வினேஷ், ஒலிம்பிக், தகுதி நீக்கம் : எடை குறைப்பு என்றால் என்ன? ஏன் அது சர்ச்சைக்குரியதாக மாறியது? -அர்ஜுன் சென்குப்தா

 எடை குறைப்பு என்பது மல்யுத்த விளையாட்டுகளில் ஒரு பொதுவான நடைமுறை. ஆனால், எடை குறைப்பு பல  எதிர்ப்புகளைக் கொண்டுள்ளது. குறுகிய காலத்தில், உடல் எடையை குறைப்பதால் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னதாக, காலையில் நடைபெற்ற  எடையிடுதல் நிகழ்வுக்கு பிறகு அதிகாரப்பூர்மாக  தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


போட்டியன்று காலையில் வினேஷ் போகத் எடையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள்  இருப்பது கண்டறியப்பட்டது. முதல் நாள் இரவு அவர் 2 கிலோ அதிக எடையுடன் இருந்ததாகவும், அவர் எடையை இரவு முழுவதும் குறைக்க முயன்றும் அவரால் எடை குறைப்பு செய்ய முடியவில்லை எனவும் தெரிகிறது. வினேஷ் போகத்தின் நிலைமை, மல்யுத்த விளையாட்டுகளில் உள்ள எடை குறைப்பு எனும் ஒரு பெரிய சிக்கலைக் காட்டுகிறது. சமீபகாலமாக, விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிக்கு முன்பு உடல் எடையை கடுமையாகக் குறைத்து, பின்பு எடை அதிகரிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ, கலப்பு தற்காப்புக் கலைகள், முதலியன அவர்களின் எடை பிரிவுகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது நியாயமான போட்டி முறைகளை உருவாக்க செய்யப்படுகின்றன. ஒரே மாதிரியான எடை கொண்ட விளையாட்டு வீரர்கள் ஒரே மாதிரியான உடல் பண்புகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எடை பிரிவுகள் இல்லாமல் இருந்தால் அதிக எடை கொண்டவர்கள், குறைவான எடை கொண்டவர்கள் திறமையானவர்களாகவும் இருந்தாலும் அவர்களை  எளிதில் வீழ்த்திவிடலாம்.


ஒரு குறிப்பிட்ட எடை வகுப்பில் உள்ள விளையாட்டு வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும். இருப்பினும், ஒருவரின் எடை எப்போதும் நிலையானது அல்ல. ஆனால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, தண்ணீர், மேற்கொள்ளும் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் பிற உடல் செயல்பாடுகள் வரை பல காரணிகளைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும்.  மேலும், ஒரு போட்டி முழுவதும் ஒரு தடகள வீரரின் எடையை தொடர்ந்து கண்காணிப்பது என்பது நடைமுறைக்கு மாறானது. விளையாட்டு வீரர்கள் தங்கள் எடை வகுப்பு பிரிவுகளை உறுதிசெய்ய, மல்யுத்த விளையாட்டுகளில் எடை சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர். 


ஐக்கிய உலக மல்யுத்தம் (United World  Wrestling’s) ஒலிம்பிக்ஸ் விதிகளின்படி, மல்யுத்த வீரர்கள் தங்கள் போட்டியன்று காலையில் எடையிடப்படுகிறார்கள். ஒலிம்பிக் போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெறுவதால், இரண்டு எடை அளவு முறைகள் உள்ளன. முதல் நாள் 30 நிமிடங்களும் இரண்டாம் நாள் 15 நிமிடங்கள் இடைவெளியில் எடையிடப்படுகின்றனர். 


மற்ற விளையாட்டுகள் அல்லது போட்டிகள் எடையிடல் தொடர்பாக வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். உண்மையில், ப்ரோ குத்துச்சண்டை (pro boxing) அல்லது தற்காப்புக் கலைகள் போன்ற விளையாட்டுகளில் சண்டையிடுவதற்கு அவர்களின் எடை நிறுத்தங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தடகள வீரர்களை எடை போடுவதையும், அவர்கள் தங்கள் போட்டியாளருடன்  நேருக்கு நேர் மோதுவதையும் பார்க்கிறார்கள்..


