நிதிநிலை அறிக்கையில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புறக்கணிக்கப்படுவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆபத்தானது -அசோக் குலாட்டி

 ஆராய்ச்சியை விட நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தற்போதைய நிதிநிலை அறிக்கையானது  விவசாயத் துறையை வளர்க்கத் தவறிவிட்டது. 


2023-24 ஆம் ஆண்டில், இந்தியப் பொருளாதாரம் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8.2 சதவீதமாகப் பதிவு செய்து, மேலும் பெரும்பாலான கணிப்புகளின்படி 2025-ம் நிதியாண்டில் அது 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும். இருப்பினும், விவசாயத் துறையின் வளர்ச்சி நிதியாண்டு-2023 இல் 4.7 சதவீதத்திலிருந்து நிதியாண்டு-2024 இல் 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் பின்னணியில், வரவு-செலவு திட்டம் விவசாயத்துக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ந்த இந்தியா 2047 இலக்கைப் பின்தொடர்வதற்கான விதிமுறைகளை வழங்கியுள்ளார். விவசாயம் (agriculture), வேலைவாய்ப்பு (employment) மற்றும் திறன் (skilling), மனிதவள மேம்பாடு (human-resource development) மற்றும் சமூக நீதி (social justice), உற்பத்தி (manufacturing) மற்றும் சேவைகள் (services), நகர்ப்புற மேம்பாடு (urban development), எரிசக்தி பாதுகாப்பு (energy security), உள்கட்டமைப்பு (infrastructure), புதுமை (innovation), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development) மற்றும் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் (next-generation reforms) ஆகியவற்றில் உற்பத்தித்திறன் ஆகிய ஒன்பது முக்கிய முன்னுரிமைப் பகுதிகளை அவர் அடையாளம் கண்டுள்ளார். மேலும், இதில் விவசாயம் சார்ந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் கணிசமான ஒதுக்கீட்டின் நம்பிக்கையை எழுப்பியது.  


இதைச் செய்வதற்கான சிறந்த வழி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கவனம் செலுத்துவது ஆகும். வேளாண்-ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (agri-R&D) முதலீடு செய்வதால் கிடைக்கும் வருமானமானது 10 மடங்கு அதிகமாகும். இதன் அடிப்படையில், 1,000 கோடி கூடுதல் முதலீடு என்பது வேளாண்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (agri-GDP) அடிப்படையில் ரூ.10,000 கோடியாக இருக்கும். இத்தகைய முதலீடு விவசாயம் வேகமாக வளர உதவியிருக்கும். இருப்பினும், வரவு-செலவு திட்டத்திற்கான எண்ணிக்கை அடிப்படையில் இந்த உத்தரவாதத்தை வழங்கவில்லை. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (Department of Agricultural Research and Education (DARE)) ரூ.99.4 பில்லியனைப் பெற்றுள்ளது. இது நிதியாண்டு-2024 இல் ரூ.98.8 பில்லியனில் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே அதிகமாகும். இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானதாகும். 


2020-21 ஆம் ஆண்டில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் (agriculture R&D) செலவுகள் ரூ.160 பில்லியனாகவும், இதில் 89 சதவீதம் பொதுத்துறையிலிருந்தும், 11 சதவீதம் தனியார் துறையிலிருந்தும் வந்ததாக ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த எண்கள் தரவின் அளவைப் பற்றிய ஒரு யோசனையை அளிக்கும் அதே வேளையில், விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (Agri-GDP) ஒப்பிடும் சதவீதத்தைக் கருத்தில் கொள்வது முக்கியம். இது வேளாண் ஆராய்ச்சி தீவிரம் (Agriculture Research Intensity (ARI)) என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி தீவிரம் (ARI) 2008-09ல் 0.75 சதவீதமாக உயர்ந்து 2022-23ல் 0.43 சதவீதமாக உள்ளது. இது நிதியாண்டு-2025 இல் மேலும் குறைவதுடன், இந்த பிரிவுக்கான ஒதுக்கீடு உண்மையான அடிப்படையில் குறைந்துவிட்டது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு நல்ல செய்தியாக இல்லை. மேலும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவாது.  


கிராமப்புறப் பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டால், விக்சித் பாரத்@2047 (Viksit Bharat@2047) இன் தொலைநோக்குத் திட்டத்தை அடைய முடியாது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறங்களில் வாழ்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் 45.8 சதவீதத்துடன் உழைக்கும் மக்கள்தொகையில் மிகப்பெரிய பகுதியை விவசாயம் பயன்படுத்துகிறது.

 

வரவு-செலவு திட்டத்தில், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ரூ.1.22 டிரில்லியன் தொகையைப் பெற்றுக்கொண்டது. இந்த நிதியாண்டில் ரூ.1.16 டிரில்லியனில் இருந்து 5 சதவீதம் அதிகமாகும். இந்த சிறிய அதிகரிப்பு பணவீக்கத்தை குறைக்கிறது. மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகத்துக்கான வரவு செலவுத் திட்டம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் 56 பில்லியனில் இருந்து 71 பில்லியனாக அதிகரித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைக்கு இது ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.  


விவசாயம், உணவு மற்றும் கிராமப்புறத் துறைகளுக்கான ஆதரவு முக்கியமாக நலன்சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மானியங்கள் மூலம் கவனம் செலுத்துகிறது. உணவு மற்றும் உர மானியங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஆகியவை முக்கிய கூறுகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் விவசாய அமைச்சகத்தை நேரடியான இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவை விவசாய உணவு-கிராமப்புறத் துறைக்கு உதவுகின்றன. இந்த ஆதரவு விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும். PM-KISAN, கடன் மானியங்கள் மற்றும் PM-Fasal Bima Yojana போன்ற திட்டங்கள் மூலம் விவசாய அமைச்சகம் குறிப்பிடத்தக்க வருமான ஆதரவை வழங்குகிறது.  இந்த நலன் மற்றும் மானிய நடவடிக்கைகள் மூலம் நிதியாண்டு-2025க்கு ரூ.5.52 டிரில்லியன் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நிதியாண்டு-2024க்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.5.8 டிரில்லியனை விட சற்று குறைவாகும். இந்த ஆதரவு மொத்த வரவு-செலவு திட்டத்தில் 11.5 சதவீகிதமான, ரூ.48 டிரில்லியன் ஆகும். இது நிதியாண்டு-2025க்கான ஒன்றிய அரசின் நிகர வரி வருவாயில் 21.4 சதவீகிதத்தைக் குறிக்கிறது.   


உணவு மானியம் நிதியாண்டில் 2.12 டிரில்லியன் ரூபாயில் இருந்து 2.05 டிரில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு இருந்தபோதிலும், மானியம் இன்னும் முக்கியமாக விவசாயிகளை விட நுகர்வோருக்குப் பயனளிக்கிறது. PM-Garib Kalyan Yojana மூலம் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவது அரசியல் கண்ணோட்டத்தில் சரியானதாக இருக்கலாம். இருப்பினும், இவ்வளவு பெரிய மக்களுக்கு இந்த ஆதரவைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய கேள்விகள் உள்ளன. மோடி அரசாங்கத்தின் 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 250 மில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் அறிக்கையில் கூறினார். 


விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, இயற்கை வளங்களைத் தற்செயலாகப் பாதிப்படையச் செய்யும் விவசாயக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய அரசு நம்முடைய கவலைகளைப் பிரதிபலித்துள்ளது. அவை, விவசாய உற்பத்தியை அதிகரித்திருந்தாலும்,  பல சிக்கல்களுக்கு வழிவகுத்தன. மண்வளம் குறைந்து, நிலத்தடி நீர் குறைந்து, நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் மீத்தேன் வெளியேற்றம் அதிகரித்து, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் புரதத்தை விட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவை பொது சுகாதாரத்தை பாதிக்கின்றன. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் விவசாயத்தை தீவிரமாக மாற்ற வேண்டும். இது விவசாயிகளுக்கும், பூமிக்கும் உதவும் விவசாய முறைகளை பின்பற்றுவதாகும். மானியங்களை சரிசெய்வது உட்பட நல்ல கொள்கை உருவாக்கம் விவசாயத்தில் மதிப்பை அதிகரிக்கும். விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இது அடுத்த வரவு-செலவு திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டும். 


குலாட்டி ஒரு பேராசிரியர் மற்றும் தங்கராஜ் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியன் கவுன்சிலின் (ICRIER) ஆலோசகர் ஆவார்.



Original article:

Share: