அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோக்போரோக் மற்றும் போஜ்புரி மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி… -ரோஷ்னி யாதவ்

 அரசியலமைப்பின் 344(1) மற்றும் 351 பிரிவுகள் 8-வது அட்டவணை தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளன.

 

தற்போதைய செய்தி:


கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோக்போரோக் சாகித்ய பரிஷத் சங்கம், திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சஹாவுக்கு ஒரு கடிதம் எழுதி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோக்போரோக் மொழியைச் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பழங்குடி இலக்கிய அமைப்பு, கோக்போரோக் (Kokborok) மொழிக்கான எழுத்து வடிவம் பெங்காலி அல்லது தேவநாகரியாக இருக்கலாம் என்று கூறியது.


குறிப்பாக, சர்வதேச தாய்மொழி தினத்தன்று (பிப்ரவரி 21), டாக்டர் சந்தோஷ் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் போஜ்புரியைச் கோரிக்கை விடுத்தனர். போஜ்புரி (Bhojpuri) பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வருகிறது. போஜ்புரி மொழி, மொரீஷியஸ் மற்றும் நேபாளத்தில் அரசியலமைப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது இன்னும் இந்தியாவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. பல குழுக்கள் தங்கள் மொழிகளுக்கு அங்கீகாரம் கோருவதால், 8-வது அட்டவணை என்ன, அது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 344(1) மற்றும் 351 பிரிவுகள் 8-வது அட்டவணை தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளன.


2. அரசியலமைப்பின் பிரிவு 344 (1) அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகள் பிறகும் மற்றும் அதன்பிறகு அத்தகைய தொடக்கத்திலிருந்து 10 ஆண்டுகள் முடிந்ததும் குடியரசுத்தலைவரால் ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையம் ஒன்றிய அரசின் அலுவலக நோக்கங்களுக்காக இந்தியின் படிப்படியான பயன்பாட்டிற்கு குடியரசுத்தலைவருக்கு       பரிந்துரைகளை வழங்கும்.


3. அரசியலமைப்பின் பிரிவு 351, இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பதும், அதை வளர்ப்பதும் ஒன்றிய அரசின் கடமையாகும் என்று கூறுகிறது. இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தியை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இதைச் செய்ய, இந்தி என்பது இந்துஸ்தானி மற்றும் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற இந்திய மொழிகளிலிருந்து சொற்கள், பாணிகள் மற்றும் வெளிப்பாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். மேலும், தேவையான அல்லது விரும்பத்தக்க இடங்களில், அதன் சொற்களஞ்சியத்திற்காக, முதன்மையாக, சமஸ்கிருதத்திலும், இரண்டாவதாக பிற மொழிகளிலும் வரையப்படுவதன் மூலம் மூலம் இதைச்செய்ய வேண்டும் .


4. மே 2025 நிலவரப்படி, அரசியலமைப்பின் 8-வது அட்டவணையின் கீழ் 22 மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஆரம்பத்தில், 8-வது அட்டவணையில் 14 மொழிகள் இடம்பெற்றிருந்தன அவை அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா (2011இல் ஒடியா என மறுபெயரிடப்பட்டது), பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற மொழிகள் ஆகும்.


5. 1927-ஆம் ஆண்டில் துணைக்கண்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மொழியியல் வகைகளை பட்டியலிட்ட ஜார்ஜ் ஏ கிரியர்சன் தனது இந்திய மொழியியல் ஆய்வில் அடையாளம் கண்ட நூற்றுக்கணக்கானவற்றிலிருந்து இந்த 14 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


6. காலப்போக்கில், இந்த அட்டவணை அங்கீகரிக்கப்பட்ட 14 மொழிகளைத் தாண்டி போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகியவற்றை உள்ளடக்கி விரிவடைந்து 22 மொழிகளாக அதிகரித்தது.


7. 1967-ஆம் ஆண்டின் 21-வது திருத்தச் சட்டத்தின் மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.  1992-ஆம் ஆண்டின் 71-வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகியவை சேர்க்கப்பட்டன. போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தாலி ஆகியவை 2003-ஆம் ஆண்டின் 92-வது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.

    

8. சுவாரஸ்யமாக, ஆங்கிலம் - அதன் பரவலான பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ துறைகளில் பங்கு வகித்த போதிலும் 8-வது அட்டவணையின் ஒரு பகுதியாக ஒருபோதும் சேர்க்கப்படவில்லை.


8-வது அட்டவணையில் மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் என்ன?


1. 8-வது அட்டவணையில் மொழிகளைச் சேர்ப்பதற்கான எந்தவொரு முறையான அளவுகோலையும் அரசியலமைப்புச் சபை வகுக்கவில்லை. இருப்பினும், அவ்வப்போது, ​​பல்வேறு குழுக்களால் சேர்ப்பதற்கான தெளிவான அளவுகோல்களை வரையறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2. 1996-ஆம் ஆண்டு அசோக் பஹ்வா குழு (Ashok Pahwa Committee) ஒரு மொழியை எதன் அடிப்படையில் 8-வது அட்டவணையில் சேர்க்கலாம் என்று முன்மொழிந்தது.


(i) அது குறைந்தபட்சம் ஒரு மாநிலத்திலாவது அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(ii) ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதைப் பேசினால் சேர்க்கலாம் என்றும்;


(iii) அது ஏற்கனவே பட்டியலிடப்பட்ட ஒன்றின் பேச்சுவழக்கு அல்லது வழித்தோன்றல் அல்ல, மாறாக ஒரு தன்னிச்சையான மொழியாக இருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(iv) அது சாகித்ய அகாடமியின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(v) அது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் வளர்ந்த இலக்கிய மரபைக் கொண்டிருந்தால் சேர்க்கலாம் என்று முன்மொழிந்தது.


3. பின்னர், 2003-ஆம் ஆண்டு சீதகாந்த் மொஹபத்ரா குழு (Sitakant Mohapatra Committee) குறிப்பிட்ட அளவுகோல்களைச் சேர்த்தது. அதன் படி, கடந்த 30-ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், ஒரு மொழி கணிசமான மக்கள்தொகையால் பேசப்படுவதற்கு தகுதி பெற குறைந்தபட்சம் 5 கோடி பேச்சாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. அந்த மொழி குறைந்தபட்சம் இரண்டாம் நிலை வரை, முன்னுரிமை பல்கலைக்கழக நிலை வரை பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்த மொழி செயல்பட வேண்டும். கூடுதலாக, அதன் எழுத்துமுறை- பூர்வீகமாக இருந்தாலும் சரி, ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது தேவநாகரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி - குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.


கோக்போரோக் (Kokborok)

திரிபுராவில் உள்ள பழங்குடி சமூகத்தினரால் பேசப்படும் பழமையான மற்றும் மிகவும் பொதுவாகப் பேசப்படும் மொழிகளில் கோக்போரோக் ஒன்றாகும்.

4. குறிப்பிடத்தக்க வகையில், இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், 8-வது அட்டவணையில் சேர்க்க மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ விதியும் இல்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளால் மொழிகளும் பேச்சு வழக்குகளும் மாறிக்கொண்டே இருப்பதால், இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் எதை ஒரு மொழியாகக் கணக்கிட வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களை அமைப்பது கடினம் என்று உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை விளக்குகிறது.

8-வது அட்டவணையில் மொழியைச் சேர்ப்பதன் நன்மைகள்

8-வது அட்டவணையில் சேர்க்கப்படுவது குறியீட்டு மற்றும் நடைமுறை நன்மைகளைத் தருகிறது, அவை:

(i) ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மொழியைப் பேசினால், மொழிபெயர்ப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

(ii) ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய (Union Public Service Commission (UPSC)) தேர்வுகளில் இந்திய மொழித் தாளுக்கு பதிலாக அந்த மொழியைத் தேர்வு செய்யலாம்.

(iii) மொழி பொதுப் பட்டியலின் கீழ் வருவதால், அந்த மொழி ஒன்றிய அரசிடமிருந்து மேம்பாட்டு நிதியைப் பெறலாம்.

செம்மொழிகள் (Classical languages)

1. கடந்த ஆண்டு, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளுக்கு “செம்மொழி” அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட செம்மொழிகளின் மொத்த எண்ணிக்கையை 11 ஆக உயர்ந்தது. முன்னதாக, 6 மொழிகள் மட்டுமே ‘செம்மொழி' அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன: தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013), மற்றும் ஒடியா (2014) போன்ற மொழிகளாகும்.

(குறிப்பு: அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படாத இரண்டு பாரம்பரிய மொழிகள் பிராகிருதம் மற்றும் பாலி மட்டுமே)

2. செம்மொழிகள் இந்தியாவின் பண்டைய மற்றும் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன. அவை அந்தந்த சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார நிலப்பரப்பின் மொழியியல் சாதனைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் மொழிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

3. அக்டோபர் 2004-ல், ஒன்றிய அரசு "செம்மொழிகள்" என்ற புதிய வகை மொழிகளை உருவாக்க முடிவு செய்தது. அக்டோபர் 12, 2004 அன்று, அதன் உயர்ந்த தொன்மை மற்றும் வளமான இலக்கிய மரபின் காரணமாக "செம்மொழி" (classical) அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய மொழியாக தமிழ் உள்ளது.

Original article:
Share: