நிதிநிலை அறிக்கை 2024 : சமூகத் துறையில் (social sector) உள்ள பழைய பிரச்சனைகளுக்கான பழைய தீர்வுகள் -தீபா சின்ஹா

 நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்  சமூகத்துறை (social sector) திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.  


இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டபோதிலும், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சமூகத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளில் முந்தைய ஆண்டுகளை விட எந்த வித்தியாசமும் காட்டப்படவில்லை.  பொருளாதார ஆய்வறிக்கையில் ‘சமூகத் துறை: அதிகாரமளிக்கும் நன்மைகள்’ (Social Sector: Benefits that Empower) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி சமூக மற்றும் நிறுவன முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று இந்த அத்தியாயம் கூறுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி சமூக மற்றும் நிறுவன மேம்பாடுகளுடன் தொடர்புடையது. அரசின் திட்டங்கள் பயனுள்ளவையாகவும், மக்களுக்கு அதிகாரமளிப்பதாகவும், நலனை மேம்படுத்துவதாகவும் உள்ளன. இருப்பினும், பணவீக்கத்தை சரி செய்யும் வகையில்  பட்ஜெட்டில் பல சமூகத் துறை திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றமளிக்கும் ஒதுக்கீடுகள்


பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பெயரளவு ₹5,000 கோடியாகவும், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு ₹3,000 கோடியாக சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்வுகளிலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மதிப்பிடப்பட்ட ‘மீட்புகள்’ (recoveries) கணிசமான அதிகமாக உள்ளன. கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து சுயநிதி பாடப்பிரிவுகளை அதிகளவில் பயன்படுத்துவதையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டை விட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ₹1,500 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. 


கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் (revised estimates) ஒப்பிடும்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கான (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, (MGNREGA)) நிதி ஒதுக்கீடு முந்தயை ஆண்டுகளைப் போல மாறாமல் உள்ளது. MGNREGA என்பது தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் திட்டமாக இருந்தாலும், ஒதுக்கப்பட்ட தொகையானது மாநிலங்கள் அணுகக்கூடிய வரம்பை நிர்ணயிக்கிறது. இந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது. கூடுதலாக, தற்போதைய மக்கள் தொகை அளவை சரி செய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும், உணவு மானியம் சிறிதளவு  அதிகரித்துள்ளது. பொது விநியோக அமைப்பு இன்னும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக உணவு தானியங்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவும் சிறிய திட்டங்கள் அதிக கவனத்தைப் பெறவில்லை. போஷன் திட்டம் (POSHAN scheme) எனப்படும் பள்ளி குழந்தைகளுக்கான  மதிய உணவு திட்டம், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், ₹11,600 கோடியிலிருந்து ₹12,467 கோடியாக ஒதுக்கீடு சிறிதளவு அதிகரித்துள்ளது.  இருப்பினும், இது 2022-23ல் ₹12,681 கோடியாக இருந்த செலவை விடக் குறைவு. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் சக்ஷம் அங்கன்வாடி திட்டத்திற்கு (Saksham Anganwadi scheme), முந்தைய பட்ஜெட்டில் ₹20,554 கோடியாக இருந்த நிலையில், தற்போது ₹21,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிக சம்பளம் (2018 முதல் மாற்றப்படவில்லை ), மதிய உணவு சமைப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட கவுரவ ஊதியம் அல்லது குழந்தைகளுக்கான கூடுதல் ஊட்டச்சத்துக்கான ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை.  


பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana, (PMMVY)) மற்றும் குழந்தைக் காப்பக (க்ரீச்) திட்டங்கள் (creche scheme) போன்ற மகப்பேறு உரிமைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு முந்தைய பட்ஜெட்டில் ₹2,582 கோடியிலிருந்து ₹2,517 கோடியாக குறைந்துள்ளது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவானது தகுதியுள்ள பெண்களில் பாதி பெண்களை திட்டத்தில் இருந்து நீக்குகிறது. மேலும், 2017-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கியதில் இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான ₹5,000 தொகை மாறாமல் உள்ளது. தேசிய சமூக உதவித் (National Social Assistance Programme (NSAP)) திட்டத்திற்கான பட்ஜெட், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்குகிறது. முதியோர், தனியாக வசித்து வரும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு எந்த மாற்றமும் இல்லாமல் முந்தையை ஆண்டுகளை போல ₹9,652 கோடியாக உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பணவீக்கத்தை சரி செய்வதற்கு பயன்படவில்லை. 2009-ஆம் ஆண்டு முதல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ஒன்றிய அரசின் பங்கு ஒரு நபருக்கு ஒரு  மாதத்திற்கு ₹200 ஆகும்.


இந்த வரவு செலவுத் திட்டக் குறைப்புகளை சிறந்த திட்டங்கள் மாற்றியமைத்துவிட்டதாகக் கூறி நியாயப்படுத்த முடியாது. ஓய்வூதியத்திற்கான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) போன்ற பங்களிப்புத் திட்டங்களினால் இப்பொது சில நன்மைகள் ஏற்படுகின்றன. கல்வி மற்றும் சுகாதாரம், தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை நோக்கி நகர்கிறது. சமூக செலவினங்களை அதிக செலவு குறைந்ததாக (‘cost-effectiveness’) மாற்றுவதை  புதிய நலன்புரி அணுகுமுறையின் முக்கிய பகுதியாக பொருளாதார ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை இந்த சேவைகளில் சந்தைக் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களை முழுமையாக எதிர்கொள்ளவில்லை அல்லது மனித வளர்ச்சியின் விளைவுகளை மேம்படுத்துவதன் நீண்டகால பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. முக்கியமான, பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 


வேலைவாய்ப்பு சவால்


மறுபுறம், வேலைவாய்ப்பு சவாலை எதிர்கொள்ளும் தனியார் துறையின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ‘வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பிரதம மந்திரியின் தொகுப்பு’ (Prime Minister’s Package for Employment and Skilling) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் பயிற்சிகள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation (EPFO)) ​​பதிவுகள் மூலம் வேலைகளை முறைப்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், ஒதுக்கப்பட்ட நிதியின் காரணமாக இந்தத் திட்டங்கள் போதிய கவனம் பெறவில்லை. இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட தொகுப்பு ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ₹2 லட்சம் கோடி ஆகும். வழங்கப்படும் நிதியானது பெரும்பாலும் தொழில்துறையின் சூழலை பொறுத்து இருக்கும். கூடுதலாக, தனியார் துறையில் உள்ள நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதியைப் பயன்படுத்தி இந்தத் தொகுப்பிற்குப் பங்களிக்க வேண்டும். மேலும், இந்தத் தொகுப்பிற்கு நிதியளிக்க தனியார் துறையின் நிறுவன சமூகப் பொறுப்பு  நிதியைப் பயன்படுத்த வேண்டும். இதன் விளைவாக, நிறுவனங்கள் பொதுவாக குறைந்தபட்ச சமூக பங்களிப்புகளுக்கு பயன்படுத்தும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதிகள், இப்போது தங்கள் சொந்த ஊதியத்திற்கு மானியமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.  


2024-25 நிதிநிலை அறிக்கையில் சமூகத் துறை 


குறைக்கப்பட்ட தேவை, தேக்கநிலை ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான தீர்வுகளுக்குப் பதிலாக, இந்த அறிவிப்பு விநியோகத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க தனியார் துறையை ஊக்குவிப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட இம்மாதிரியான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தத் அறிவிப்புகள் இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று தற்போதும் உறுதியாகக் கூற இயலாது.



Original article:

Share: