இந்தியாவில் மாந்திரீகம் (witchcraft) பற்றிய குற்றச்சாட்டுகள் ஏன் தொடர்கின்றன? - பிபேக் டெப்ராய்

 நாட்டின் பல பகுதிகளில், மனநலம் குறைபாடுள்ள பெண்களை மந்திரவாதிகள் (witches) என்று அழைப்பது சமூகத்தின் தோல்வியையும், சட்டத்தில் உள்ள குறைகளையும் காட்டுகிறது.


ஜூலை 2021-ல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்  மாந்திரீக குற்றச்சாட்டுகள் மற்றும் சடங்கு தாக்குதல்கள் (harmful practices related to accusations of witchcraft and ritual attacks (HPAWR)) தொடர்பான தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 60 நாடுகளில் 2009 முதல் 2019 வரை மாந்திரீக குற்றச்சாட்டுகள் மற்றும் சடங்கு தாக்குதல் வழக்குகள் நடந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தரவு என்று கூறுகிறது. மொத்த வழக்கு எண்ணிக்கை 20,000 ஆகும். ஆனால், பல வழக்குகள் பதிவு செய்யப்படாதவை மற்றும் ஆவணப்படுத்தப்படாதவை. இந்த பிரச்சினை ஆப்பிரிக்காவில் மட்டுமே இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிடுகிறது. ஆப்பிரிக்காவில் இது மிகவும் தீவிரமாக இருக்கும்போது, ​​​​அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிலும் மாந்திரீக குற்றச்சாட்டுகள் மற்றும் சடங்கு தாக்குதல்கள் நடப்பதாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது.


1953-முதல், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) இந்தியாவில் குற்றத் தரவுகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது "கொலைக்கான நோக்கங்கள்" (‘motives for murder’) என்ற வகையில் மற்றும் மாந்திரீகத்தைக் குறிப்பிடுகிறது. 2022-ஆம் ஆண்டில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் மாந்திரீகம் தொடர்பாக 85 கொலைகள் நடந்துள்ளன. அசாம், பீகார் மற்றும் தெலுங்கானாவிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற கொலைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாம். ஆனால், மாந்திரீகத்தின் காரணமாக ஆண்டுக்கு 100 வழக்குகள் பதிவாகின்றன.


"மாந்திரீகம்” (‘witch’) என்ற சொல் பாலின-நடுநிலையானது. இந்த சொல் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் பொதுவானது. கொல்கத்தா வட்டாரங்களில் அறியப்படும் இப்சிதா ராய் சக்ரவர்த்தி, தன்னை ஒரு நல்ல மாந்திரீகவாதி என்று கூறிக்கொள்கிறார். இந்த எதிர்மறையான பார்வை ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்தப் பயன்படுகிறது. இருப்பினும் எப்போதும் கொலைக்கு வழிவகுக்காது.


சில சூழல்களில், கல்வியின்மை மற்றும் அறியாமை ஆகியவை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மாந்திரீகவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கிறது.  குறிப்பாக சமூகத்தில் மனநலம் சார்ந்த நோய் இருக்கும்போது, அவர்களுக்கு பல்வேறு சிரமங்களை அளிக்கும் வகையில், கணவனை இழந்தோர் மற்றும் ஒற்றைப் பெண்கள், குறிப்பாக சொத்து உள்ளவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். குழந்தை இல்லாத பெண்களும், படித்த இளம் பெண்களும் உள்ளூர் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுவதும் உண்டு.


உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட கலா சாச் திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மாந்திரீக-வேட்டை பழக்கங்களை நாம் என்ன செய்வது? கல்வி மற்றும் விழிப்புணர்வின் பரவலைப் பொறுத்து? தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பஞ்சாயத்துகளை சார்ந்திருக்குமா? மாந்திரீகவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் "கரிமா திட்டம்" (Project Garima) உள்ளது. அசாமில் சமூக-காவல்துறை முன்முயற்சியான “பிரஹாரி திட்டம்” (Project Prahari) உள்ளது. வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் ஒரு நாடு பிரச்சனையைப் பற்றி அதிகம் பேச வேண்டுமா அல்லது காலப்போக்கில் பிரச்சனை சரியாகிவிடும் என்று நம்ப வேண்டுமா?


அரசியலமைப்பு, இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code (IPC)) மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டங்கள் மாந்திரீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்படலாம். இருப்பினும், சில மாநிலங்கள் அவற்றின் சொந்த பிரத்தியேக சட்டங்களை இயற்றியுள்ளன. பீகார்  மாநிலம் மாந்திரகவாதி (டாயின்) நடைமுறைகள் தடுப்புச் சட்டம் 1993-ல்  கொண்டுவரப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் மாந்திரகவாதி (டாயின்) நடைமுறைகள் தடுப்புச் சட்டம் 2001-ல் அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் தோனாஹி பிரதத்ன நிவாரண சட்டம் (Tonahi Pratadna Nivaran Act,2005) 2005-ல் அறிமுகப்படுத்தியது.  ஒடிசா மாநிலம்  மாந்திரீக-வேட்டை தடுப்புச் சட்டத்தை 2013-ல் அறிமுகப்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் பிளாக் மேஜிக் சட்டம் (2013) தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டத்தை 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. கர்நாடகா, மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் மற்றும் மாந்திரீகவாதி தடுப்புச் சட்டத்தை 2017-ல் அறிமுகப்படுத்தியது.  ராஜஸ்தான் மாநிலம்  மாந்திரீக-வேட்டை தடுப்புச் சட்டத்தை 2015-ல் அறிமுகப்படுத்தியது. அசாம் மாநிலம் மாந்திரீகவாதி வேட்டை (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை 2015-ல் அறிமுகப்படுத்தியது.  

  

சட்டங்களின் நோக்கம் எப்போதும் தெளிவாக இல்லை. உதாரணத்திற்கு, ஒடிசாவின் சட்டம் மாந்திரீக வேட்டை மற்றும் மாந்திரீகப் பயிற்சி ஆகிய இரண்டிலும் ஈடுபடுவோரை தண்டிக்கின்றது. அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டங்கள் மாந்திரகவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கின்றன. ராஜஸ்தான் சம்பந்தப்பட்ட சமூகங்கள் அல்லது குழுக்களுக்கு அபராதம் விதிக்கிறது. மகாராஷ்டிராவின் சட்டம் மாந்திரகத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிக்கிறது. இந்த மாநில சட்டங்கள் பெரும்பாலும் பல்வேறு சிக்கல்களை ஒன்றாகக் கலந்து, அவற்றின் குறிப்பிட்ட நோக்கங்களை வேறுபடுத்துவது கடினமாகிறது.


சிக்கலைத் தீர்க்க:


குற்றங்களை வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் மாந்திரீகத்தை வேட்டையாடுவதை நாம் தெளிவாகப் பிரிக்க வேண்டும். மாந்திரீகம் மற்றும் மாந்திரீக-வேட்டை குற்றங்களுக்காக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) தனித்தனி பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தைப் புதுப்பிக்கவும். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் அதன் மாற்று மாந்திரீகம் மற்றும் மாந்திரீக-வேட்டை குற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் குறிப்பிட்ட பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, காவல்துறை சீர்திருத்தம் மற்றும் மெதுவான குற்றவியல் நடைமுறைகள் ஆகியவற்றால் சட்டம் தடைபட்டால் பயனுள்ளதாக இருக்காது. மாந்திரீகம் தொடர்பான பிரச்சினைகள் இந்தியாவின் கிராமப்புறங்களில் தொடர்ந்து வருகிறது. நகர்ப்புற மக்களுக்கு மாந்திரீகம்  பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. 


எழுத்தாளர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council) தலைவராக உள்ளார்.



Original article:

Share: