தற்போதைய செய்தி: இந்தியாவின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க, 14 வயது சிறுமிகளுக்கு நாடு முழுவதும் ஒற்றை வழங்கலளவு (single-dose) மனித பாப்பிலோமா வைரஸ் (single-dose human papillomavirus (HPV)) தடுப்பூசி பிரச்சாரத்தை ஒன்றிய அரசு தொடங்க உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் பெண்களிடையே ஏற்படும் 2-வது வகை புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகும். ஏறக்குறைய 90% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் தொடர்ச்சியான மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகின்றன. இது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இரண்டு வகையான புற்றுநோய்களில் ஒன்றாகும். மற்றொரு புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் ஆகும்.
மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று ஆசனவாய், ஆண்குறி, யோனி, வல்வார் மற்றும் தொண்டை புற்றுநோய்களுயுடன் தொடர்புடையது. தடுப்பூசி மூலம் புற்றுநோய் குறைய வாய்ப்புள்ளது.
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)) என்பது ஒரு பொதுவான, பாலியல்ரீதியாக பரவும் தொற்று ஆகும். வைரஸின் சில வடிவங்கள் மட்டுமே புற்றுநோயாக முன்னேறும். பதின் பருவத்தில் உள்ள பெண்கள் பாலியல்ரீதியாக தொடர்பு இல்லாமல் இருக்கும் காலக்கட்டத்தில் HPV தடுப்பூசி செலுத்தினால், அவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
90 நாட்கள் காலக்கெடு முடிந்தபின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்படாது. இந்த திட்டம் நாட்டின் வழக்கமான தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து, சுகாதார மற்றும் நல மையங்களில் தொடர்ந்து செயல்படும். ஒவ்வொரு ஆண்டும் 14 வயதை அடையும் சிறுமிகள் இந்தத் திட்டத்தின் மூலம் தடுப்பூசியைப் பெற முடியும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.15 கோடி சிறுமிகள் 14 வயதை எட்டுகின்றனர்.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய குறைந்தது 14 வகையான மனித பாப்பிலோமா வைரஸ்கள் (HPV)) உள்ளன. இவற்றில், HPV 16 மற்றும் 18 வகைகள் கட்டி (tumour) உருவாக அதிக வாய்ப்புள்ளவையாக கருதப்படுகின்றன. உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) வழக்குகளில் 70% இதனால்தான் ஏற்படுகிறது. மிகவும் பொதுவான HPV வகைகளில் இரண்டு, நான்கு அல்லது ஒன்பது வகைகள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் தடுப்பூசிகள் தடுப்புகளாக செயல்படுகின்றன.
இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV தடுப்பூசி இருந்தாலும், அது குறைவானதாக இருக்கும். இருப்பினும் இந்த கட்ட தடுப்பூசி முகாமில் அரசு MSD Pharmaceuticals நிறுவனத்தின் Gardasil தடுப்பூசியைப் பயன்படுத்த உள்ளது.
இதற்குக் காரணம், Serum Institute of India உருவாக்கிய Cervavac தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும், அதன் ஒற்றை வழங்கலளவு (single-dose) செயல்திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) ஆய்வு செய்து வருகிறது.
இந்த தடுப்பூசி முகாமிற்காக GAVI Vaccine Alliance இந்தியாவுக்கு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்குகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். இதில் 1 கோடி டோஸ் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. மீதமுள்ளவை இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 1.25 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 75,000 பேர் உயிரிழக்கின்றனர்.
முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் இந்த தடுப்பூசி HPV தொற்றையும், புற்றுநோய்க்குமுன் ஏற்படும் மாற்றங்களையும் குறைக்க உதவுகிறது என்பதை காட்டின. பின்னர் நடந்த ஆய்வுகள், இது நேரடியாக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது என்பதை நிரூபித்தன. முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு உலகளாவிய நோய்த்தடுப்பு மருந்து வழங்குவது, ஆண் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதைக் குறைத்து, பிற புற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.
— இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இது இன்னும் அதிகமாகக் குறைந்தால், மரண எண்ணிக்கை குறையும். அதிக பளுவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பிற புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக நேரத்தை பெற முடியும். உலகின் முதல் HPV தடுப்பூசி 2006-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை 158 நாடுகள் இந்த தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
மிக முக்கியமாக சிக்கிம், பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் முன்னர் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்த முயற்சித்தன. சிக்கிம் 2018-ஆம் ஆண்டில் மாநில அளவிலான பிரச்சாரத்தை முதன்முதலில் தொடங்கியது. இரண்டு டோஸ்களுக்கு 95%-க்கும் அதிகமான பாதுகாப்பை பெற்றது.
2016-ஆம் ஆண்டில், பஞ்சாப் மான்சா மற்றும் பட்டிண்டா மாவட்டங்களில் தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டது. பின்னர், அது அதிக பாதிப்புகளை கொண்ட சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இந்த பாதுகாப்பு 97%-க்கும் அதிகமாக இருந்தது. டெல்லி அதன் தனித்த புற்றுநோய் மருத்துவமனையான டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்திலிருந்து 2016-ஆம் ஆண்டில் HPV தடுப்பூசி பிரச்சாரத்தையும் தொடங்கியது. இருப்பினும், பெண்கள் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால், திட்டம் வேகமாக முன்னேறவில்லை.
Original article : about the Human Papillomavirus and cervical cancers. -Khushboo Kumari, Roshni Yadav