காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் போக்குவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? - லான்ஸ்லாட் மார்க் பின்டோ, ஸ்ரீபர்ணா சட்டோபாத்யாய்

 இந்தியாவின், சாலை போக்குவரத்தில் கார்பன் டை ஆக்சைடின்  உமிழ்வின் பங்கு என்ன? கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாகன உடைப்பு கொள்கை (scrappage policy) ஏன் பயனுள்ளதாக இல்லை? 


 உலகின் மிகவும் மாசுபட்ட 100 நகரங்களில் இந்தியாவில் 83 நகரங்கள் உள்ளன என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழின் மற்றொரு அறிக்கை, காற்று மாசுபாடு இந்தியாவில் 2.1 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது என்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவாகும். இந்தியாவில் 99%-க்கும் அதிகமான மக்கள் உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) பரிந்துரைக்கப்பட்ட தரத்தை விட மோசமான காற்றை சுவாசிக்கின்றனர். 


 காற்று மாசுபாடு எவ்வளவு கடுமையானது?


இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் 12% சாலை போக்குவரத்திலிருந்து வருகிறது என்று சர்வதேச ஆற்றல் கூட்டமைப்பு  (International Energy Associates) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துகள்கள் (Particulate Matter (PM)) 2.5 உமிழ்வுகளில் பெரும்பகுதி கனரக வாகனங்களிலிருந்து வருகிறது. துகள்கள் 2.5 அதிக மாசுபடுத்திகளைக் கொண்டுள்ளது, அவை நுண்ணிய மற்றும் துகள்கள் 2.5 நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லக்கூடிய சிறிய மாசுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்த மாசுக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து, சுவாசம் மற்றும் இருதய பிரச்சனைகளை ஏற்படுகின்றது. கனரக வாகனங்களும் நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வுக்கு கணிசமாக பங்களிக்கின்றன. இது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் ஆக்சைடு தரை மட்ட ஓசோன் உருவாவதற்கு பங்களிக்கிறது. காற்றின் தரம் மற்றும் வெப்பத்தை மோசமாக்குகிறது, இது நகர்ப்புற காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் மொத்த வாகன துகள்கள் உமிழ்வுகளில் சுமார் 60-70% மற்றும் மொத்த நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வில் சுமார் 40-50% கனரக வாகனங்கள் பொறுப்பு என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 


போக்குவரத்துத் துறை ஆண்டுக்கு 9.1% வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கார்களுக்கான தனியார்  சராசரி எரிபொருள் சிக்கன வரைவு (Corporate Average Fuel Economy (CAFE)) விதிமுறைகளை எரிசக்தி திறன் பணியகம் (Bureau of Energy Efficiency’s (BEE)) உருவாக்கியுள்ளது. இது சரியான நேரத்தில்  எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியாகும். 2027-2032 முதல் தனியார் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு-III மற்றும் 2032-2037 முதல் தனியார் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு-IV ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடு நடைமுறையில் உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்தியா ஓட்டுநர் சுழற்சியிலிருந்து (India Driving Cycle (MIDC)) மார்ச் 31, 2027-க்குள் உலக இலகுரக கடமை வாகன சோதனை நடைமுறைக்கு (World Light Duty Vehicle Testing Procedure (WLTP)) மாறுவதற்கான அர்ப்பணிப்பு சிறந்தது. உலக இலகுரக கடமை வாகன சோதனை நடைமுறை ஒரு வாகனத்தின் உண்மையான எரிபொருள் நுகர்வு மற்றும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் துல்லியமான அளவை வெளிக்காட்டுகிறது. WLTP அடிப்படையில் CAFE III-க்கான முன்மொழியப்பட்ட உமிழ்வு இலக்கு 91.7g கார்பன் டை ஆக்சைடு ஒரு கிலோ மீட்டருக்கு மற்றும் CAFE IV-க்கு, இது 70g CO2/km ஆகும் இது அடையக்கூடியது. கார்பன்-டை-ஆக்சைடு இலக்குகள் புதுமைகளை இயக்குவதற்கும் தூய்மையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் அவசியம். வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்கும் கடுமையான கார்பன்-டை-ஆக்சைடு கட்டுப்பாடு இலக்குகள் முக்கியமானவை. இந்த இலக்குகளை அடைய அதன் செயல்முறை உறுதியானதாக இருக்க வேண்டும். தற்போதைய தனியார்  சராசரி எரிபொருள் சிக்கன விதிமுறைகள் டிரக்குகள், லாரிகள் மற்றும் பிற சரக்கு வாகனங்கள் போன்ற கனரக வாகனங்கள் உமிழ்வை விலக்குகின்றன. 


இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?


கனரக வாகனங்கள் உட்பட பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்ற அரசாங்கம் 2022-ல் வாகன உடைப்பு கொள்கையை (scrappage policy) அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுக்கு மேற்பட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வணிக வாகனங்கள் "உறுதித்தன்மை மற்றும் உமிழ்வு சோதனையில்" தேர்ச்சி பெறவேண்டும் என்று இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் வாகனங்கள் தோல்வியுற்றால், அவை ஆயுட்காலம் முடிவடையும் வாகனங்களாக வகைப்படுத்தப்படும், அவற்றின் பதிவு சான்றிதழை ரத்து செய்யப்படும், மேலும் உடைக்க பரிந்துரைக்கப்படும். இருப்பினும், இரண்டு காரணங்களுக்காக கர்நாடகாவில் இந்த கொள்கை இன்னும் தொடங்கப்படவில்லை: முழு மாநிலத்திற்கும் இரண்டு உடைப்பு கொள்கையை மட்டுமே உள்ளன. பெங்களூரில் உள்ள பெரும்பாலான பழைய வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அல்ல. ஆனால், பழைய BMTC பேருந்துகள், தனியார் வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள். உடைப்பு கொள்கையை ஊக்குவிப்பதற்காக சாலை வரி தள்ளுபடிகள் அல்லது புதிய தனியார் வாகன கொள்முதல் போன்ற சலுகைகளை அறிவித்த 21 மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். ஆனால், இது மாநிலத்தில் காற்று மாசுபாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழிகாட்டுதல்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 


காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதுள்ள அரசாங்கக் கொள்கைகள், அவை உமிழ்வு வரம்புகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வழக்கமான வாகன சோதனை, திறந்த குப்பைகளை எரிப்பதை தடை செய்தல் மற்றும் தொழில்துறை உமிழ்வுகளை சரிபார்த்தல் போன்றவை அதிக கடுமையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கான ஒரே நிலையான முறையாக பொது போக்குவரத்து மட்டுமே உள்ளது. 


லான்சலோட் மார்க் பின்டோ மும்பையின் பி.டி.இந்துஜா மருத்துவமனையில் நுரையீரல் நிபுணர் மற்றும் பொது சுகாதார கொள்கை வக்கீல் ஆவார். ஸ்ரீபர்ணா சட்டோபாத்யாய் பெங்களூர் மணிப்பாலில் உள்ளார்.



Original article:

Share: