காலநிலை நிதி வகைப்பாடு (climate finance taxonomy) இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடையவும் பசுமை நடைமுறைகளை நோக்கி மாறவும் உதவும்.
'காலநிலை நிதி வகைப்பாட்டை' (‘climate finance taxonomy’) உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்யும் போது அறிவித்தார். இந்த முயற்சியானது காலநிலை தகவமைத்தல் மற்றும் தணிப்பு முயற்சிகளுக்கான நிதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியா தனது காலநிலை இலக்குகளை அடைவதற்கும், பசுமை மாற்றத்தை நோக்கி நகர்வதற்கும் உதவும்.
காலநிலை நிதி வகைப்பாடு என்றால் என்ன?
காலநிலை நிதி வகைப்பாடு, பொருளாதாரத்தின் பகுதிகளை நிலையான முதலீடுகளாக வகைப்படுத்துகிறது. இது முதலீட்டாளர்களுக்கும் வங்கிகளுக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களை காலநிலை மாற்றத்தை திறம்பட சமாளிக்கும் முதலீடுகளுக்கு செலவிட உதவுகிறது.
கனடா அரசாங்கத்தின் அறிக்கையின்படி, பசுமைப் பத்திரங்கள் (green bonds) போன்ற காலநிலை தொடர்பான நிதிக் கருவிகளை வகைப்படுத்துவதற்கு வகைபிரித்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன. காலநிலை இடர் மேலாண்மை (climate risk management), நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளை நோக்கிய மாற்றங்களுக்கான திட்டமிடல் (net-zero transition planning) மற்றும் அவற்றின் தரப்படுத்தல் நன்மைகள் காரணமாக காலநிலை வெளிப்பாடு ஆகியவற்றிலும் அவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
வகைப்பாடு ஏன் முக்கியமானது?
உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கத்தின் காரணமாக, நாடுகள் நிகர-பூஜ்ஜிய பொருளாதாரத்தை நோக்கி மாற வேண்டும். இதன் பொருள் வளிமண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும் அளவுடன் உற்பத்தி செய்யப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை சமநிலைப்படுத்துவதாகும்.
பொருளாதார நடவடிக்கைகள் அறிவியல் அடிப்படையிலான திட்டங்களைப் பின்பற்றுகின்றனவா என்பதை காலநிலை நிதி வகைப்பாடு தீர்மானிக்க முடியும். அவை காலநிலை நிதியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைப் பற்றி தவறான கூற்றுக்களை உருவாக்கும் பசுமைக் கழுவுதல் (greenwashing) அபாயங்களைக் குறைக்கின்றன.
ஒரு காலநிலை நிதி வகைப்பாடு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக காலநிலை சம்மந்தமான நிதிகளை ஈர்க்க உதவும். தற்போது, இந்தியாவில் பசுமை நிதிகள் நாட்டின் தற்போதைய தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. அவை இந்தியாவிற்கு வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 3% மட்டுமே பங்களிக்கிறது என்று காலநிலை கொள்கை முன்முயற்சியால் வெளியிடப்பட்ட இந்தியாவில் பசுமை நிதியத்தின் நிலப்பரப்பு அறிக்கை 2022 கூறுகிறது.
பசுமை நிதியத்தின் (green finance) மிகக் குறைந்த அளவுக்கான ஒரு காரணம், நிலையான செயல்பாடுகளாகத் தகுதி பெறுவது பற்றிய நிச்சயமற்ற தன்மையாகும். ஒரு வகைப்பாட்டியலை செயல்படுத்துவது இந்த சிக்கலை தீர்க்கும்.
இந்தியாவில் பசுமை முதலீடுகளுக்கான சாத்தியம் என்ன?
சர்வதேச நிதிக் கழகத்தின் (International Finance Corporation (IFC)) அறிக்கையின் படி, 2018 முதல் 2030-வரை $3.1 டிரில்லியன் மதிப்புள்ள முதலீடுகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதிய வாகனங்களின் முழு மின்மயமாக்கலை இந்தியா இலக்காகக் கொண்டிருப்பதால், மின்சார வாகனங்களில் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பு $667 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையும் முதலீடுகளுக்கு உறுதியளிக்கிறது. மொத்தம் முதலீடு $403.7 பில்லியன் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்ற நாடுகளில் காலநிலை நிதி வகைப்பாடுகள் உள்ளதா?
ஆம், பல நாடுகள் தங்கள் வகைப்பாடுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் ஏற்கனவே காலநிலை நிதி வகைப்பாடுகளை உருவாக்கியுள்ளன.
இந்தியாவின் காலநிலை உறுதிப்பாடுகள் என்ன?
இந்தியா 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய (net-zero) பொருளாதாரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2005-ம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டளவில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கரிம உமிழ்வுக்கான தீவிரத்தை 45% குறைக்க திட்டமிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், அதன் மொத்த மின்சாரத்தில் 50% புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வரும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.