பசுமை வேலைகளில் பாலின சமத்துவமின்மை -அனன்யா சக்ரபோர்த்தி,பாவனா அஹுஜா,அறிவுடை நம்பி அப்பாதுரை

 பசுமை வேலைகளில் (green jobs) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, குறைந்த கார்பன் (low-carbon) மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த நிலையான பொருளாதாரத்தை (sustainable economy) அதிகரிப்பது போன்ற நன்மைகளுக்கு வழிவகுக்கும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியை நோக்கி இந்தியா மாறினால், 2047 ஆம் ஆண்டில். இந்தியா, சுமார் 35 மில்லியன் பசுமை வேலைகளை உருவாக்க முடியும். பசுமை வேலைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, அல்லது மீட்டெடுக்க உதவும் நல்ல வேலைகள் என விளக்கப்படுகிறது. அது, உற்பத்தி, கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த துறைகளில், பெண்கள் வரலாற்று ரீதியாக குறைவாகவே பிரதிநிதித்துவப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலகளவில், பெண்களை விட ஆண்கள் பசுமை வேலைகளுக்கு வேகமாக மாற வாய்ப்புள்ளது. 2015 முதல் 2021 வரை இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை (renewable energy) 250% அதிகரித்த போதிலும், சூரிய கூரை திட்டங்களில் (solar rooftop sector) 11% மட்டுமே பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2019-20ஆம் ஆண்டுத் தொழில்கள் கணக்கெடுப்பு (Annual Survey of Industries), பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆடை, ஜவுளி, தோல், உணவு மற்றும் புகையிலை போன்ற தொழில்களில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடுகிறது. இதற்கு நேர்மாறாக, இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 2019 அறிக்கை (Confederation of Indian Industry (CII) 2019 report), உள்கட்டமைப்பு, போக்குவரத்து, கட்டுமானம், மற்றும் உற்பத்தி. போன்ற துறைகளில் 85% பணியாளர்கள் ஆண்கள் என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பசுமை தொழில்நுட்பம்


பசுமை வேலைகளுக்கான திறன் கவுன்சில் (Skill Council for Green Jobs), 2023 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், பசுமைத் திறன்களுக்கான பயிற்சியில் 85% ஆண்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், 90% க்கும் அதிகமான பெண்கள் சமூக விதிமுறைகள் காரணமாக அத்தகைய பயிற்சியிலிருந்து பின்வாங்கியதாக உணர்ந்தனர். இந்த விதிமுறைகளில், தொழில்நுட்ப வேலைகள், பாதுகாப்பு கவலைகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அடங்கும்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை நோக்கி இந்தியா நகர்ந்து வரும் நிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், சுற்றுச்சூழல் முயற்சிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். பசுமை வேலைகளில் அதிகமான பெண்கள் இருப்பது பல நன்மைகளைத் தருகிறது. இது முக்கியமானது, ஏனெனில் குறைந்த கார்பன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதாரத்திற்கு கூடுதல் நன்மைகளை கொண்டு வர முடியும். குறுகிய காலத்தில், இந்தியாவின் வேலை சந்தையில் பாலின சார்புகளை சரிசெய்யவும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். காலப்போக்கில், இந்த முயற்சி பெண்களுக்கு பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் சமூக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சிறந்த அதிகாரம், மற்றும் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும்.


தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்


போதுமான தரவு இல்லாததால் இந்தியாவில் பசுமை வேலைகளில் பெண்களின் பங்களிப்பை புரிந்துகொள்வது குறைவாகவே உள்ளது. பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த, பசுமை வளர்ச்சிக்கான பகுதிகளை அடையாளம் காண வேண்டும் மற்றும் இந்த வேலைகளில் பெண்களின் ஈடுபாடு குறித்த தரவுகளையும் சேகரிக்க வேண்டும். குறைந்த கார்பன் மாற்றங்கள், பெண் தொழிலாளர்கள், மற்றும் தொழில்முனைவோரை எவ்வாறு பாதிக்கின்றன. என்பதைப் அறிந்து கொள்வது முக்கியம், குறைந்த கார்பன் முறைகளுக்கான நகர்வு வேலை செய்யும், மற்றும் வணிகங்களை நடத்தும் பெண்களை, எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க வேண்டும். பல்வேறு தொழில்கள் மற்றும் இடங்களில் பெண்கள் செய்யும் வேலைகளை, வெளிப்படையாகத் தெரியாமல் கூட பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள். மேலும் பாலின பகுப்பாய்வை நடத்துதல், தொழிலாளர் ஆய்வுகள் (periodic labour force surveys) மூலம் பாலினம் சார்ந்த தரவை சேகரித்தல் மற்றும் பசுமை மாற்றத்தில் பெண்களுக்கு ஆதரவளிக்க அதிக வளங்களை ஒதுக்குதல் ஆகியவை இதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளாகும்.


உலகளவில், காலநிலை மற்றும் நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் இருந்து பெண்கள் பெரும்பாலும் வெளியேறுகிறார்கள். குறிப்பாக, குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதில். புதிய வாய்ப்புகள் உருவாகும் அதே வேளையில், வேலை, இடப்பெயர்வு, மற்றும் மாற்றமும் உள்ளது. COP 28 இல், மாற்றம் திட்டமிடலில் நேர்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்காக ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  'பாலினம்-பொறுப்புக்கூறக்கூடிய மாற்றங்கள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான கூட்டாண்மை' ('Gender-Responsive Just Transitions and Climate Action Partnership') தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, தரவை மேம்படுத்துதல், இலக்கு நிதி வழங்குதல் மற்றும் அனைவருக்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பசுமை வேலைகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய, தற்போதைய நிலைமையை நாம் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பெண்களின் நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வேலைவாய்ப்புக்கான தடைகளை நீக்க வேண்டும், மற்றும் அவர்களின் பங்கேற்புக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.


இந்தியாவில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் பட்டதாரிகளில் 42.7% பெண்கள் என்றாலும், பசுமை மாற்றத்திற்கு அவசியமான பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளில் அவர்கள் 30.8% மட்டுமே உள்ளனர். இந்த இடைவெளியை குறைக்க, பசுமை வேலைகள் தொடர்பான துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ஆரம்பகால நடைமுறைகளான கற்றல், வழிகாட்டுதல், உதவித்தொகை, நிதி உதவி, மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிக முக்கியம்.


பெண் தொழில்முனைவோரை ஆதரித்தல்


பெண் தொழில்முனைவோர் பசுமை சந்தையில் சேர உதவுவதற்கு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதிக் கொள்கைகள் மற்றும் தயாரிப்புகள் நமக்குத் தேவை. பினையம் தேவைப்படாமல் கடன்களை வழங்குதல், நிதிக் கல்வியை வழங்குதல் மற்றும் உதவும் அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். கடன் தகுதியை மதிப்பிடுவதற்கும், கடன்களை வழங்குவதற்கும், பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும் பொருத்தமான நிலைகளை உருவாக்கப்பட வேண்டும்.


இறுதியாக, தலைமைப் பொறுப்புகளுக்கு அதிகமான பெண்களைக் ஊக்குவித்தல், குறைந்த கார்பன் மேம்பாட்டு உத்திகளில் பாலின-குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் மற்றும் பெண்களை பசுமை வேலைகளில் சேர ஊக்குவிக்கு ம்.  


பாலினம் சார்ந்த மாற்றமானது வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, கவனிப்புப் பணியின் சுமையைக் குறைத்தல், மற்றும் திறன் மேம்பாட்டை செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்முனை உத்தியைக் கோருகிறது. பெண் தொழில்முனைவோர், மற்றும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நிதியின் பலன்களைப் பெறுவதற்கு, அரசு, தனியார் துறை, மற்றும் பிற பங்குதாரர்கள் இடையேயான கூட்டாண்மை அவசியம்.


வணிகங்கள் பாலின நீதியின் மையத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் ஒரே மாதிரியான அல்லது பாலின சார்பு காரணமாக இருக்கும் தடைகளைத் தணிப்பதன் மூலம் மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மாற்றத்திற்கான சமமான வேலை வாய்ப்புகளை வளர்ப்பதன் மூலம் பசுமை மாற்றத்தின் செயல்முறை முழுவதும் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் திறன்களைப் பெறுவதற்கும், மாறிவரும் வேலைச் சந்தைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இதுவே நேரம். அனைவரும் சேர்ந்து, அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் உள்ளடக்கம் உள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும்.


அனன்யா சக்ரவர்த்தி, பாவ்னா அஹுஜா மற்றும் அறிவுடை நம்பி அப்பாதுரை ஆகியோர்World Resources Institute, India இல் பணிபுரிகிறார்கள். 




Original article:

Share: