பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) இன் பிரிவு 187(2), பிணைக் காவலைக் (police custody) கோருவதற்கான கால அவகாசத்தை விரிவுபடுத்துகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போதைய நிகழ்வு :
'ஆந்திரப் பிரதேச மாநிலம் vs சுதா சுரேஷ் வீர வெங்கட நாக ராஜு' (The State of Andhra Pradesh vs Suda Suresh Veera Venkata Naga Raju) வழக்கில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 187(2), புலனாய்வு முகமை (investigating agency) பிணைக் காவலைக் கோருவதற்கான கால அவகாசத்தை விரிவுபடுத்துகிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் கீழ், பிணைக் காவலில் (police custody) வைக்கும் உரிமையானது, நீதிமன்றக் காவலில் (remand) வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே என்ற கட்டுப்பாடு இல்லாமல், அனுமதிக்கப்பட்ட மொத்தக் காவல் காலத்தின் முதல் 40 அல்லது 60 நாட்களுக்குள், பல்வேறு கட்டங்களாக இந்த பிணை வரம்பை மாற்றப்பட்டுள்ளது (மொத்தக் காலம் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்).
மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 38-ன் கீழ் தங்களுக்கு விருப்பமான வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமை உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு விசாரணை அமர்வின் போதும் வழக்கறிஞர் தொடர்ந்து நேரில் இருக்க வேண்டும் என்பதை அது எந்த வகையிலும் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள வழக்கு
காவல் விசாரணையின்போது நிகழ்ந்த மரணம் தொடர்பான ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டறியப்படாத நிலையிலும், சிசிடிவி (CCTV) அமைப்பின் உண்மையான ஹார்ட் டிஸ்க்குகள் (original hard disks) இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் மற்றும் பாரதிய சாக்ஸிய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA))-ன்கீழ் முக்கியத் தகவல்கள்/பொருட்கள் கண்டறியப்படவிருந்த நிலையிலும், நீதித்துறை நடுவர் எட்டு நாட்கள் பிணைக் காவலை (கோரப்பட்ட 12 நாட்களுக்குப் பதிலாக) அனுமதித்தார். மேலும், பிணைக் காவலில் (police custody) இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு விருப்பமான இரண்டு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளவும் அனுமதித்தார். இந்த இரண்டு வழக்கறிஞர்களில் ஒருவர் மட்டுமே விசாரணையின் எந்தவொரு கட்டத்திலும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டார். "இந்த உத்தரவின்கீழ் வழங்கப்பட்ட பிணைக் காவல் (police custody) காலத்தை எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கக்கூடாது" என்று இந்த உத்தரவு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
மேல்முறையீட்டின் போது, பிணைக் காவலின் (police custody) காலம் மற்றும் விசாரணை முழுவதும் வழக்கறிஞரின் இருப்பு தொடர்பான சில நிபந்தனைகளை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது. எனவே, தடையின்றி விசாரணை நடத்துவதற்கான புலனாய்வு அதிகாரியின் உரிமைகளை இந்த நிபந்தனைகள் நேரடியாகப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் அவற்றை எதிர்த்து முறையிட்டது.
புலனாய்வு முகமை (investigating agency) வெளிப்படுத்திய அச்சங்கள் யதார்த்தமானவை மற்றும் நியாயமானவை என்றும், பிணைக் காவல் (police custody) காலத்தை விரிவுபடுத்தும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் சட்டரீதியான கட்டமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு மாஜிஸ்திரேட்டோ அல்லது நீதிமன்றமோ தனது மேற்பார்வை அதிகாரத்தைச் செயல்படுத்தும்போது, பிணைக் காவலில் வைப்பதற்கான கால அளவிற்கு முழுமையான மற்றும் நீட்டிக்க முடியாத ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்க முடியாது. ஏனெனில், விசாரணை மூலம் இனி என்ன தெரியவரக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாமல், இத்தகைய வரம்பு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 187(2)-ன்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை முற்றிலுமாகத் தடுத்துவிடும்.
எனவே, கீழ்-நீதிமன்றங்கள் (lower courts) வழங்கிய பிணைக் காவல் (police custody) காலத்தையும் சேர்த்து மொத்த பிணைக் காவல் (police custody) காலம் 15 நாட்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றம் மேலும் 7 நாட்கள் கூடுதல் பிணைக் காவல் வழங்க அனுமதித்தது.
பிணைக் காவல் (police remand) தொடர்பான தற்போதைய சட்டம்
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 58-ன் படி, பிடியாணை (warrant) இல்லாமல் காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஒருவரை, பிரிவு 187-ன் கீழ் மாஜிஸ்திரேட் (நீதிபதி) அனுமதித்தாலன்றி, 24 மணி நேரத்திற்கு பிணைக் காவலில் வைக்க முடியாது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 187(2)-ன் படி, விசாரணை அதிகாரிக்கு (investigating officer) 24 மணி நேரத்திற்குள் விசாரணையை முடிக்க முடியாது என்று தோன்றினால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான காரணங்கள் இருப்பதாக நம்பினால், மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க அனுமதிக்கலாம். இந்த பிணைக் காலம் மொத்தம் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், வழக்கின் தன்மையைப் பொறுத்து மொத்த பிணைக் காவல் காலமான 60 அல்லது 90 நாட்களுக்குள், ஆரம்பக்கட்ட 40 அல்லது 60 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த பிணைக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
பிரிவு 187(3)-ன் படி, போதுமான காரணங்கள் இருப்பதாக மாஜிஸ்திரேட் கருதினால், 15 நாட்களுக்குப் பிறகும் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றக் காவலில் (judicial detention) வைக்க அனுமதிக்கலாம். இந்த நீதிமன்றக் காவல் காலம் பின்வருமாறு அமையலாம், (i) மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பான விசாரணையாக இருந்தால் 90 நாட்களுக்கு மேல்; (ii) வேறு ஏதேனும் குற்றம் தொடர்பான விசாரணையாக இருந்தால் 60 நாட்களுக்கு மேல் அனுமதிக்கலாம். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படலாம். இது பரவலாக 'இயல்பு பிணை' (default bail) என்று அழைக்கப்படுகிறது.
'சுதா சுரேஷ்' (Suda Suresh) வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை முன்வைத்தது. அதன்படி, விசாரணையின்போது புதிய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது துப்புக்கள் கிடைக்கப்பெறும் சூழல்களைக் கையாள்வதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே, ஆரம்பக்கட்ட 15 நாட்கள் என்ற வரம்பைத் தாண்டி, விசாரணை காலத்தின் அளவு 40 அல்லது 60 நாட்கள் வரை இந்தக் காவல் நிலை நீட்டிக்கப்படலாம்.
முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 167-ன் படி, குற்றம் சாட்டப்பட்டவரை பிணைக் காவலில் (police custody) வைப்பதற்கான அனுமதி, ஆரம்பக்கட்ட நிலையில் 15 நாட்களுக்கு மேல் வழங்கப்பட முடியாது. இருப்பினும், அந்த முதல் 15 நாள் காலத்திற்குள், மாஜிஸ்திரேட்டினால் நீதிமன்றக் காவலில் (judicial custody) இருந்து பிணைக் காவலிற்கு அல்லது பிணைக் காவலில் இருந்து நீதிமன்றக் காவலிற்கு என காவலின் தன்மையை மாற்றியமைக்க முடிந்தது.
வழக்கறிஞர் முன்னிலை குறித்து
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 38-ன் படி, "ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும்போது, விசாரணை நடைபெறும் முழு நேரத்திலும் இல்லாவிட்டாலும், விசாரணையின் ஒரு பகுதியின்போது அவர் தனக்கு விருப்பமான வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமை பெற்றுள்ளார்." இந்தப் பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 41-D-க்கு இணையானதாகும்.
இந்தப் பிரிவை மேலோட்டமாகப் படித்தாலே, ஒவ்வொரு விசாரணை அமர்வின்போதும் வழக்கறிஞர் தொடர்ந்து நேரில் உடனிருக்க இது அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது. வழக்கறிஞர் எவ்வளவு அருகிலோ அல்லது கேட்கக்கூடிய தொலைவிலோ இருந்தாலும் சரி, முழு நேரமும் உடனிருப்பது கட்டாயமாக்கப்படவில்லை. தொடர்ந்து உடனிருப்பதற்கான நிபந்தனையற்ற உரிமை என்பது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 38-இல் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளை மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எனவே, உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மாற்றியமைத்த உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்கக்கூடிய வகையிலான விசாரணை நடைபெறும் இடத்திற்குள் மட்டுமே வழக்கறிஞர் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், எந்தச் சூழலிலும் விசாரணை நடவடிக்கைகளில் அந்த வழக்கறிஞர் தலையிட அனுமதிக்கப்படக்கூடாது.
காணொளிப் பதிவு மற்றும் சிசிடிவி (CCTV) ஆவணப்படுத்தல் குறித்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் பயணத்தை இடைவிடாமல் காணொளிப் பதிவு செய்வதற்குப் பதிலாக, உண்மையான விசாரணை அமர்வு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருடன் மேற்கொள்ளப்படும் தகவல் கண்டுபிடிப்பு அல்லது சான்றுப் பொருட்கள் மீட்பு நடவடிக்கைகள் (discovery or recovery proceedings) ஆகியவற்றை ஒலி-ஒளிப் பதிவு (audio-visually recorded) செய்வதே சட்டத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.