இரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இந்த மசோதா வந்துள்ளது. மக்கள்தொகை நெருக்கடி "மிரட்டுவதாக" உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இருப்பினும், இந்த போக்கு நாட்டிற்கு தனித்துவமானது அல்ல.
செவ்வாய்க்கிழமை நவம்பர் 12 அன்று, இரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையானது, நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்த மசோதா, "தானாக முன்வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதது பற்றிய பிரச்சாரத்தை" தடை செய்கிறது. இந்த நடவடிக்கை நாட்டில் பிறப்பு விகிதம் குறைவதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்கள்தொகை தொடர்பான சவால்களை எதிர்த்துப் போராடும் ஒரே நாடு ரஷ்யா அல்ல என்றாலும், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் "பாரம்பரியமான ரஷ்ய மதிப்புகளுக்கு" (traditional Russian value) பெரிய உந்துதலுக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகமாகிறது. இது மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்ததாகக் கூறும் "அழிவுகரமான சித்தாந்தங்களை" (destructive ideologies) கண்டனம் செய்கிறது. மேலும், இந்த மசோதா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியன கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
என்ன சட்டம்?
இரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான TASS-ன் கூற்றுப்படி, இந்த சட்டம் தானாக முன்வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதது தொடர்பான தகவல்களை குறிவைக்கும். இதில், இணையம், ஊடகம், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் உள்ள உள்ளடக்கம் அடங்கும். நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின், "குழந்தை வேண்டாமை சித்தாந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரைப் பாதுகாப்பது முக்கியம்" என்றார். இருப்பினும், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பெண்களை இந்த சட்டம் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் 17 அன்று, ஒரு புதிய சட்டத்தின் முதல் வாசிப்பு நடைபெற்றது. இதில், குழந்தைகளைப் பெறுவதற்கு எதிராக "கொள்கை பிரச்சாரத்தை" பரப்பும் எவருக்கும் கடுமையான தடைகளை இந்தச் சட்டம் முன்மொழிகிறது. இத்தகைய பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக தனிநபர்கள் 400,000 ரூபிள் ($4,100) வரை அபராதம் விதிக்கலாம். மேலும், குழந்தை இல்லாத இயக்கத்தை ஆதரிக்கும் வெளிநாட்டினரையும் இந்த சட்டத்தின் மூலம், அவர்களுக்கு 100,000 ரூபிள் ($1,000) வரை அபராதம் விதிக்கவும் மற்றும் நாடு கடத்தப்படுவதும் நிகழலாம்.
நாடாளுமன்றத்தின் கீழவையான ஸ்டேட் டுமா (State Duma), முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூன்றாவது மற்றும் இறுதி வாசிப்புக்கு ஒப்புதல் அளித்தது. இது இப்போது மேலவையான கூட்டமைப்பு கவுன்சிலால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் புதினால் அங்கீகரிக்கப்படும்.
குழந்தை வேண்டாமை பிரச்சாரத்திற்கு எதிரான சட்டம், மேற்கத்திய நாடுகளிலிருந்து வருவதாக கிரெம்ளின் கூறும் "அழிவுகரமான சித்தாந்தங்களை" எதிர்த்துப் போராட ரஷ்ய அரசாங்கத்தின் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில், பாரம்பரியமற்ற பாலியல் உறவுகள் மற்றும் பாலின மறுசீரமைப்பை ஊக்குவிப்பதற்கான தண்டனைகளுடன் இந்த சட்டம் இணங்குகிறது என்று இரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, இந்த யோசனைகள் புதினின் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அவர், 2000-ம் ஆண்டு முதல் புதின் ரஷ்யாவில் அதிகளவில் அதிகாரத்தை ஒருங்கிணைத்து வருகிறார். அவரது கொள்கைகள் பொருளாதார நலன்களால் மட்டுமல்ல, தூய்மையான, இராணுவமயமாக்கப்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது விருப்பத்தாலும் இயக்கப்படுகின்றன. இந்த சமூகம் தேசியவாதம் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தை (Orthodox Christianity) அடிப்படையாகக் கொண்டது. மேற்கத்திய நாடுகளுடன் நாகரீக மோதலில் தன்னைப் பார்க்கிறது.
