நிதிநிலை அறிக்கை பழமைவாதமானது. இருப்பினும், புதிய யோசனைகளை முயற்சிக்க இது திறந்திருக்கும்.
சமீபகால மக்களவைத் தேர்தலில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் சமர்ப்பித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேர்த்தியான முறையில் வழிகாட்டும் கொள்கையைப் பின்பற்றுகிறது. அரசாங்கம் முழு மெஜாரிட்டியைப் பெறத் தவறியது நிதி ஒழுக்கத்தை புறக்கணிக்க வழிவகுக்கும் என்ற கவலைகள் இருந்தன. இருப்பினும், நிதிநிலை அறிக்கையின் முக்கிய நபர்கள் இது நடக்காது என்று உறுதியளித்தனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு குழுக்களை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வீடு வாங்குபவர்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள குழுக்களும் இதில் அடங்குவர். முக்கிய மாநிலங்களுக்கு தாராளமாக வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட பாதையில் உள்ளது. இது ஒரு சாதகமான முடிவாக உள்ளது.
நிதிப்பற்றாக்குறையானது, நிதியாண்டு-2025 க்கு 4.9 சதவீதமாக இருக்கும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்கப்படுகிறது. இது நிதியாண்டு-2024 இல் இருந்த 5.6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் பெரும் ஈவுத்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் என்பது, நிதிப்பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. இதில், ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கைகளின் எண்கள் தற்போதைய குழுவின் பழமைவாத அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. வருவாய் வரவுகளில் கணிக்கப்பட்ட 14.6 சதவீத வளர்ச்சியானது வரி வசூல் 11 சதவீத வளர்ச்சியால் ஆதரிக்கப்படுகிறது. இது எளிதில் அடையக்கூடிய எண்ணிக்கையாகும். இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இருந்து ₹11.1 லட்சம் கோடிக்கான மூலதனச் செலவு பராமரிக்கப்படுகிறது. இந்த தொகை 17 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இதற்கான, வருவாய் செலவுகள் 6 சதவீதம் மட்டுமே உயரும் என நிதிநிலை அறிக்கையில் (budget) தெரிவிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் மிகவும் கவனமாக செலவழிக்க திட்டமிட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. பொதுவாக நிதிநிலை அறிக்கையை (budget) சமப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த முறை விலக்கப்பட்டுள்ளது. 10.5 சதவிகிதம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) வளர்ச்சி என்ற அனுமானமும் யதார்த்தமாக கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நிதிநிலை அறிக்கை அரசாங்கத்திற்கு அதன் இறையாண்மை மதிப்பீட்டில் நீண்டகாலமாக தேவைப்படும் வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க வலுவான வாதங்களை முன்வைக்கிறது. இது, உலகளாவிய குறியீடுகளில் இந்திய இறையாண்மைப் பத்திரங்கள் சேர்க்கப்பட்டதிலிருந்து தயங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இப்போது முதலீடு செய்வதற்கு மற்றொரு காரணமும் கிடைத்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில், ஒட்டுமொத்த செலவினங்களை விரிவுபடுத்துவதில் சிக்கனமாக இருந்தாலும், பல புதிய திட்டங்களில் அதன் ஒதுக்கீடுகளை குறைவான அளவில் விநியோகிப்பதற்கான சூழ்நிலையை தேர்வு செய்துள்ளது. உதாரணமாக, இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் அவர்களின் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது சரியானது. தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் மேம்பாடு மற்றும் கல்விக்கான மானியக் கடன்கள் நல்ல யோசனைகளாகப் பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோய் காலத்தில் இதேபோன்ற திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, முதல் இரண்டு ஆண்டுகளில் புதிய ஊழியர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund(EPF)) பங்களிப்புகளுக்கான அரசாங்க ஆதரவும் புரிந்துகொள்ளத்தக்கது. இந்தப் புதிய முன்முயற்சிகளுக்கு 2 கோடி முறையான துறை ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்துக்குச் சமமான நேரடி ரொக்கப் பணம் ஏன் தேவைப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கூடுதலாக, பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு ₹84,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வாங்குபவர்களுக்கு புதிய வட்டி மானியம் தேவையற்றதாகத் தெரிகிறது. ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission), PM கிராம் சதக் யோஜனா (PM Gram Sadak Yojana), கிருஷி சிஞ்சாய் யோஜனா (Krishi Sinchai Yojana), மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) போன்ற நிறுவப்பட்ட திட்டங்களின் செலவில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து இது கேள்விகளை எழுப்புகிறது. இந்த அரசாங்கத்திற்கான முன்னுரிமைப் பகுதிகள் கூறப்பட்ட போதிலும், பாதுகாப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வேக்கான ஒதுக்கீடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளன.
பல நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் உள்ளன. அவை, வருவாயை கணிசமான தாக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், வணிகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அல்லது மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? என்பதை அவர்கள் பெரிதும் மேம்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, வெற்றிகரமான அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)) தனிப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) திட்டக் கடன்களுக்கு ₹100 கோடி வரை உத்தரவாதத்தை வழங்குகிறது. கடன் வாங்கியவர் ஏற்கும் உத்தரவாதக் கட்டணத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) அளவை அதிகரிக்க உதவும். பிணைய அடிப்படையிலான MSME கடன் வழங்கும் பழைய மாதிரிகளை புதுப்பிக்க வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. டிஜிட்டல் தடயங்களை (digital footprints) நம்பியிருக்கும் நவீன மாதிரிகளை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த மாற்றம் ஒரு திருப்பு முனையாக இருக்கலாம். ஏஞ்சல் வரியை (angel tax) ரத்து செய்வது புத்தொழில் நிதியில் (start-up funding) பெரும் தடையை நீக்கும். இது அன்னிய நேரடி முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் (Debt Recovery Tribunal (DRT)) கூடுதல் அமர்வுகள் அமைக்கப்படும். இது தீர்க்கப்படாத கடன் மீட்பு வழக்குகளின் நிலுவையைக் குறைக்க உதவும். கடந்தகால மதிப்பீடுகளை மீண்டும் திறப்பதற்கான வரம்பு தற்போது 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக அமைக்கப்பட்டால் தனிப்பட்ட வரி செலுத்துவோர் நிச்சயமாக நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். வருமான வரிச் சட்டம் (Income Tax Act) 1961 ஐ எளிதாக்குவது ஒவ்வொரு வரி செலுத்துவோரின் விருப்பமாகும். நேரடி வரி குறியீடு 2010 (Direct Tax Code 2010) இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.என்பதைக் குறிப்பிட வேண்டும்.
பங்கு வர்த்தகம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வரிகளின் அதிகரிப்பு முதலீட்டாளர்களிடையே பிரபலமாக இல்லாவிட்டாலும், ஊக வர்த்தகத்தைக் குறைக்க உதவும். வெவ்வேறு வகையான சொத்துக்களை (பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கு 12 மாதங்கள் மற்றும் மற்றவர்களுக்கு 24 மாதங்கள்) நீங்கள் வைத்திருக்க வேண்டிய நேரத்தை தரப்படுத்துதல் மற்றும் பல்வேறு சொத்து வகைகளில் (பங்குகள், பத்திரங்கள், சொத்து போன்றவை) 12.5% என்ற நிலையான நீண்ட கால மூலதன ஆதாய வரி விகிதத்தைப் பயன்படுத்துதல். மற்றும் தங்கம்) நிதி முதலீடுகளுக்கு இடையே விஷயங்களை நியாயமானதாக மாற்றும்.
இறுதியாக, அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பகுதிக்கு நிதியளிக்கும் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட் கணிசமாக வரிகளைக் குறைக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. நிலையான விலக்குகளின் அதிகரிப்பு மற்றும் வரி படிமுறைகளில் (slabs) மாற்றங்கள் நேர்மறையானவை என்றாலும், எதிர்பார்க்கப்படும் ₹29,000 கோடி வரி வருவாய் இழப்பு நடுத்தர வர்க்க வருமானத்தில் சிறிய அதிகரிப்பாக மட்டுமே இருக்கும்.