தெரு நாய்களைக் கொல்வது போன்ற கொடூரமான முறைகளைப் நாம் தவிர்க்க வேண்டும். மாறாக, அனைவருக்கும் பயன் தரும் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறை அனைவருக்கும் பயன் அளிக்கும்.
எந்த சூழ்நிலையிலும் நாய்களை கொல்ல அனுமதிக்க கூடாது. தற்போதுள்ள சட்டங்களையும் அவற்றின் நோக்கத்தையும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகால வழக்கை ஒரே அறிக்கையுடன் முடித்து வைத்துள்ளது. இந்த வழக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் & Anr எதிர். பெஸ்ட் & Ors (Animal Welfare Board of India (AWBI vs. political, economic, socio-cultural and technological (PEST)) என அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு மே 9-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிருந்து, நாய் பிரியர்களும் நாய் வெறுப்பாளர்களும் இறுதி முடிவுக்காக காத்திருந்தனர். ஜூலை 12 அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலர் இந்த முடிவை ஆதரித்தனர், மற்றவர்கள் அதை விமர்சித்தனர்.
நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரேபிஸை ஒழிக்கவும், மனிதர்களுடன் மோதல்களைத் தடுக்கவும் தெருநாய்களைக் கொல்ல உள்ளூர் அதிகாரிகளால் முடியுமா என்பது குறித்து வழக்கு கவனம் செலுத்தியது. மாறாக, இந்த இலக்குகளை அடைய உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO))-ஆதரவு கருத்தடை முறையை அவர்கள் பின்பற்ற வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. சட்டரீதியாக தெருநாய்களைக் கொல்ல அனுமதிக்கும் மாநில, மாநகராட்சி சட்டங்களுக்கும் மற்றும் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடு உள்ளது. ஒன்றிய அரசின் சட்டத்தில் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals (PCA)) Act, 1960) மற்றும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control (ABC)) விதிகள், 2001 ஆகியவை அடங்கும். இந்தச் சட்டங்கள் தெருநாய்களைக் கொலை செய்வதைத் தடை செய்து, கருத்தடை (sterilisation) செய்வதையே ஒரே தீர்வாகக் கூறுகிறது.
இறுதி ஆணை
தெருநாய்களைக் கொல்ல அனுமதிக்கும் மாநில மற்றும் நகராட்சி சட்டங்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சவால் செய்யப்பட்டன. பம்பாய், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றங்கள், உள்ளூர் அதிகாரிகள் தெருநாய்களைக் கொல்லலாம் என்றும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-க்குக் (Prevention of Cruelty to Animals) கட்டுப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தது. இருப்பினும், தெருநாய்களைக் கொல்ல உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்தினால் அபராதம் விதிக்கும் ஒன்றிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டது 2015-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கை தேசிய பிரச்சினையாக மாறியது.
இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது வழக்கு முடிவுக்கு வந்தது. வழக்கு தொடங்கியதில் இருந்து, குறிப்பாக புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control (ABC)) விதிகள், 2023 உடன், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் கீழ், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் புதிய சட்டங்கள் நகராட்சிகள் தெருநாய்களைக் கொல்வதைத் தடுக்கின்றன, அதற்குப் பதிலாக கருத்தடை செய்ய வேண்டும். இந்தப் புதிய சட்டங்கள் தொடர்பாக எந்தத் தரப்பினரும் பிரச்னைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கிடையில், ஒன்றிய அரசின் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம், 1960 மற்றும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023) நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் உள்ளூர் அதிகாரிகள் அல்லது நகராட்சிகள் தெருநாய்களைக் கொல்வதைத் தடை செய்கிறது.
ஒவ்வொரு குடிமகனின் கடமை
“அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் என்பது அரசியலமைப்பின் மதிப்பு மற்றும் அதிகாரிகள் நிலைநிறுத்த வேண்டிய கடமை." ஒவ்வொரு குடிமகனும் காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும், உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பின் 51A(g) (Article 51A(g)) பிரிவு கூறுகிறது என்ற வார்த்தைகளுடன் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் இரக்கமுள்ள தீர்ப்பை வழங்கி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்த தீர்ப்பை எதிர்க்கும் நபர்கள் அல்லது நாய்க்கு அஞ்சுபவர்கள் (cynophobes), ஒன்றிய அரசின் புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023-ஐ எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், அது என்ன பயனளிக்கும்? தெருநாய்களை கொல்வது உண்மையில் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? கொல்லப்படுவது தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்ற கருத்தை அறிவியல் ஆதரிக்கவில்லை.
2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் ரேபிஸ் (Rabies) நிபுணர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்வது மட்டுமே பயனுள்ள மற்றும் மனிதாபிமான வழி என்று அவர்களின் தொழில்நுட்ப அறிக்கை கூறுகிறது.
2014-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி அறிக்கையில், கருத்தடை மட்டுமே அறிவியல் மற்றும் மனிதாபிமானத் தீர்வு என்று குறிப்பிட்டது. 1994-ஆம் ஆண்டு சுற்றறிக்கையில், தெருநாய்களைக் கொல்வதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று அதே மாநகராட்சி ஒப்புக்கொண்டது.
ஒரு சுற்றறிக்கையில், 1984 மற்றும் 1994-க்கு இடையில் சுமார் 450,000 தெருநாய்களைக் கொன்றதாக பாம்பே மாநகராட்சி ஒப்புக்கொண்டது. ₹2 கோடிக்கு மேல் செலவழித்தது. தெருநாய்களைக் கொல்வது பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற போதிலும், மும்பை மாநகராட்சி இந்த வழக்கில் தெருநாய்களைக் கொல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது.
நமது அரசியலமைப்பின் 51A(h) பிரிவிலிருந்து நமது குடிமக்கள் அறிவியல் மற்றும் கருணையின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பலாம். தெருநாய்களைக் கொல்வது போன்ற அறிவியலற்ற மற்றும் கொடூரமான முறைகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக அனைவருக்கும் பயனளிக்கும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பெர்சிவல் பில்லிமோரியா மூத்த வழக்கறிஞர் மற்றும் All Creatures Great and Small Animal Sanctuary அமைப்பின் நிறுவனர்; சித்தார்த்தா கே கார்க், வழக்கறிஞர்.