வக்ஃப் (திருத்தம்) சட்ட (Waqf (Amendment) Bill) வரைவானது ஒரு முக்கியமான குறிப்பில், முஸ்லிம் அல்லாதவர்கள் நன்கொடையாக வழங்கியவை தவிர, வக்ஃப் சொத்துக்கள் பொதுவாக தனிப்பட்டவை மற்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களால் சுயமாக கையகப்படுத்தப்பட்டவை என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
வக்ஃப் என்ற கருத்து இஸ்லாமிய மத நம்பிக்கைகளில் இருந்து உருவானது. இது ஒரு மதக் கடமை (religious obligation) அல்ல. ஆனால், ஒரு வகையான மதத் தொண்டு (religious charity) ஆகும். ஒரு வக்ஃப் வாரியம் உருவாக்கும் போது, ஒரு விசுவாசி தனது சுயமாக பெற்ற அல்லது மரபுரிமையாக பெற்ற அசையும் அல்லது அசையாச் சொத்தை கடவுளின் பெயரில் அர்ப்பணிக்கிறார். மேலும், அத்தகைய சொத்துக்களின் நன்மைகள் இஸ்லாமிய அறக்கட்டளையின் புரிதலுடன் இணக்கமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். பிற மதங்களிலும் இதே போன்ற நடைமுறைகள் உள்ளன. அதாவது, நன்கொடைகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களானவை வக்ஃப்களைப் போலவே, இந்த அர்ப்பணிப்புகளின் தன்மையும் நிரந்தரமானது.
இந்தியாவின் நான்காவது தலைமை நீதிபதி பி கே முகர்ஜி, மனித இருப்புக்கு தொண்டு நிறுவனங்கள் அவசியம் என்று கூறினார். இதில் வக்ஃப் நிறுவனங்களும் அடங்கும். இந்த தொண்டு நிறுவனங்கள் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது மக்கள் குழுவிற்கோ பிரத்தேகமானவை அல்ல என்றார். மக்கள், பக்தி மற்றும் கருணை உணர்வுகள் இருக்கும் வரை, அவர்கள் மத மற்றும் அறக்கொடைகள் மூலம் இவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், சட்டம் சமூக இலக்குகளை நிறைவேற்ற உதவுகிறது மற்றும் இந்த பரிசுகளை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் தேவைப்படுகிறது. இந்த ஒழுங்குமுறை நன்கொடையாளரின் நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. அதனால்தான் மத மற்றும் அறக்கட்டளைகள் கிட்டத்தட்ட அனைத்து நாகரிக சட்ட அமைப்புகளிலும் உள்ளன.
வக்ஃப் சட்டமானது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1995-ம் ஆண்டின், வக்ஃப் சட்டம் (Waqf Act) 2013-ல் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் திருத்தப்பட்டது. இப்போது, தற்போதைய ஒழுங்குமுறைக்கு மற்றொரு பெரிய திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. வக்ஃப் (திருத்தம்) மசோதா (Waqf (Amendment) Bill) வரைவு வக்ஃப் சொத்துக்கள் தனியார் மற்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களால் சுயமாக கையகப்படுத்தப்பட்டவை என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதாகக் கூறுகிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் சிலவற்றை நன்கொடையாக வழங்கியிருக்கலாம். ஆனால், இந்த சொத்துக்கள் பொதுவானவை இல்லை. அவை பொது நிதியைப் பயன்படுத்தி கையகப்படுத்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, நிர்வாகம் (administration), மேலாண்மை (management) மற்றும் புதிய வக்ஃப்களை உருவாக்குதல் (creation of new Waqfs) ஆகியவற்றில் அதன் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வக்ஃப் சொத்துக்களில் "அரசு அமைப்புகள்" (government organizations) தலையிட அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது முஸ்லிம் குடிமக்களின் உரிமைகளில் தலையிடுகிறது. மதக் குழுக்களின் சொத்துக்கள் கையகப்படுத்தப்படாமல் பாதுகாக்கும் அரசியலமைப்பின் 26-வது பிரிவையும் இது மீறுகிறது. வக்ஃபுச் சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியரை முடிவு செய்ய வைப்பது, இதே ஆட்சியரின் உத்தரவின் பேரில் முஸ்லிம்களின் தனிச் சொத்துக்களும் புல்டோசர்களால் அடிக்கடி அச்சுறுத்தப்படும் இக்காலகட்டத்தில் வக்ஃப் சொத்து நிர்வாகத்தில் இருந்து முஸ்லிம்களை விலக்கும் நடவடிக்கையாகும். வக்ஃப் வாரியங்களில் ஒரு முஸ்லிம் தலைமை நிர்வாக அதிகாரி தேவை என்ற விதி கூட நீக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரியங்களை உருவாக்குவதற்கு, பல தடைகளை உருவாக்க அரசாங்கம் முன்மொழிகிறது. தற்போதுள்ள வக்ஃப் சொத்துக்களில் தலையிடும் அதிகாரத்தை தனக்கும், உள்ளூர் பஞ்சாயத்துகள் உட்பட அனைவருக்கும் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ள "பயனர் மூலம் வக்ஃப்" (waqf by user) என்ற கருத்தையும் அகற்ற திட்டமிட்டுள்ளது. பல முஸ்லீம் கல்லறைகள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளூர்வாசிகளால் கையகப்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஏனெனில், அவை சிறிது காலமாக வக்ஃப் வாரியங்களின் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை.
வக்பு வாரியத்தால் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற அனுமானத்தை இந்த திருத்தங்கள் பிரதிபலிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக இறுதி முடிவெடுத்து, அதன்பின் வருவாய் பதிவேட்டில் அவரது முடிவை நடைமுறைப்படுத்துமாறு வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். வக்ஃப் சொத்துக்களுக்கு பாதகமான உடைமை என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒர் ஆவணத்தில் மாவட்ட ஆட்சியரின் குறிப்புகளால் பலர் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26 வது பிரிவுகளின் கீழ் உள்ள உத்தரவாதங்களை அரசாங்கம் தெளிவாக மீறுகிறது. கடந்த காலங்களில், பல்வேறு அரசாங்கங்களும் விதி 30-வது பிரிவின் கீழ் உரிமைகளை மீறியுள்ளன. சிறந்த நிர்வாகம் என்ற பெயரில் அவர்கள் இதைச் செய்தனர். இந்த மீறல்களுக்கான சவால்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. மதத்தை மையமாகக் கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை காவல்துறையின் அத்துமீறலுக்கு ஆளாக்கியுள்ளது. அரசுகள், முன்மொழியப்பட்ட திருத்தம் அவர்களின் பாதிப்பை அதிகரிக்கும். மத மற்றும் தொண்டு நிறுவனங்களின் நோக்கங்களுக்காக அவர்கள் அர்ப்பணிக்கும் சொத்துக்களுக்கு இவற்றின் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தலாம்.