எடை குறைப்பு என்றால் என்ன? மோதல் விளையாட்டு வீரர்கள் ஏன் எடை குறைக்கிறார்கள்?


எடை குறைப்பு என்பது விளையாட்டு வீரர்கள் குறுகிய காலத்தில் தங்கள் எடையைக் கடுமையாக குறைப்பது ஆகும். எடையிடும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடையை உருவாக்க விளையாட்டு வீரர்களால் இது செய்யப்படுகிறது.


பெரும்பாலான மல்யுத்த விளையாட்டு வீரர்கள், ஒரு போட்டிக்கு முன் எடையைக் குறைத்து,  குறைவான  எடையுடன் இருப்பது அவர்களுக்கு நன்மையை அளிக்கிறது என்று நம்புகிறார்கள்.  எடை குறைப்பு என்பது உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதை உள்ளடக்கியது. வியர்வை வெளியேற்றுதன்  மூலம்  எடையைக் குறைக்கலாம். எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் விளையாட்டு வீரர்கள் எடையிடுவதற்கு முன், தண்ணீர் குடிப்பதில்லை, எடை அதிகமுள்ள ஆடைகளை அணிவதில்லை, எந்த உணவையும் உட்கொள்ள மாட்டார்கள்.


எடையிடுதலுக்குப் பிறகு, விளையாட்டு வீரர்கள் நிறைய திரவங்களை குடிப்பதன் மூலமும், அதிக கார்போஹைட்ரேட்டு உணவுகளை உட்கொள்வதன் மூலமும் விரைவாக எடையை மீட்டெடுக்க முடியும். இது வழக்கமாக பல மணிநேரங்கள் அல்லது ஒரு நாள் கழித்து நடக்கும் சண்டையில் ஒரு நன்மையை தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இதை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் இன்னும் தெளிவாக இல்லை.


எடை குறைப்பதால் ஏற்படக்கூடிய சில தீங்குகள் என்ன?


ஒரு விளையாட்டு வீரர் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் ஒரு குறுகிய காலத்தில் எவ்வளவு எடையை பாதுகாப்பாக குறைக்க முடியும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. சில சமயங்களில் உயர்மட்ட செயல்திறன் விளையாட்டுகளில், விளையாட்டு வீரர்கள் ஆபத்தான முடிவுகளுடன்  இந்த வரம்புகளைத் தளர்த்தலாம்.


2018-ஆம் ஆண்டில்,  அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (Ultimate Fighting Championship (UFC))  பங்கு பெற்ற போட்டியாளர் உரியா ஹால் (Uriah Hall) எடை குறைப்பின் போது "சிறிய அளவிலான வலிப்பு" மற்றும் "லேசான மாரடைப்பால்" பாதிக்கப்பட்டார் என்று அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்யின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 2015-ஆம் ஆண்டில், ஒன் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட சீன குத்துச்சண்டை போட்டியாளர் யாங் ஜியான் பிங் (Yang Jian Bing) எடையைக் குறைக்கும் போது நீரிழப்பு காரணமாக இறந்தார்.


கடுமையான நீரிழப்பு, எடை இழப்பு போன்றவை கடுமையான இருதய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உருவ அமைப்பை மாற்றுகிறது. வெப்ப பக்கவாதம் (heat stroke) போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் ஓ ஆர் பார்லி (O R Barley), டி டபிள்யூ. சாப்மேன் (D W. Chapman) மற்றும் கிறிஸ் அபிஸ் (Chris Abbiss) ஆகியோர் ஸ்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், தீவிர எடை குறைப்பு,  ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் உணர்திறன் மாற்றங்கள், எலும்பு இழப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றனர்.


எடை குறைப்பு மிகவும் ஆபத்தானது, ஆனால் தற்போதுள்ள விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு இடையே விரைவாக எடையை குறைப்பது மற்றும் அதிகரிக்கப்பதன் மூலம் போட்டியில் வெற்றி முடியும் என்று நினைக்கிறார்கள்.


 எடை குறைப்பு தடை செய்யப்பட வேண்டுமா?


சில நிபுணர்கள் எடை குறைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருப்பினும், எல்லோரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக விளையாட்டு வீரர்கள், கடுமையான, நீண்ட கால பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் எடையை பாதுகாப்பாக குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.


2020-ஆம் ஆண்டு அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் வீரர் ஒருவர், "பாதுகாப்பு என்பது விளையாட்டு வீரர் அதை எவ்வாறு அணுகுகிறார்" மேலும், விளையாட்டு வீரரின் குழு எவ்வளவு அறிவாற்றல் கொண்டது என்பதைப் பொறுத்தது என்றார். சிலர் எடை போடுவதற்கு முந்தைய நாள் நான்கு அல்லது ஐந்து கிலோ குறைத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. படிப்படியாக எடையைக் குறைத்தல் என்பதே சிறந்தது.


ஒரே நேரத்தில் எடை குறைப்பை செய்வதை விட ஒரு வாரத்தில் படிப்படியாக எடையைக் குறைப்பது பாதுகாப்பானது என்று பல மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், எந்தவொரு எடை குறைப்பு முறையும் உண்மையிலேயே பாதுகாப்பானது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர், மேலும், "பாதுகாப்பான உத்திகள்" (safe strategies) என்று அழைக்கப்படுவதுகூட ஒரு தடகள வீரரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எடை குறைப்புடன் தொடர்புடைய பயிற்சியில்  உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய அபாயங்கள் இருந்தபோதிலும், அத்தகைய தலைப்புகளில் ஆபத்தான சிறிய ஆராய்ச்சிகளே உள்ளது" என்று பார்லி (Barley) குறிப்பிட்டுள்ளார்.


அத்தகைய தடை எவ்வாறு வேலை செய்யும்?


யாங்கின் மரணத்திற்குப் பிறகு, ஒன் சாம்பியன்ஷிப் (ONE Championship) விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காக எடை குறைப்பதைத் தடைசெய்தது மற்றும் பிற விளையாட்டுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இந்த அணுகுமுறையை பரிந்துரைத்தது. அவர்களின் முறையானது போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடையிடுதல் மற்றும் நீரிழப்பை சரிபார்க்க சிறுநீர் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஒன் சாம்பியன்ஷிப் (ONE Championship) அமைப்பின் தலைவர், ரிச் ஃபிராங்க்ளின் (Rich Franklin) 2017-ஆம் ஆண்டு,  "எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் உண்மையான எடையில் போட்டியிடுவதை உறுதிசெய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம், அதை சரிபார்க்க நீரேற்ற சோதனைகளைப் பயன்படுத்துகிறோம்" என்றார்.


முக்கியமாக, தற்காப்பு கலை விளையாட்டுகளில் (Mixed martial arts (MMA)) விளையாட்டு வீரர்கள் சற்று அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு சில வழிகளை வழங்குகிறது. “தடகள வீரர்களுக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அவர்கள் போட்டியிட அனுமதிக்க மாட்டோம். ஆனால், அவர்கள் எடை வரம்பை விட சற்று அதிகமாக இருந்தாலும் சரியாக நீரேற்றமாக இருந்தால், கேட்ச்வெயிட் (catchweight) முறைக்கு ஏற்பாடு செய்யலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. மேலும், அவர்கள் மற்ற போட்டியாளர் எடையில் குறைந்தது 105% எடையைக் கொண்டிருக்க வேண்டும்.


மற்ற விளையாட்டுகள் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை, ஆனால் எடை குறைப்பை ஊக்கப்படுத்த சில மாற்றங்களைச் செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் போட்டிக்கு முன் அதிக எடையை இழப்பதைத் தடுக்க இரண்டு வெவ்வேறு நாட்களில் எடைபோடுகிறார்கள். பின்னர், விரைவாக அதைத் திரும்பப் பெறுகிறார்கள்.



Original article:

Share: