மாநில சிறை கையேடுகளில் உள்ள பாகுபாடான விதிகளை உச்சநீதிமன்றம் ஏன் நிராகரித்தது? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 உச்ச நீதிமன்றம், காலனித்துவ காலத்தைச் சேர்ந்த மாநில சிறைக் கையேடுகளில் (state prison manuals) இருந்து பல விதிகளை ரத்து செய்தது. இந்த விதிகள் கைதிகளிடையே "சாதி வேறுபாடுகளை வலுப்படுத்துகிறது" (reinforce caste differences) மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறியுள்ளது.


அக்டோபர் 3, வியாழக்கிழமை அன்று, மாநில சிறைக் கையேட்டில் உள்ள பல விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த விதிகள் "சாதிய வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துவதுடன், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பாகுபாட்டிற்கு உட்படுத்துகிறது. மேலும், இந்த விதிகளில், பாதிக்கப்பட்ட சமூகங்களாக  காலனித்துவ காலத்தில் இருந்தவர்கள் தற்போதும் "குற்றவியல் பழங்குடியினர்" (criminal tribes) என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இந்த விதிகள் கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்த விதிகளை உச்சநீதிமன்றம் ஏன் இப்போது ரத்து செய்தது?


பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா, இதுபோன்ற நிகழ்வை சுட்டிக்காட்டி, ஒரு மனுவை தாக்கல் செய்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறை கையேடுகளில் பல விதிகளை அவர் மேற்கோள்காட்டினார்.  உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இதில் அடங்கும். இந்த விதிகளின் அடிப்படையில் கைதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறார்கள்? மற்றும் அவர்களுக்கு என்ன வேலை ஒதுக்கப்படுகிறது? என்பதை இந்த விதிகள் குறிப்பிடுகிறது.


இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் 148 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார். இந்த கையேடுகள் சாதி அடிப்படையிலான தொழிலாளர் பிரிவுகளை நிலைநிறுத்தும் மற்றும் சமூக படிநிலைகளை வலுப்படுத்தும். இந்த கையேடுகள் கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சிறைப் பணிகளை ஒதுக்கியுள்ளன.


உதாரணமாக, 1987-ஆம் ஆண்டின் மத்தியப் பிரதேச சிறைக் கையேட்டில், 'மேத்தர்' (Mehtar) வகுப்பைச் சேர்ந்த, பட்டியல் வகுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. இதில், வழக்கமான சுத்தம் செய்வதற்கு 'கழிவறை வரிசைகளின்' (latrine parades) ஒரு பகுதியாக, அவர்கள் சிறிய பாத்திரங்களை பெரிய இரும்பு டிரம்களாக காலி செய்து, சுத்தம் செய்த பிறகு அவற்றை மாற்ற வேண்டியிருந்தது.


இதேபோல், மேற்கு வங்க சிறைச் சட்ட விதிகள்-1967 இன் (West Bengal Jail Code Rules), கீழ், சில வேலைகள் வெளிப்படையாக சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. சிறைச்செல்களில் உள்ள குறைபாடு (Sickness in cells) தொடர்பான விதி 741, “ஒரு சிறை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், குறிப்பிட்ட  வகுப்பைச் சேர்ந்த கைதிகள் மூலம் உணவு சமைக்கப்பட்டு, அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறுகிறது.


இதில் உள்ள அனைத்து விதிகளும் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் சிறை கையேடுகளை மூன்று மாதங்களுக்குள் திருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், சாதிப் பாகுபாட்டைக் கருத்தில் கொண்டு விதிகளின் மாற்றங்களைச் செய்யுமாறும் ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மாதிரி சிறைச்சாலை கையேடு-2016 இல் (Model Prison Manual) வரைவு மாதிரி சிறைகள் (draft Model Prisons) மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம்-2023 (Correctional Services Act) ஆகிய இரண்டிலும் ஒரே காலக்கெடுவுக்குள் செய்யப்பட வேண்டும்.


சிறை கையேடுகள் சாதி மற்றும் காலனித்துவ முறைகளை எவ்வாறு வலுப்படுத்துகின்றன?


1871-ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் அடிப்படையில் அடிமையானவர்கள் எனக் கருதப்பட்டால், எந்தவொரு சமூகத்தையும் "குற்றவியல் பழங்குடியினர்" (criminal tribes) என்று அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பழங்குடியின குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். இது சில பாதிக்கப்பட்ட சமூகங்கள் பிறப்பால் குற்றவாளிகள் (born criminals) என்ற மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.


பல மாற்றங்களுக்குப் பிறகு, குற்றவியல் பழங்குடியினர் சட்டம்-1952 இல் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் "குற்றப் பழங்குடியினர்" (criminal tribe) பின்னர் "சீர்மரபினர்” (Denotified Tribes) என்று அழைக்கப்பட்டனர். எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின்படி, கையேடுகள்/விதிகள், பழக்கவழக்கமான மற்றும் பழக்கமில்லாத குற்றவாளிகளுக்கு இடையேயான வகைப்பாட்டின் மூலம் சீர்மரபினருக்கு (Denotified Tribes) எதிரான ஒரே மாதிரியான கொள்கைகளை வலுப்படுத்துகின்றன.


