மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.9 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையுடன் (fiscal deficit) நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவது இந்த பட்ஜெட்டின் முக்கியமான அம்சமாகும்.
பல தொடர்ச்சியான உலகளாவிய அசாதாரண சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் "பாலைவனத்தில் சோலை" (oasis in the desert) போல் தொடர்ந்து செழித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அனைவரும் 2024-25 மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தினர். வளர்ந்த இந்தியா கனவை (Viksit Bharat dream) நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பற்றி அறிய, 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அனைவரின் பார்வையும் இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்கு 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையுடன் நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவது பட்ஜெட்டில் கூறப்பட்ட அம்சமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. 4.9 சதவீத நிதிப்பற்றாக்குறை, நுண்ணியல் பொருளாதாரதின் (macroeconomic) உறுதித் தன்மையை பராமரிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.
மத்திய பட்ஜெட், உற்பத்திச் செலவுக்கும் நிதி ஒருங்கிணைப்புக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையைப் பேணியுள்ளது. இந்த ஆண்டு ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் பெற்ற கூடுதல் தொகையான 1,23,000 கோடி ஈவுத்தொகையை அது நன்றாகப் பயன்படுத்தியுள்ளது. வரி வசூல் வளர்ச்சிக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கையாகத் தெரிகிறது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை இலக்கு யதார்த்தமானதாகவும், அடையக்கூடியதாகவும் தோன்றுகிறது. மிக முக்கியமாக, நிதிப் பற்றாக்குறையை 2026 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கவும், எதிர்காலத்தில் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் குறைப்பதற்கான வழிகாட்டுதலுடன், நிதி ஒருங்கிணைப்புப் பாதையில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நிகர மற்றும் மொத்த சந்தை கடன் வாங்குதல் 2024-ம் நிதியாண்டின் அளவை விட குறைவாக இருக்கும்.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய குழுக்களின் மீதும் பட்ஜெட் கவனம் செலுத்தியது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒன்பது முன்னுரிமைப் பகுதிகளை இது கோடிட்டுக் காட்டியது.
பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் “சுயசார்பு இந்தியா” (Atmanirbhar Bharat) என்ற கொள்கையில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால், விவசாயப் பிரிவில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவைக் கட்டியெழுப்புவது முன்னுரிமைகளில் ஒன்றாகத் தெரிகிறது. இது கிராமப்புற பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வலுப்படுத்தவும் உதவ வேண்டும். கிராமப்புறங்களில் சாலை இணைப்பில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) திட்டத்தின் கீழ் மூன்று கோடி புதிய வீடுகள் கட்டப்படும், இது கிராமப்புற வளர்ச்சிக்கும் உதவும்.
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் கொள்கை தொடர்ச்சிக்கான உறுதிப்பாட்டை பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதில் நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவை அடங்கும்.
செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் முதலீடு சார்ந்த வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளில், சுதந்திரத்திற்குப் பிறகு அதுவரை கட்டியெழுப்பப்பட்ட உள்கட்டமைப்பைபோல் பல மடங்கு விளைவை உருவாக்கி இந்தியாவை உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற உதவியது. தற்போதைய வளர்ச்சிப் பாதையில், இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் விநியோகப் பகுதியில் (Supply-side) மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வளர்ந்து வரும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புதிய, மேம்பட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. புதிய மற்றும் கூடுதல் வேலைகளை உருவாக்குவதற்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஊக்கத்தொகை வரவேற்கத்தக்கது மற்றும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல் ஆகியவை மறக்கப்படவில்லை. பசுமை ஆற்றல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட மாற்றம் ஆகியவற்றை பட்ஜெட் வலியுறுத்துகிறது.
வரி விதிப்பைப் பொறுத்தவரை, பட்ஜெட் இணக்கம், கட்டமைப்பின் எளிமை மற்றும் அதிகமான மக்களை வரிசெலுத்துவதன் கீழ் கொண்டு வருவதை மேம்படுத்துகிறது. புதிய வரி முறையின் கீழ் வருமான வரியில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன, அடுக்குகள்/விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்பு. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டாலும், பங்குகளின் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியை மாற்றாமல் வைத்திருப்பது நீண்ட கால முதலீடுகளை ஆதரிக்க வேண்டும். நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துகளுக்கான வரி விகிதங்களை சீரமைப்பது முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளை விட இடர் மற்றும் வருவாயின் அடிப்படையில் தேர்வு செய்ய உதவும். அடுத்த ஆறு மாதங்களில் வரி முறையை மேலும் எளிமைப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சுருக்கமாக, மத்திய பட்ஜெட் நிலையான மற்றும் உற்பத்தி செலவினங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஆதரிக்கிறது. இது நிதி ஒழுக்கத்தை பேணுவதையும் வலியுறுத்துகிறது. பட்ஜெட் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இலக்குகளை அடைய, இந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது முக்கியம்.
கட்டுரையின் ஆசிரியர் கோடக் மஹிந்திரா AMC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.