முக்கிய அம்சங்கள்:
— இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மானியங்களை வழங்கத் திட்டமிடும் அரசாங்கங்கள் அவற்றை தங்களின் நிதிநிலைத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
— நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம் பான்சோலி ஆகியோரைக் கொண்ட இந்த அமர்வு, 2024-ஆம் ஆண்டின் மின்சார திருத்த விதிகளில் உள்ள 'விதி 23'-க்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.
— இயற்கைப் பேரிடர் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில், மின்சாரக் கட்டணமானது அதன் உண்மையான உற்பத்திச் செலவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட வருவாய் தேவைக்கும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்று இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
— ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பியபோது, வருமான நிலை அல்லது கட்டணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்து தலைமை நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்தச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்றுக்கொள்வது பொது நலனுக்கு ஏற்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
— கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற வசதியில்லாத மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது; அத்தகைய உதவியை சமூகம் வரவேற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், ஏற்கனவே போதிய வசதி படைத்த செல்வந்தர்களுக்கும் இந்தச் சலுகைகள் சென்றடைய வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மாநில அரசுகள் தங்களது கொள்கை திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
— மக்கள் நலத் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை முடிவு செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் பொறுப்பு என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போதும் இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதோடு, இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
— ஒழுங்குமுறை ஆணையத்திற்காக (Regulatory Commission) ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளின்கீழ் வரும் (Directive Principles of State Policy) பிரிவு 39 (b)-ஐ மேற்கோள்காட்டிய அவர், சமுதாயத்தின் வளங்களின் உரிமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்குச் சிறந்த முறையில் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
— நீதிபதி பாக்சி கூறுகையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் உருவாக்கப்படும் நலத்திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்றார். இருப்பினும், இந்த 32-வது சட்டப்பிரிவு மனுவில் உள்ள உண்மையான கவலை 'திட்டமிட்ட செலவினம்' (Planned Expenditure) மற்றும் 'திட்டமிடப்படாத செலவினம்' (Non-planned Expenditure) பற்றியது. அரசாங்கங்கள் நலத்திட்டங்களை விரும்பினால், கல்விக்கான ஒதுக்கீடு அல்லது வேலையில்லா திண்டாட்ட கால சலுகைகள் போன்றவற்றை முறையான விளக்கங்களுடன் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) தெளிவாகச் சேர்க்க வேண்டும் என்றும் மாறாக, இந்த வழக்கில் காணப்படுவது போன்ற முறையில் அவற்றைச் செயல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா:
— கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது நலத்திட்ட முறையை ரேஷன் கடைகள் மற்றும் பொதுப்பணித் திட்டங்களில் இருந்து மாற்றி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பெண்களுக்கு வருமான உதவி வழங்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் வங்கித் கணக்குகளுக்கே நேரடியாகப் பணம் அனுப்பத் தொடங்கியபோது இந்த மாற்றம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
— இவ்வாறு, இந்தியாவின் நலத்திட்ட முறை அதன் ஆரம்ப காலத்திலிருந்து நீண்டதூரம் பயணித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசு வறுமையை ஒழிப்பதிலும் அடிப்படை பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளான, சமத்துவமின்மையைக் குறைத்தல் (பிரிவு 38) மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் (பிரிவு 41), உணவு விநியோகம், பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் மானிய விலையிலான சேவைகளின் அடிப்படையில் அமைந்த இந்த நலத்திட்ட மாதிரிகளை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.
— பற்றாக்குறைகள் மற்றும் பலவீனமான பொருளாதாரச் சந்தைகளுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)), நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவை அவசியமான கருவிகளாக மாறின.
— காலப்போக்கில், சமூக நலத்திட்டங்கள் இரண்டு தெளிவான வடிவங்களை எடுத்தன. ஆரம்பத்தில், பொருட்களாக வழங்குதல் (In-kind transfers) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன: பொது விநியோகத் திட்டத்தின் (Public Distribution System (PDS)) மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (Pradhan Mantri POSHAN (PM-POSHAN)) சமைத்த உணவுகள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (PMAY (Pradhan Mantri Awas Yojana)) மூலம் வீடுகள் மற்றும் பிரதமரின் விரிவான ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (POSHAN (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment)) ஊட்டச்சத்துக் பெட்டகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. குடும்ப வருமானம் குறையும் காலங்களில், இத்திட்டங்கள் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு நிலையை உறுதி செய்தன.
— ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், பணப்பரிமாற்றங்கள் ஆதார் (Aadhaar), ஜன்-தன் வங்கி கணக்கு (Jan-Dhan), மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) ஆகியவற்றின் மூலமாகவே பின்னாட்களில் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணத்தைச் செலுத்துவதால், குடும்பங்கள் தங்களின் தேவைக்கேற்ப அந்தப் பணத்தைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, PM-KISAN (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டம் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது. அதேபோல் முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியங்கள் பொதுவாக இந்த நேரடிப் பரிமாற்றங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.
— பணம் மற்றும் பொருட்கள்/சேவைகள் ஆகிய இந்த இரண்டு வடிவங்களும் இணைந்து, குடும்பகளோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. அதாவது, மக்களுக்குத் தேவையான நிதி உதவியையும், அதே சமயம் உணவு அல்லது கல்வி போன்ற நேரடி வசதிகளையும் தங்குதடையின்றி வழங்குவதை அரசு உறுதி செய்கிறது.
Original article : What are the financial concerns related to freebies and direct cash transfers? -Khushboo Kumari