நீதிமன்றம் மத்தியப் பிரதேசத்தை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறது. அங்கு சீர்மரபினரின் (Denotified Tribes) குழுவின் எந்தவொரு நபரும் மாநில அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டு வழக்கமான குற்றவாளியாகக் கருதப்படலாம் என்று விதி 411 குறிப்பிடுகிறது. ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள விதிகள் ஒரு நபரை  வழக்கமாக குற்றம் புரிபவர் (habitual criminal) என்று முத்திரை அளிக்கிறது. 


 இவர் முந்தைய குற்றச்சாட்டால் தண்டனை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இது பொருந்தும். அந்த நபர், பழக்கவழக்கத்தால், கொள்ளையர்கள், திருடர்கள் அல்லது திருடப்பட்ட சொத்தில் வியாபாரம் செய்யும் ஒரு கும்பலின் உறுப்பினராகக் கருதப்படலாம்.


மேற்கு வங்க சிறைச்சாலை விதிகள் (West Bengal Jail Code Rules), கைதிகளை முறையே பழக்கமான குற்றவாளிகளா இல்லையா என்பதன் அடிப்படையில் ‘பி’ அல்லது ‘ஏ’ வகுப்புகளாக வகைப்படுத்துகின்றன.






கைதிகளின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்தல்


சாந்தா முன்னிலைப்படுத்திய விதிகள் எவ்வாறு பல அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என்பதை உச்ச நீதிமன்றம் விளக்கியது. இந்த உரிமைகள் இந்திய அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.


பிரிவு-14 சமத்துவ உரிமை : சாதி பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே சாதியை வகைப்படுத்தலாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், கைதிகளை சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சாதிய வேறுபாடுகள் மற்றும் பகைமையை வலுப்படுத்தும் என்றும், இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த வகைப்பாடு சில கைதிகளுக்கு அவர்களின் திருத்தத்திற்கு தேவைகளை மதிப்பிடுவதற்கான சம வாய்ப்புகளை மறுக்கும்.  இதன் விளைவாக, அது சீர்திருத்தத்திற்கான அவர்களின் வாய்ப்புகளை குறைக்கும்.


பிரிவு-15 பாகுபாட்டிற்கு எதிரான உரிமை : சிறை கையேடுகள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டு வழிகளில் பாகுபாடு காட்டுகின்றன என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதில், “உயர் வகுப்பினர் சமையல் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துப்புரவு மற்றும் தூய்மை பணியை வழங்குவதன் மூலம், சிறை கையேடுகள் நேரடியாக பாகுபாடு காட்டுகின்றன. 


கூடுதலாக, நீதிமன்றம் குறிப்பிட்டதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் வழக்கமான அடிப்படையில் குறிப்பிட்ட வகையான வேலைகளை வழங்குவதன் மூலம், சிறைக் கையேடுகள் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் திறமையற்றவர்கள் அல்லது திறமையான, கண்ணியமான அல்லது அறிவுசார் வேலைகளுக்கு தகுதியற்றவர்கள் என்ற ஒரே மாதிரியான கருத்தை நிலைநிறுத்துகின்றன.  இந்த நடைமுறை மறைமுக பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது.


பிரிவு-17 தீண்டாமை ஒழிப்பு : சிறைச்சாலைகளில் தீண்டாமை எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் தொடர்ச்சியான விதிகளை நீதிமன்றம் மீண்டும் குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில், ஒரு குற்றவாளி "ஒரு குறிப்பிட்ட வகுப்பையோ அல்லது சமூகத்தையோ சார்ந்தவர்களைத் தவிர, கீழ்த்தரமான அல்லது கீழ்மட்ட வேலைகளைச் செய்ய அழைக்கப்படமாட்டார்கள்" என்று ஒரு விதி கூறுகிறது. இதன் அடிப்படையில் ஒரு வேலையானது, "இழிவானது அல்லது தரம் தாழ்ந்தது" என்ற கருத்து சாதி அமைப்பு மற்றும் தீண்டாமையை பிரதிபலிக்கிறது என்று நீதிமன்றம் பதிலளித்துள்ளது.


பிரிவு-21 கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை : சட்டப்பிரிவு 21-ன் கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது தனிமனித ஆளுமையின் வளர்ச்சியை உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கான சாதி பாகுபாடுத் தடைகளைக் கடக்கும் உரிமையையும் ஆதரிக்கிறது. 


சிறை கையேடுகளில் உள்ள விதிகள் இந்த சமூகங்களைச் சேர்ந்த கைதிகளின் சீர்திருத்தத்தை கட்டுப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. கூடுதலாக, இந்த விதிகள் பிற்படுத்தப்பட்ட குழுக்களிடமிருந்து கைதிகளின் கண்ணியத்தையும் சமமாக நடத்தும் எதிர்பார்ப்பையும் இழக்கின்றன. இது அவர்களின் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறுகிறது.


பிரிவு-23 கட்டாய உழைப்புக்குத் தடை : வெவ்வேறு சமுகங்களிடையே வேலை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்றம் விவாதித்தது. சில சமூகங்களுக்கு விரும்பத் தகுந்த வேலைகள் ஒதுக்கீடு  செய்வதாகவும், பட்டியலிடப்பட்ட சமூகங்களுக்கு விரும்பத்தகாத (undesirable) வேலைகள் ஒதுக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது. பட்டியலிடப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மீது விரும்பத்தகாத வேலைகள் ஒதுக்கீடு செய்வது அல்லது வேலையைத் திணிப்பது பிரிவு-23 இன் கீழ் 'கட்டாய வேலை' (forced labor) என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


Original article:

Share: