இந்தியாவில் உள்ள நகரங்களில் சுமார் 50 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். நகர்ப்புற மக்கள்தொகை ஆண்டுதோறும் 2% முதல் 2.5% வரை சீராக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்தியாவில் நகரமயமாக்கலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொடர்ச்சியான நகரமயமாக்கலுக்கு நிலையான முதலீடுகள் தேவை. புதிய அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் நகரங்களை வளர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்ற முயல்கிறது . இது நகரங்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல
பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
வீட்டுவசதி பிரச்சனை
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (Urban)) நகர்ப்புறங்களை மேம்படுத்தவதற்காக 2015-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Sections (EWS)) -நடுத்தர வருவாய் (Middle Income Groups (MIG)) பிரிவுகளுக்கு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 85 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நான்கில் ஒரு பங்கு தொகை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றன. இந்தத் திட்டத்தை ரூ. 2.2 லட்சம் கோடி செலவில் நகர்ப்புறங்களை விரிவுப்படுத்த ஒன்றிய அரசு, பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளது. இதில் ரூ.30,171 கோடி நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் படி குறைவான விகிதத்தில் கடன்கள் மற்றும் மானியங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்க்கு எளிதாக கிடைக்கும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். இத்தகைய தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களுடன் கூடிய புதிய வாடகை வீடுகளை உருவாக்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இத்திட்டம், முன்பண உதவியுடன் அரசு-தனியார் கூட்டாண்மையுடன் (public-private partnership (PPP)) உருவாக்கப்பட உள்ளது. ஒன்றிய அரசு 20 % நிதியையும், மீதமுள்ள நிதி மாநில அரசுகள் மூலம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகரங்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பு தேவைகளில் குடிநீர் வழங்கல், சுகாதாரம், சாலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் ஆகியவை அடங்கும். நகரங்களைப் பொறுத்தவரை, புத்துயிராக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (Rejuvenation and Urban Transformation (AMRUT)) ₹8,000 கோடியை வழங்குகிறது. இது மிகவும் கணிசமானத் தொகையாக இல்லை. இருப்பினும் இத்திட்டம் நம்பகத்தன்மை இடைவெளி நிதி திட்டம் (Viability Gap Funding scheme)
மூலம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெரும்பாலான நகரங்கள், பல ஆண்டுகளாக, அரசு-தனியார் கூட்டாண்மை (public-private partnership (PPP)) மாதிரியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
பட்ஜெட் உரையில் உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவினங்களுக்காக ₹11.11 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் பல துறைகளுக்கான மூலதனச் செலவினங்களும் அடங்கும். இந்த முதலீட்டில் பங்கு பெற அனைத்து நகரங்களும் முயற்சி செய்யலாம். மேலும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு ₹1.50 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் இந்த கடனை நகர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.
நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கான சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2023-24 பட்ஜெட்டில், ₹8,000 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 ஆம் ஆண்டில், மீதமுள்ள கடன்களை ஈடுகட்ட இந்தத் தொகை ₹2,400 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நகர்ப்புற டிஜிட்டல் திட்டத்திற்கு (National Urban Digital Mission (NUDM)), இந்த பட்ஜெட்டில் ₹ 1,150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளள்ளது. தேசிய நகர்ப்புற டிஜிட்டல் திட்டம் (National Urban Digital Mission (NUDM)) மூலம் சொத்து மற்றும் வரிப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், புவியியல் தகவல் அமைப்பு (Geographic Information System (GIS)) மூலம் அவற்றை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்க புவியியல் தகவல் அமைப்பு (GIS mapping) உதவியாக இருக்கும்.
வளரும் நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளுக்கு வழக்கமான ‘நிதி ஆயோக் மானியம்’ ₹25,653 கோடி கிடைக்கும். மேலும், புதிய நகரங்களை உருவாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவான போக்குவரத்து சேவையை நகரங்கள் பெறலாம். மேலும், நகரங்களை அவற்றின் புறநகர் பகுதிகள் மற்றும் புதிய நகரங்களுடன் எளிதாக இணைக்க முடியும். நகரங்களுக்கான மின்சார பேருந்து அமைப்புகளுக்கான திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ1,300 கோடி நிதியை வழங்கியுள்ளது. மின்சார பேருந்துகள் எரிபொருள் தேவையற்றது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, இருப்பினும் அவை அதிக செலவுகளைக் கொண்டுள்ளன. இந்த பட்ஜெட் இத்தகைய சவாலை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை (Solid waste management (SWM))
திடக்கழிவு மேலாண்மை என்பது இன்று பெரும்பாலான நகரங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். திடக்கழிவு மேலாண்மைக்கான திட்டங்களை மாநில அரசு மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகப்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளும் இந்த நோக்கத்திற்காக நம்பகத்தன்மை இடைவெளி நிதி திட்டத்தைப் (Viability Gap Funding scheme (VGF)) பயன்படுத்தலாம். இந்தூர், மத்தியப் பிரதேசம் போன்ற நகரங்கள் திடக்கழிவு மேலாண்மையை வணிக ரீதியாக சாத்தியமான திட்டமாக மாற்றுவதற்கான வழியைக் காட்டியுள்ளன.
தெருவோர வியாபாரிகள் சட்டம், 2014 (Street Vendors Act, 2014), நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இது பொது இடங்களில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. தெரு விற்பனைத் திட்டங்களைத் தயாரிக்கவும் சட்டம் அழைப்பு விடுக்கிறது. அதற்கு தெருவோர விற்பனை மண்டலங்களை (street-vending zones) உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தெரு விற்பனையை நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான விருப்பமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 100 வாராந்திர தெரு உணவு மையங்களை (street food hubs) உருவாக்க பட்ஜெட் முன்மொழிந்துள்ளது. மேலும் அனைத்து நகரங்களும் தெரு-விற்பனை திட்டங்களைத் (street-vending plans) தயாரிப்பதற்கும், நகரின் பல்வேறு பகுதிகளில் தெரு விற்பனை மண்டலங்களை உருவாக்குவதற்கும் ஏற்பாடு செய்யலாம்.
திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் பல நிதி மற்றும் நடைமுறை ஏற்பாடுகள் உள்ளன. மாநில அரசாங்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நகராட்சிகள் மூலம் இவை வழிநடத்தப்படும். இவ்வாறு வழிநடத்தப்படும் நகரங்கள் நிலையான வளர்ச்சியை உருவாக்க வேண்டும் . அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டில் இருந்து நிதி ஆதாரங்களை அவற்றை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு குடிமக்களின் பங்களிப்பு ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும்.
சுதிர் கிருஷ்ணா, ஒன்றிய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முன்னாள் செயலாளர்.