நிதிநிலை அறிக்கை 2024: நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல் -அசோக் ஹிந்துஜா

 நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை அரசாங்கம் தெளிவாக விளக்கியுள்ளது. இந்தத் திட்டம் நிலையான வளர்ச்சி, உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


2024-25 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை, விரிவான விவரத்தை கோடிட்டுக் காட்டியது. ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய ‘அமிர்த காலத்திற்கு’ அடித்தளம் அமைத்துள்ளது. நீண்ட கால வளர்ச்சி இயக்கிகளை ஊக்குவிக்க அரசாங்கம் தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி, உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.


அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்க நிதிநிலை அறிக்கை ஒன்பது முக்கியமான துறைகளில்  கவனம் செலுத்துகிறது. விவசாயம் (agriculture), வேலைவாய்ப்பு (employment), திறன் (skilling), உற்பத்தி, சேவைகள் (manufacturing & services), நகர்ப்புற மேம்பாடு (urban development), உள்கட்டமைப்பு (infrastructure), எரிசக்தி பாதுகாப்பு (energy security), கண்டுபிடிப்பு (innovation) மற்றும் ஆராய்ச்சி (research) ஆகிய துறைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது இந்த முன்னுரிமைகளில் அடங்கும்.


பத்திர பரிவர்த்தனை வரி (securities transaction tax (STT)), கூடுதல் மூலதன ஆதாய வரி (additional capital gains tax), திரும்ப வாங்கும் வரி (buyback taxation), அதிக வருமானம் கொண்ட பிரிவினருக்கான வரிவிதிப்பு (taxation for high income group segment) ஆகியவற்றில் மாற்றம் இல்லை. சந்தை மற்றும் முதலீட்டாளர்களுக்கு (market and investors) சில வரிச் சலுகைகள் உள்ளன. இருப்பினும், ஆதாயங்கள் பெரும்பாலும் சிரமங்களுடன் வருவதால், பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை. முந்தைய வரவு செலவுத் திட்டங்களில், முதலீட்டாளர்களின்  ஈவுத்தொகை மீதான வரிவிதிப்பு (taxing of dividends in the hands of recipients) போன்ற முயற்சிகள் இருந்தன. மற்றொரு முயற்சி நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரி விலக்குகளை நீக்கியது.


வரி விதிப்பின் ஒரு முக்கிய அம்சம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 40% லிருந்து 35% ஆகக் குறைப்பதாகும்.  இது அந்நிய நேரடி முதலீட்டை மேம்படுத்துவதற்கான செயல்முறைகளை எளிதாக்குகிறது, முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. 


விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளில் அடங்கும். காலநிலையை தாங்கக்கூடிய மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை ஆராய்ச்சி செய்து மேம்படுத்துவதன் மூலம் இது செயல்படுத்தப்படும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) செயல்படுத்துவது ஒரு குறிப்பிட்ட இலக்கைக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து விவசாயிகளும் இதன் மூலம் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த காலக்கெடுவிற்குள் அவர்களின் அனைத்து நிலங்களையும் டிஜிட்டல் தரவில் சேர்க்க முயல்கிறது.


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மிகவும் சவாலானது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளை நிதிநிலை அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation (EPFO)) பதிவு செய்வதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைகளும் இதில் அடங்கும். முதல் தலைமுறை ஊழியர்களை அங்கீகரித்தல், ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசின் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.


நிதிநிலை அறிக்கை நடவடிக்கைகளில் திறன் கடன் திட்டம் (Skill Loan Scheme) மற்றும் அதிக அளவு மானிய கல்வி கடன்கள் (subsidised education loans) ஆகியவை அடங்கும்.  கைவினைஞர்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் தொழில்முனைவோர் மற்றும் தெருவோர வியாபாரிகளும் பயனடைகின்றனர். இந்த நடவடிக்கைகள் விவசாயிகளின் வளர்ச்சிக்கும் உதவும். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் ஆகியோரும் பயன்பெறுவார்கள். வளர்ச்சியானது எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும், மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்.


உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளை ஊக்குவிப்பதற்காக நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் உள்ளன. 100 நகரங்களில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய தொழில் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனை, மாநிலங்கள் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தும். நிதிநிலை அறிக்கையில் கப்பல் துறையில் சீர்திருத்தங்களும் அடங்கும். இது ஒரு முக்கியமான கனிம செயல்திட்டத்தைக் கொண்டுள்ளது. முக்கியமான கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மறுசுழற்சியை அதிகரிப்பதை இதன் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, இது வெளிநாடுகளில் முக்கியமான கனிம வள வணிகத்த ஆதரிக்கிறது. இது டிஜிட்டல் மற்றும் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறது. 

 

நகர்ப்புற வளர்ச்சிக்காக, நிதிநிலை அறிக்கையில் பல முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள நகரங்களில் பிரவுன்ஃபீல்ட் (brownfield) தளங்களை மறுவடிவமைப்பு செய்தல், 14 பெரிய நகரங்களில் போக்குவரத்து சார்ந்த திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களில் வீடுகட்டுவதற்க்காக மானியங்கள் வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். 100 பெரிய நகரங்களில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான திட்டங்களுக்கான வங்கி நிதியுதவியும் இதில் அடங்கும். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 வாராந்திர சந்தைகள் அல்லது நடை பாதை உணவகங்களை உருவாக்கவும், பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துக்களுக்கான வரிகளைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கணிசமான முதலீடு மற்றும் நிதி ஆதரவு தேவைப்படுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக இருக்கும் மூலதனச் செலவுக்காக (capital expenditure) ₹11.11 லட்சம் கோடியை இடைக்கால நிதிநிலை அறிக்கை  முன்மொழிந்துள்ளது. 


 வளம் மற்றும் திறமையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் ஆற்றல் மாற்ற திட்டத்திற்க்கான கொள்கை ஆவணத்தை (policy document on appropriate energy transition pathways) உருவாக்க திட்டமிட்டுள்ளது. மின்சார சேமிப்பிற்காக சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க கொள்கைளை முன்மொழிகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுசக்திக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. கூடுதலாக, மேம்பட்ட அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் (Advanced Ultra Super Critical (AUSC)) அனல் மின் நிலையங்களில் (thermal power plants) உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும்.


நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் நிதி மேலாண்மை (fiscal management) ஆகும். 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும். அடுத்த நிதியாண்டில் அதை 4.5% ஆக குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்து நிதி ஒருங்கிணைப்பில்  கவனம் செலுத்துகிறது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை காட்டுகிறது. 


அசோக் ஹிந்துஜா ஹிந்துஜா குழும நிறுவனங்களின் (Hinduja Group of Companies) இந்திய  தலைவராக உள்ளார்.



Original article:

Share: