புஜா கேத்கர் குடிமைப் பணியில் நுழைந்தது, பணியமர்த்தலுக்கான செயல்முறை குறித்து கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒழுங்குமுறை விதியின் மீது செயல்பட்ட ஒரு மோசமான விதிமீறல் கூட முழு செயல்முறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பூஜா கேத்கரின் (Puja Khedkar) வழக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உதாரணமாகப் பார்க்கப்பட்டது. அவர் சட்டத்தை மீறிய வழிகள் நம்பமுடியாததாகத் தோன்றினாலும் அவை உண்மைதான். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) வேலைவாய்ப்பு தொடர்பான வழிமுறைகளில் அவர் தவறான கையாளுதல் மற்றும் சூழ்ச்சி மூலம் விதிமீறலை ஏற்படுத்தியுள்ளார். அவர் மனநோய் மற்றும் பார்வைக் குறைபாடு என்று கூறி, ஒரு சாதிச் சான்றிதழை (community certificate) போலியாக உருவாக்கி, மாற்றுத்திறனாளி சான்றிதழைப் (disability certificate) பயன்படுத்தி இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேத்கருக்கு ஊனமுற்றோர் சான்றிதழை வழங்கிய புனே மருத்துவமனை, அவருக்கு 7% இயக்கத் தன்மை (லோகோமோட்டர்) மாற்றுத்திறனாளி (locomotor disability) சான்றிதழ் மட்டும் அளித்ததாகக் கூறியது. இந்த சான்றிதழ் மூலம், சலுகைகளைப் பெறுவதற்கு இந்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் பயனுள்ளதாக இருந்திருக்காது. ஏனெனில், இவர்கள் பயனடைவதற்கு கூடுதல் சான்றிதழ் தேவைப்பட்டது. உண்மையான மாற்றுத்திறனாளிகள் தங்கள் சான்றிதழைப் பெறுவதற்கு பல தடைகளை கடக்க வேண்டும். மாற்றுத்திறனாளியை போலியாகக் காட்டி சான்றிதழைப் பெறுவது அவருக்கு ‘இதில், சிலர் மற்றவர்களை விட அதிக சலுகை பெற்றவர்களா?’ என்ற ஒரு கேள்வியை எழுப்புகிறது. அவர் தன் தந்தையின் சிவில் சர்வீஸ் பதவியைப் பயன்படுத்தி, தனக்கு கிடைக்காத பலன்களைப் பெற்றிருந்தார். அவர் ஒரு போலி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் (OBC certificate) மற்றும் பல அடையாளங்கள் மூலம் தேர்வினை எதிர்கொள்ளப் பயன்படுத்தினார். மேல்நிலையினருக்கான (creamy layer) விலக்கு அளவுகோல்களைத் தவிர்ப்பதற்காக, தனது பெற்றோர் விவாகரத்து செய்ததாக அவர் பொய்யாகக் கூறினார். கேட்கர் தனக்கான சலுகைகளை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் இவை எதுவும் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்பதுதான் பயங்கரமான உண்மை. அவர் தனது தனியார் சொகுசு காரில் ஒரு சுழல் விளக்கை வைத்து அதன் மீது சட்ட விரோதமாக மகாராஷ்டிர அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அவரது விண்ணப்பத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை அவர் விரைவில் பெறுவார்.
NEET UG, NEET PG மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Test (CUET)) ஆகியவற்றுடன் மருத்துவ சேர்க்கைக்கான சர்ச்சைகளால், நாட்டில் தகுதித் தேர்வுகளுக்கு (qualification examinations) இது ஒரு நல்ல வருடமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) முழுவதுமான கவனக்குறைவாகவும், மோசடியைக் கண்டறிய முடியாமல் இருந்ததால், அவர் மற்றும் அவருடைய பெற்றோரின் மீறல்கள் நடந்திருப்பதால், இவரின் வழக்கு ஒரு விதிவிலக்காக இருக்கலாம் என்று வாதிடுவதில் எந்தத் தகுதியும் இல்லை. இது மன்னிக்கத்தக்கது அல்ல. முழுப் போட்டித் தேர்வு முறையும் ஒரு முழுமையான மறுசீரமைப்பைப் பெறுவதை அரசாங்கம் இப்போது உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ள நிர்வாக அதிகாரிகளும், அமைப்புகளும் ஏமாறவோ அல்லது தகுதியற்றவர்களாகவோ இருக்கக்கூடாது. இதற்கிடையில், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் செயல்முறையை (disability certification process) மறுபரிசீலனை செய்ய இந்த சம்பவத்தை அரசு ஒரு காரணமாக பயன்படுத்த வேண்டும். உண்மையான விண்ணப்பதாரர்கள் நியாயமாக நடத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.