இலட்சத்தீவில் இந்தியாவின் புதிய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ஜடாயு (INS Jatayu) ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? - அம்ரிதா நாயக் தத்தா

 மொரீஷியஸின், அகலேகாவில் இந்தியா கட்டிய விமான ஓடுதளம் மற்றும் ஜெட்டி (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்திய கடற்படை கப்பல் ஜடாயு (INS Jatayu) ஈடுபடுத்தப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலில் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துவதில், இராஜதந்திர ரீதியாக முக்கியமானது. குறிப்பாக சீனாவானது, பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. 


இந்தியாவா, 1980-களில் இருந்து இலட்சத் தீவுக்கூட்டத்தின் தெற்கே உள்ள மினிகாய் தீவில் ஒரு கடற்படைப் பிரிவை பராமரித்து வருகிறது. இருப்பினும், ஐஎன்எஸ் ஜடாயு முக்கியமாக இலட்சத்தீவில் நாட்டின் இரண்டாவது கடற்படை தளமாக செயல்படும். இந்த தீவுகளில், கடற்படையின் ஆரம்ப தளமான கவரத்தியில் உள்ள ஐஎன்எஸ் த்வீப்ராக்ஷக் (INS Dweeprakshak) 2012 இல் நிறுவப்பட்டது.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸின் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து,  மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கரையோரத்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவான அகலேகாவில் இந்தியாவால் கட்டப்பட்ட விமான ஓடுதளம் மற்றும் ஜெட்டியை (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) அவர்கள் திறந்து வைத்தனர்.


இந்திய கடற்படையின் கப்பல்கள், தளங்கள் மற்றும் படைப்பிரிவுகள் "இந்திய கடற்படை கப்பல் (INS)" என்ற முன்னொட்டுடன் பெயரிடப்பட்டுள்ளன.


இலட்சத்தீவு தீவுகள்


இலட்சத்தீவு என்ற வார்த்தை சமஸ்கிருதம் மற்றும் மலையாள மொழிகளில் "ஒரு லட்சம் தீவுகள்" (a hundred thousand islands) என்று பொருள்படும். இது கொச்சியிலிருந்து 220 கிமீ முதல் 440 கிமீ தொலைவில் அமைந்துள்ள 36 தீவுகளின் தொகுப்பாகும். இந்த தீவுகளில் 11 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 32 சதுர கி.மீ மட்டுமே ஆகும்.


இலட்சத்தீவு தீவுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளத் தீவுகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த தொகுப்பில் தெற்கே மாலத்தீவுகளை உள்ளடக்கியது மற்றும் பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டம் வரை நீண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளதால் இலட்சத்தீவுகள் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.


மினிகாய் (Minicoy) ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது, உலகளவில் முதன்மையான கடல்வழிப் பாதைகளான முக்கியமான கடல் வழித் தொடர்புகளை (Sea Lines of Communications (SLOC)) உள்ளடக்கியது. இதில் 8° அளவில் கால்வாய் மினிகோய் மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயும் மற்றும் 9° அளவில் கால்வாய் மினிகாய் மற்றும் இலட்சத்தீவுகளின் முக்கிய குழுவிற்கு இடையேயும் ஆகியவை அடங்கும். அவற்றின் இருப்பிடம் காரணமாக, லட்சத்தீவுகள் கடல் மாசுபாட்டால் பாதிக்கப்படலாம்.


ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu) கடற்படை தளம்


கடற்படை படைப்பிரிவான மினிக்காய் தீவு, தற்போது லட்சத்தீவில் உள்ள கடற்படை பொறுப்பு அதிகாரியின் (Naval Officer-in-Charge) கட்டுப்பாட்டில் உள்ளது. இது விரைவில் ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu) என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது.


ஒரு கடற்படை படைப்பிரிவு நிர்வாக, தளவாடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கியது. INS ஜடாயு ஒரு கடற்படை தளமாக மேம்படுத்தப்பட்டு, விமானநிலையம், வீடுகள் மற்றும் பணியாளர்கள் போன்ற கூடுதல் உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. தேவையான சுற்றுச்சூழல் மற்றும் பிற ஒப்புதல்களைப் பெற்ற பிறகு இந்த மாற்றம் நடைபெறும்.


இலட்சத்தீவின் நுட்பமான சூழல், ஒரு ஜெட்டியை (jetty-நிலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்லும் ஒரு அமைப்பு) உருவாக்குவதை சவாலானதாக மாற்றக்கூடும். இது ஒருபுறம் இருக்க, இராணுவ மற்றும் சிவில் விமானங்கள் இரண்டையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட புதிய விமானநிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கடற்படை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்


கடற்படையின் கூற்றுப்படி, தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வளங்களுடன் ஒரு சுதந்திரமான கடற்படை பிரிவை நிறுவுவது தீவுகளில் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை அதிகரிக்கும். இந்தத் தளத்தை அமைப்பது தீவுகளின் முழுமையான வளர்ச்சிக்கு, அரசாங்கத்தின் முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகிறது.


கடற்படை தளம், அதன் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்துகிறது. மேலும், மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு (anti-piracy) மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு (anti-narcotics) நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் பிராந்தியத்தில் முதன்மை பதிலளிப்பவராக அதன் பங்கை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளது.


ஐஎன்எஸ் ஜடாயு (INS Jatayu), இந்திய கடற்படையின் ஒரு முக்கிய பகுதியாக மாறுவதன் மூலம், இந்தியாவின் மேற்குப் பகுதியில் கடற்படையின் இருப்பு மற்றும் திறன்களை அதிகரிக்கும். திட்டமிடப்பட்ட விமான தளம் பல்வேறு விமானங்களை ஆதரிக்கும். இதில் P8I கடல்சார் உளவு விமானங்கள் (maritime reconnaissance aircraft) மற்றும் போர் விமானங்களும் (fighter jets) அடங்கும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால், இந்தத் திறன்களின் விரிவாக்கம் கடற்படையின் வரம்பையும் செயல்பாட்டுக் கண்காணிப்பையும் மேம்படுத்தும்.


இந்த முயற்சி இப்போது மிகவும் பொருத்தமானது. மாலத்தீவு உடனான இந்தியாவின் உறவு பதட்டமானது. சீன ஆதரவாளரான அதிபர் முகமது முய்ஸு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த பதற்றம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Original article:

Share: