவை (Household Consumption Expenditure Survey) பகுப்பாய்வு செய்த ஒரு பிரபலமான பொருளாதார வல்லுனரின் சமீபத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் நமது மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் மருத்துவச் செலவுகளால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த போக்கு PMJAY திட்டத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.




வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஆரோக்கியம் என்பது நல்வாழ்வு, தேசிய உற்பத்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடித்தளமாகும்.


வினோத் கே பால், எழுத்தாளர் மற்றும் நிதிஆயோக் உறுப்பினர் ஆவார்.




Original article:

Share: