தகைமை உறுப்பினர்களின் (aldermen) நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரான டெல்லியின் பலவீனத்தை காட்டுகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநர், இந்த நியமனங்களில் சுதந்திரமான அதிகாரம் கொண்டவர் என்று தீர்ப்பு கூறுகிறது. இது டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது ஒன்றிய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதையே காட்டுகிறது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு, ஒன்றிய-டெல்லி அரசு உறவுகளை நிர்வகிக்கும் சட்டம் மற்றும் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும், நியமிக்கப்பட்ட நிர்வாகியையும் சமநிலைப்படுத்த முயல்கின்றன. டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சமீபத்திய வழக்கின் இறுதி முடிவு ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும், டெல்லிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருப்பதன் மூலம் இது குறித்த கேள்வி எழுகிறது. நகராட்சி நிர்வாகத்தில் தகைமை உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநரின் அதிகாரம் அவரது சட்டப்பூர்வ கடமை என்று நீதிமன்றம் கூறியது. இந்த அதிகாரம் டெல்லி மந்திரி சபையின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் பயன்படுத்த வேண்டிய ஒன்றல்ல. டெல்லியின் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு, துணை நிலை ஆளுநருக்கு கட்டுப்பட்டதாக கூறும் அரசியலமைப்பு விதிக்கு இந்த அதிகாரம் விதிவிலக்காகும். டெல்லி அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. நகராட்சி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநரின் தனியாக செயல்பட முடியாது என்ற டெல்லி அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட டெல்லி மாநகராட்சி சட்டம் 1957 (Delhi Municipal Corporation Act), (1993 இல் திருத்தப்பட்டது) வெவ்வேறு அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்குகிறது என்று நீதிமன்றம் விளக்கியது. தகைமை உறுப்பினர்களுக்கு 10 நபர்களை பரிந்துரைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களை மாநகராட்சியில் பணிபுரிய சுழற்சி முறையில் நியமிக்கலாம். இது ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அதிகாரம் என்பதை இது காட்டுகிறது. 2018-ஆம் ஆண்டில், துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க அரசியலமைப்பு அமர்வு ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் பல சட்ட மோதல்களுக்கு வழிவகுத்தன. டெல்லி சட்டமன்றம் கையாளும் எந்தவொரு பிரச்சினையிலும் சட்டங்களை உருவாக்குவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கிறது. டெல்லியின் சட்டமன்ற அதிகாரங்கள் பிற மாநிலங்களின் சட்டமன்ற அதிகாரங்களுடன் வேறுபட்டது. டெல்லி சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தையும் பாராளுமன்றம் மாற்றலாம் அல்லது மீறலாம். அரசியலமைப்பில் சட்ட நிறைவேற்று அதிகாரங்கள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், ஒன்றிய அரசு எந்த வகையிலும் டெல்லி அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியும். இறுதியில், ஒன்றிய அரசிற்கு இறுதி அதிகாரம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.