வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் (Colombo Security Conclave (CSC)) உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஆகஸ்ட் 30, 2024 அன்று, கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஒரு முக்கியமான மைல் கல்லை எட்டியது. இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் ஆகியவை கொழும்பு பாதுகாப்பு மாநாடு செயலகத்தை அமைப்பதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சமீபத்தில் குழுவில் இணைந்த பங்களாதேஷ் கலந்து கொள்ளவில்லை, அதற்கு தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சீஷெல்ஸ் ஒரு பார்வையாளர் நாடாக பங்கேற்றது.
வங்காள விரிகுடா ஒரு ராஜதந்திர மேலாண்மை (Bay of Bengal as strategic theatre)
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் சசாதனையானது குழுமம் உருவாக்கப்பட்டதில் இருந்து அதன் இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுகிறது. வங்காள விரிகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலை உள்ளடக்கிய பகுதிகளை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. வங்காள விரிகுடா இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பகுதியாகும். மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மாறிவரும் இன்றைய உலக அரசியலில், பிராந்திய மாநாடுகள் (regional forums) செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் முக்கிய கருவிகளாக மாறிவிட்டன. இந்த மாநாடுகள் பொதுவான பிரச்சினைகளுக்கு பிராந்திய அணுகுமுறையை வடிவமைக்க உதவுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த வலுவான அமைப்புகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில், பிம்ஸ்டெக் அமைப்பு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)) ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய மன்றமாக உள்ளது. இருப்பினும், பிம்ஸ்டெக் அமைப்பு முக்கியமாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பு பிரச்சினைகளில் சிறிய கவனம் செலுத்துகிறது. வங்காள விரிகுடாவில் பிராந்திய பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ஒரு மன்றத்தை இந்தியா உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த இடைவெளி எடுத்துக்காட்டுகிறது.
இந்த சூழலில், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) நிலையான முன்னேற்றம், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தியா மற்றும் பிற உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது. கொழும்பு பாதுகாப்பு மாநாடு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. அவை,
கடல்சார் பாதுகாப்பு
தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல்
கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்
சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தைப் பாதுகாத்தல்
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற துறைகளில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழ் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு வங்காள விரிகுடா பகுதியில் எதிர்கொள்ளும் கடல் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உதவும்.
சீனாவின் நடவடிக்கைகள்
வங்காள விரிகுடாவின் பாதுகாப்பு இந்தியாவிற்கு முக்கியமானது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படைப் ஊடுருவல் மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவது இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சீனா ஆர்வமாக உள்ளது. தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டைப் பெற பலத்தைப் பயன்படுத்துவதற்கான அதன் விருப்பத்தைக் காட்டுகின்றன.
சீனப் போர்க்கப்பல்கள், ஆராய்ச்சிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இப்போது இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைகின்றன. சீனா முக்கிய பங்கை வகிக்க விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க கடற்படை இருப்பைக் கொண்டிருக்க விரும்புகிறது என்பதை இது குறிக்கிறது. வங்காள விரிகுடா தென் சீனக் கடலை பரந்த இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இவை இந்தியாவின் கடல்சார் நலன்களுக்கு முக்கியமானது.
தென்சீனக் கடலில் சீனா வலுவாக இருந்தாலும், இந்தியப் பெருங்கடலில் அதன் ராஜதந்திர நடவடிக்கைகள் மிகவும் நுட்பமானது. இது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதன் கடற்படை இருப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வங்காள விரிகுடா பகுதிகளில் அடிக்கடி பருவநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்த விவகாரங்கள் வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
திருத்தப்பட்ட கண்ணோட்டம் (Revised outlook)
கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave (CSC)) 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை செயல்படாமல் இருந்தது. இருப்பினும், அதன் மறுபடி செயல்பட ஆர்வமாக இருந்து. மேலும், அதன் உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வலுவான விருப்பத்தை அது வெளிப்படுத்தியுள்ளது மற்றும் அதன் உறுப்பினர்களை விரிவுபடுத்தியுள்ளது. ஆரம்பத்தில், கொழும்பு பாதுகாப்பு மாநாடு இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளை நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டுள்ளது. பின்னர், வங்கதேசம் மற்றும் மொரிசியஸ் நாட்டை சேர்த்து. கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (CSC) வங்காள விரிகுடாவின் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்காள விரிகுடாவில் கணிசமான பாதுகாப்பு சவால்கள் இருந்தபோதிலும், வங்காள விரிகுடாவில் பிராந்திய ஒத்துழைப்புக்கான பாதுகாப்பு-மையப்படுத்தப்பட்ட மன்றம் தற்போது இல்லை.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் மூலம் (CSC) அவசர பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்யும் ஒரு மன்றத்தை நிறுவுவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, வங்காள விரிகுடாவில் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்கு கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave (CSC)) உதவுகிறது. இது கடுமையான கடல்சார் பாதுகாப்பு சவால்களை தொடர்ந்து எதிர்கொள்ளக்கூடும்.
சயந்தன் ஹல்தார், கடல்சார் ஆய்வுகள் ஆராய்ச்சி உதவியாளர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்.