கூட்டாட்சிக்கான ஆய்வுக் கட்டுரை: தமிழ்நாடு மற்றும் குரியன் ஜோசப் அறிக்கை.

பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் வழங்குவது பற்றிய விவாதத்தை குரியன் ஜோசப் அறிக்கை ஊக்குவிக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழு, பல ஆண்டுகளாக இந்தியாவில் பரவலாக்கப்பட்ட அதிகாரம் மற்றும் கூட்டாட்சி ஜனநாயகம் பலவீனமடைவதை சுட்டிக்காட்டி, விரிவான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, பல்வேறு துறைகளில் புலமை, அரசியலமைப்பு சபை விவாதங்கள் மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த மூன்று குழுக்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்துள்ளது. அதே, நேரத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் சமீபத்திய நிர்வாகப் நடவடிக்கைகளை குழு விமர்சனம் செய்துள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் இது ஆரோக்கியமானதாக இருக்காது என்றும்  குறிப்பிடுகிறது. மேலும், விரைவான தீர்வுகளை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது. அறிக்கை கூட்டாட்சியின் வீழ்ச்சியை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கிறது. மேலும், ஆபத்தான போக்கை மாற்றியமைக்க மாற்றங்களைக் மேற்கொள்ளுமாறு வலியறுத்தியுள்ளது. இந்திய கூட்டாட்சிக்கு 1991-ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களைப் (economic reforms) போலவே துணிச்சலான கட்டமைப்பு மறுசீரமைப்பு தேவை என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு பிரிவினை மற்றும் சுதேச அரசுகளை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சூழல், அரசியலமைப்பை உருவாக்கியவர்களை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்தது; அடுத்தடுத்த ஆண்டுகளில் சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் இந்த சிந்தனைகளை மேலும் வலுப்படுத்தின. இந்த அறிக்கை மையப்படுத்தலுக்கான வாதங்களை உறுதியாகக் குறைத்து, இந்தியாவின் அளவு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு கூட்டாட்சி தத்துவம் முக்கியமானது என்றும், இந்த கூற்றை புறக்கணிப்பது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது.


அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான  ஒன்றிய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்பின் மூலம் அரசியலமைப்பை  எளிதாகத் திருத்த முடியும். மேலும், இது மையப்படுத்தலின் சுய-நிலையான சுழற்சியை (self-perpetuating cycle) உருவாக்குகிறது. 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது, ​​மாநிலங்கள் தங்கள் பிராந்தியப் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசையே பெரிதும் சார்ந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரு தேசிய மொழி வேண்டும் என்ற கருத்தை ஒன்றிய அரசு வலுவாக முன்னெடுத்து வருகிறது. அதே நேரத்தில், நிர்வாகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ஒன்றிய அரசு ஆளுநர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. மக்களவைத் தொகுதிகளின் வரவிருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை நிர்ணயம், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தேசிய நிர்வாகத்தில் தங்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் மாநிலங்களிடையே கவலையை உருவாக்கி வருகிறது. தேர்தல்களில் ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. அதே நேரத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு, இந்தியாவின் நிதி அமைப்பை மாநில அரசுகளை விட ஒன்றிய அரசுக்கு அதிக நன்மை அளிக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாட்சி அமைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏன் சிறந்தது என்பதை பல்வேறு உண்மைகளுடன் அறிக்கை விரிவாக விளக்குகிறது. இந்த அறிக்கை ஒரு புதிய தேசிய உரையாடலுக்கு (national conversation) அடிப்படையாக அமைய வேண்டும்.

Original article :  ​Treatise for federalism: On Tamil Nadu and the Kurian Joseph report.

Share: