இந்த ஆண்டுக்கான, வரவுசெலவுத் திட்டம் மீள்தன்மை கொண்ட விவசாயத்திற்கு கவனம் செலுத்துவதுடன், திறன் மேம்பாட்டை வலியுறுத்துகிறது. இது வேலைவாய்ப்பு (employment), உள்ளடக்கம் (inclusivity) மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை (infrastructure development) துரிதப்படுத்த முயல்கிறது. எரிசக்தி பாதுகாப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் இந்த வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை ஒரு கொள்கைத் தொடர்ச்சியாகவே உள்ளது. நாம் உண்மையான வளர்ச்சி விகிதங்களை 7%-க்கு மேல் இலக்காகக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறையான 4.9 சதவிகிதமானது, முன்பு குறிப்பிட்டிருந்ததைபோல் 5.1% ஐ விடக் குறைவாகும். வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை மேலும் 4.5% ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பில் முதலீடுகளை தொடர்ந்து ஆதரித்து வருவதுடன், இதற்காக கிட்டத்தட்ட ₹11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உத்திக்கான முதலீடுகள் மூலம் வளர்ச்சியை செலுத்துகிறது. அதே சமயம், நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக, இந்த வரவு-செலவு திட்டமானது பல முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது. இவற்றில், மீள்தன்மை கொண்ட விவசாயம் (resilient agriculture) மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (promoting skill development), வேலைவாய்ப்பு மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வரவு-செலவு திட்டமானது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. இறுதியாக, இது முற்போக்கான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கிறது. இவை அனைத்தும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பகுதிகள் ஆகும்.
வாகனத் துறையின் (automotive industry) கண்ணோட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் தனித்து நிற்கின்றன.
உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% க்கு சமமான மூலதனச் செலவினங்களுக்காக அரசாங்கம் ₹11 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இந்த பெரிய முதலீடு, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கூடுதலாக, பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரிக்க மாநிலங்களுக்கு ₹1.5 லட்சம் கோடி நீண்ட கால, வட்டியில்லா கடனாக வழங்கப்படும். சாத்தியமான இடைவெளி நிதி (viability gap funding) மற்றும் ஆதரவான கொள்கைகள் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும். இந்த இலக்கு நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் உதவும்.
ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (Production Linked Incentive Scheme (PLI)) 6 மடங்கு அதிகரிப்பு
கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹604 கோடியை விட 2025 நிதியாண்டில் ₹3,500 கோடியாக இருந்த ஆட்டோமொபைல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Automobile Production Linked Incentive Scheme) செலவு 6 மடங்கு அதிகமாகும். இது, ‘சுயசார்பு இந்தியாவை’ (Atmanirbhar Bharat) உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது காட்டுகிறது மற்றும் ‘உலகத்திற்காக இந்தியாவில் உருவாக்குங்கள்’ (Make in India for the World) என்ற பெரிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய மையத்தை உருவாக்குவதற்கான அதன் உத்வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செலவினம் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கான நிதியை உரிமை கோருவதற்கும், இதற்கு தீர்வு செய்வதற்குமான நடைமுறைகளை விரைவில் முடிப்பதற்கு சாத்தியம் உள்ளது. இது அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு (Original Equipment Manufacturer (OEM)) மின்சார வாகன ஊடுருவலைத் தூண்டுதல், உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டல்களை மேம்படுத்துதல் மற்றும் இந்த முயற்சியின் முழுமையான பலன்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FAME-3 திட்டத்துடன் இணைந்து மின்சார வாகனங்களை பெருமளவில் ஏற்றுக்கொள்வதற்கான அடுத்த கட்டத்தை வழங்கும்.
பசுமை ஆற்றல் (green energy) மீது கவனம் செலுத்துதல்
பிரதம மந்திரி சூரிய ஒளி இலவச மின்சார திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojna) 1.28 கோடி பதிவுகள் மற்றும் 14 லட்சம் விண்ணப்பங்களுடன் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை ஆதரிக்கும் வகையில், சூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்கள் (solar cells and panels) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களின் மீதான சுங்க வரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம், சூரிய சக்தி உற்பத்தி செலவைக் குறைக்க உதவும். லித்தியம், கோபால்ட் மற்றும் பிற அரிய கனிமங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு மற்றும் லி-அயன் மின்கலன்கள் (Li-Ion cells) மீதான சலுகை சுங்க வரி விலக்கை மார்ச் 2026 வரை நீட்டிப்பது, ஆற்றலைச் சேமிப்பதற்கான செலவை குறைக்கும். இந்த இலக்கு நடவடிக்கைகள், நாட்டின் காலநிலை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும், பசுமை ஆற்றலை ஏற்றுக்கொள்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகின்றன.
ஒட்டுமொத்தமாக, இந்த நிதிநிலை அறிக்கை ஒரு செயல்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையைத் தூண்டுகிறது. மேலும், எதிர்கால வாய்ப்பைப் பயன்படுத்தி, 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' (Viksit Bharat) உருவாக்கும் அதே வேளையில், சமமான, உள்ளடக்கிய, சமநிலையான முறையில் அதை அடைவதற்கான வலுவான முன்னேற்றங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
எழுத்தாளர் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் குழும தலைமை நிதி அதிகாரி (CFO) ஆவார்.