இதுவரை, ரஷ்ய அரசாங்கம் பெண்ணியவாதிகள், LGBTQ+ ஆர்வலர்கள் மற்றும் சுதந்திரமான பத்திரிகையாளர்களை வெளிநாட்டு முகவர்கள், தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கருக்கலைப்புக்கான அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. ரஷ்ய அமைச்சர்கள் பெண்கள் உயர்கல்வியைத் தொடராமல், 18 வயதிலேயே குடும்பத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள்தொகை நெருக்கடியான சூழ்நிலையில் "முக்கிய நிலையாக" உள்ளது என்று புதின் பலமுறை கூறியுள்ளார். குறிப்பாக, உக்ரைனுடனான போரின் பின்னணியில் இது ஒரு முக்கியமான தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடி
அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி, 2024-ம் ஆண்டின் முதல் பாதியில், ரஷ்யாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 599,600 ஆக இருந்தது. இது 1999-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில், நாடு 98,600 ஆக நேரடி பிறப்புகளின் எண்ணிக்கையில் 6% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், முதன் முறையாக இந்த எண்ணிக்கை 100,000-க்கும் கீழே குறைந்துள்ளது.
ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவு இந்த ஆண்டு 18% அதிகரித்துள்ளது. முதல் ஆறு மாதங்களில், 325,100 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 49,000 அதிகமாகும். இறப்புகளின் அதிகரிப்பு முக்கியமாக உக்ரைன் போரில் முன்னணி உயிரிழப்புகளால் ஏற்படுகிறது.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், இறப்பு விகிதம் அதிகரிப்பதாலும், வயதானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். மிகவும் வெளிப்படையான தாக்கம் தொழிலாளர் சந்தையில் உள்ளது. ரஷ்யாவின் இராணுவ மற்றும் தொழில்துறை இரண்டும் அதே சுருங்கி வரும் தொழிலாளர்களுக்கு போட்டியிடுகின்றன. இது குறைந்த உற்பத்தி மற்றும் பொருளாதார உற்பத்தியை விளைவித்துள்ளது.
2023-ம் ஆண்டில், ரஷ்ய தொழிலாளர் அமைச்சர் அன்டன் கோட்யாகோவ், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக உணரப்பட்டதாகக் குறிப்பிட்டார் என்று ரஷ்யாவின் இஸ்வெஸ்டியா செய்தித்தாளின் அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, தற்போதைய மக்கள்தொகை போக்குகள் தொடர்ந்தால், பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் 0.5% வீழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற பல வளர்ந்த நாடுகள் சமீபத்தில் குறைந்த பிறப்பு விகிதத்தை எதிர்கொள்கின்றன. சில பிரச்சினைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்டவை. உதாரணமாக, சீனாவில் 1980 முதல் 2016 வரை கட்டாய ஒரு குழந்தை கொள்கை இருந்தது. ரஷ்யாவைப் பொறுத்தவரை, அட்லாண்டிக் கவுன்சில் அறிக்கையில், "வரையறுக்கப்பட்ட குடியேற்றம் மற்றும் தொடர்ச்சியான மூளை வெளியேற்றம்" ஆகியவை முக்கியமான காரணிகளாக மேற்கோள் காட்டியது.
பொதுவாக, நாடுகள் அடிப்படை சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதாலும், பெண்கள் கல்வி பெறுவதாலும், தங்கள் வாழ்க்கையைப் பற்றி முடிவுகளை எடுக்க முடியும் என்பதாலும் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைகின்றன. அதிகரித்து வரும் நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலுடன் பல பிராந்தியங்களில் உள்ளது போல, வாழ்க்கைக்கானச் செலவு அதிகரித்தால், குழந்தை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகிறது.
குடும்பங்களின் பாதுகாப்புக்கான டூமாவின் குழுவின் தலைவரான நினா ஓஸ்டானினா, செப்டம்பர் மாதம் மாநில செய்தி நிறுவனமான RIA-விடம், பிறப்பு விகிதத்தை மேம்படுத்த ஒரு "சிறப்பு மக்கள்தொகை நடவடிக்கை" தேவை என்று கூறினார்.