நாட்டிற்குள் தனியார் முதலீடு பலவீனமாக இருந்தாலும், நிதி சிக்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு செலவு செய்ய குறைந்த பங்கே இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியா ஆதாயமடைந்து வருகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office (NSO)) படி, இந்தியாவின் பொருளாதாரம் (GDP) 2024-25-ஆம் ஆண்டில் 6.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் கடைசி காலாண்டில் 7.4% வலுவான வளர்ச்சி காணப்பட்டது. குறைவான தரவுகளின் அடிப்படையில், முந்தைய கணிப்புகள் 6.4% மற்றும் 6.5% வளர்ச்சியை மதிப்பிட்டிருந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட GDPயில் எதிர்பாராத அதிகரிப்புகள் குறைந்தபட்சம் இப்போதைக்கு தொடராமல் போகலாம். பொருளாதாரம் அதன் வழக்கமான வளர்ச்சி முறைக்குத் திரும்பி வருவதாகத் தெரிகிறது. COVID-19 தொற்றுநோய்க்கு முன்பு, பத்து ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6.6% ஆக இருந்தது.
2023-24-ஆம் ஆண்டில், வளர்ச்சியின் முதல் மதிப்பீடு 7.3%-ஆக இருந்தது. இது பின்னர் 8.2% ஆகவும் பின்னர் மீண்டும் 9.2% ஆகவும் திருத்தப்பட்டது. இந்தியாவில், தற்காலிக மதிப்பீடுகள் முந்தைய மதிப்பீடுகளைவிட மிகவும் துல்லியமானவை மற்றும் நிலையானவை. 2025 நிதியாண்டிற்கான அடுத்த மதிப்பீடு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும். அதுவரை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், திட்டமிடலுக்கான நிலையான அடித்தளத்தை இந்த தற்போதைய மதிப்பீடுகள் வழங்குகின்றன.
பணவீக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பொருளாதாரம் 2025 நிதியாண்டில் 9.8% வளர்ந்தது. இதன் பொருள் பொருளாதாரத்தின் மொத்த அளவு 2024 நிதியாண்டில் $3.6 டிரில்லியனில் இருந்து $3.91 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
தனியார் செலவினம் 7.2% வளர்ந்தது, முக்கியமாக வலுவான கிராமப்புற தேவை காரணமாக, நகர்ப்புற செலவினம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இந்த செலவின வளர்ச்சி கடந்த காலாண்டில் 6% ஆகக் குறைந்தது. அரசாங்க செலவினமும் குறைவாக இருந்தது, ஆண்டுக்கு 2.3% மட்டுமே வளர்ச்சியடைந்தது மற்றும் கடந்த காலாண்டில் 1.8% சரிந்தது. இருப்பினும், கடந்த காலாண்டில் அரசாங்க முதலீடு கடுமையாக உயர்ந்தது, இது மொத்த முதலீடு பொருளாதாரத்தை விட வேகமாக வளர உதவியது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட மத்திய அரசு திட்டங்களுக்கு அதிகமாக செலவிட்டது.
உற்பத்தி பக்கத்தில், விவசாயம் மற்றும் சேவைகள் சிறப்பாக செயல்பட்டன, ஆனால், உற்பத்தி பலவீனமாக இருந்தது. எனினும் அவை 4.5% மட்டுமே விவசாயத்தை விடக் குறைவாக வளர்ச்சியடைந்தது. முந்தைய ஆண்டு $437.07 பில்லியனாக இருந்த பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட அதே அளவில் 437.41 பில்லியனாக இருந்தது. பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கட்டுமானம், முந்தைய ஆண்டு வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொடர்ந்து 9.4% வளர்ச்சியடைந்தது. இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
2026 நிதியாண்டிற்கான பொருளாதாரக் கண்ணோட்டம், உலகளாவிய கட்டண மாற்றங்கள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கின்றன. இது இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதைப் பொறுத்தது. இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமாக நாட்டிற்குள் செயல்பாடுகளைச் சார்ந்திருந்தாலும், வளர்ந்த நாடுகளுடனான அதன் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகள், உலகளாவிய பிரச்சினைகளால் இன்னும் பாதிக்கப்படலாம் என்பதாகும்.
இந்த ஆண்டு, அமெரிக்காவும் பிற நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்திய பிறகு, உலகளாவிய நிலைமை நிறைய மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் இந்தியாவை இரண்டு வழிகளில் பாதிக்கலாம். முதலாவதாக, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதிக வரிகள் மூலம் நேரடியாக, இது இந்திய பொருட்களை குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 2.8%-லிருந்து 2025 நிதியாண்டில் 1.5% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கான தேவையும் குறையும். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு முழு விளைவும் தெளிவாகத் தெரியும்.
இரண்டாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியா போன்ற பிற பிராந்தியங்களில் மெதுவான வளர்ச்சியால் மறைமுக விளைவுகள் ஏற்படும். அவை இந்திய ஏற்றுமதிகளுக்கான பெரிய சந்தைகளாகும். உலகப் பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 3.3% ஆக இருந்து 2025 நிதியாண்டில் 2.7% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சீனப் பொருட்களுக்கான அமெரிக்காவின் அதிக வரிகள் சீனாவின் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன. அதாவது அதிக உற்பத்தி மற்றும் விலை வீழ்ச்சி போன்றவை காரணமாகும். சீனா இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு அதிக பொருட்களை விற்க முயற்சிக்கலாம். 90 நாட்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய தற்காலிக ஒப்பந்தம் சிறிது நிம்மதியை அளித்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த தொடர்ச்சியான நிச்சயமற்றத் தன்மை தனியார் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் தாமதங்களை ஏற்படுத்துகிறது மற்றும் நிதிச் சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஆபத்துகளை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு சில பாதுகாப்பு உள்ளது. மேலும், சில நல்ல முன்னேற்றங்கள் இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கு உதவக்கூடும்.
இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பு சில வலிமையை அளிக்கிறது. ஏனெனில், சேவைகள் இப்போது மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியை உருவாக்குகின்றன. மேலும், பொருட்களைவிட உலகளாவிய வர்த்தக சிக்கல்களால் குறைவாக பாதிக்கப்படுகின்றன. 2025 நிதியாண்டில் உலகளாவிய பொருட்கள் வர்த்தகம் 0.2% சுருங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எதிர்பார்க்கிறது. ஆனால், சேவை வர்த்தகம் 4% வளரும். சேவை ஏற்றுமதிகளும் மெதுவாக இருந்தாலும், அவை பொருட்கள் ஏற்றுமதியைப் போலக் குறையாது. இது தாக்கத்தை சமப்படுத்த உதவுகிறது.
இந்தியாவின் குறைந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நியாயமான வெளிநாட்டுக் கடன் மற்றும் வலுவான அந்நியச் செலாவணி இருப்பு (தற்போது $686 பில்லியன்) ஆகியவை உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இருப்பினும், அவை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை.
சாதனை அளவிலான கோதுமை பயிர் மற்றும் வலுவான பருப்பு வகைகள் உற்பத்தி, நல்ல பருவமழை முன்னறிவிப்புடன், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் உணவு விலைகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $65 ஆகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரணிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க அதிக சுதந்திரத்தை அளிக்கின்றன. RBI வட்டி விகிதங்களை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, உணவு மற்றும் எரிபொருள் அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றன. எனவே, குறைந்த உணவு பணவீக்கம் அவர்கள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற விஷயங்களுக்கு அதிகமாக செலவிட உதவும். இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி குறைப்புகளிலிருந்து நகரச் செலவுகளும் ஊக்கத்தைப் பெறும். இது கிராமப்புற செலவினங்களையும் ஆதரிக்கும்.
கடந்த ஆண்டைப் போலல்லாமல், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு மூலதனச் செலவினத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில், மூலதனச் செலவு ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 14.3% ஆகும்.
நாட்டில் தனியார் முதலீடு இன்னும் மெதுவாக இருந்தாலும், அரசாங்கத்திடம் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் இந்தியா லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான ஐபோன்களை அமெரிக்காவிற்காக இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஒரு ஆலையைத் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. சீனாவிலிருந்து நிறுவனங்கள் விலகிச் செல்லும்போது இதுபோன்ற முதலீடுகள் மேலும் தொடரக்கூடும். இந்திய நிறுவனங்கள், குறிப்பாக பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நல்ல நிதி நிலையில் உள்ளன. மேலும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளன.
இருப்பினும், நீண்டகால பிரச்சினைகளைச் சரிசெய்து, நாட்டை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற இந்தியா இன்னும் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய அபாயங்களும் உள்ளன.
எழுத்தாளர் CRISIL-ன் தலைமைப் பொருளாதார நிபுணர்.